2025 திபெத் நிலநடுக்கம்
![]() சீனாவின் திங்ரி மாகாணத்தில் இடிந்து விழுந்த வீடுகள் | |
நிலநடுக்க அளவு | Mw 7.1 Ms 6.8 |
---|---|
ஆழம் | 10.0 km (6.2 mi) |
நிலநடுக்க மையம் | 28°38′20″N 87°21′40″E / 28.639°N 87.361°E |
வகை | சாதாரண பாறை சாய்வுப் பிளப்பு |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | தென்மேற்கு சீனா, நேபாளம் மற்றும் இந்தியா |
அதிகபட்ச செறிவு | வார்ப்புரு:CSIS IX (வன்முறை) |
முன்னதிர்வுகள் | mb 4.1[1] |
பின்னதிர்வுகள் | 515+ வலிமையான அளவு: mb 5.1[2] |
உயிரிழப்புகள் | 126 உயிரிழப்புகள், 188 பேர் காயம் |
2025 திபெத் நிலநடுக்கம் (2025 Tibet earthquake) திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் 2025 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தைக் குறிக்கும்.[3] இந்நிலநடுக்கத்தில் குறைந்தது 126 பேர் உயிரிழந்ததாகவும் 188 பேர் காயம் அடைந்ததாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்தது. திபெத்தில் உள்ள புனித நகரமான சிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள சிகாட்சே மாகாணத்தில் அமைந்துள்ள திங்ரி மாகாணம் இந்நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டது.[4] இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்திலும் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் வட இந்தியாவில் சிறிய சேதம் ஏற்பட்டது. தெற்காசியா முழுவதும் நடுக்கம் உணரப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு சீனாவில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட அதிக உயிரிழப்பும் இதுவாகும்.[5][6]
கண்டத்தட்டு அமைப்பு
[தொகு]யூரேசிய தட்டுடன் இந்தியக் கண்டத் தட்டு மோதியதால் ஏற்பட்ட மேலோடு தடித்தல் காரணமாக இமயமலையை உருவாக்கி திபெத்திய பீடபூமி அதன் உயரத்தை அடைகிறது.[7] பீடபூமிக்கு உள்ளேயே நிகழும் பிளவுகள் மோதல்-நழுவுதல் மற்றும் சாதாரண வழிமுறைகளுடன் தொடர்புடையதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ANSS . U.S. Geological Survey.
- ↑ ANSS . U.S. Geological Survey.
- ↑ "திபெத் நிலநடுக்கம்: 95 பேர் பலி, நேபாளம், இந்தியாவிலும் நில அதிர்வு". BBC News தமிழ். 2025-01-07. Retrieved 2025-01-08.
- ↑ ANSS . U.S. Geological Survey.
- ↑ "Search Earthquake Catalog". U.S. Geological Survey. Retrieved 8 January 2025.
- ↑ Kua, Isabel (7 January 2025). "Quake In China's Tibet Kills 32 With Tremors Felt In Nepal, India". Barron's. Agence France-Presse (Barron's). https://www.barrons.com/news/quake-in-china-s-tibet-kills-32-with-tremors-felt-in-nepal-india-64de145a.
- ↑ Madden-Nadeau, Amber (2014). "Overview of the geology of the Himalayas". Geology for Global Development. https://www.geolsoc.org.uk/~/media/shared/documents/Events/Past%20Meeting%20Resources/Himalaya%2014%20Geology%20of%20the%20Himalayas.pdf. பார்த்த நாள்: 7 January 2025.
.