2025 கனடா நாடாளுமன்றத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பதிவு செய்தோர் | 28,525,638[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| வாக்களித்தோர் | 68.7% ( | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2025 கனடா நாடாளுமன்றத் தேர்தல் (2025 Canadian federal election), கனடாவின் 45வது நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபைக்கு 343 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் ஆகும்.[2] இத்தேர்தல் 28 ஏப்ரல் 2025 அன்று கனடாவில் நடை பெறுகிறது. இத்தேர்தலில் 172 இடங்களில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவுடன் கனடா பிரதம அமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார்.[3]
பின்னணி
[தொகு]கனடா பிரதம அமைச்சர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையை கலைப்பதாக பரிந்துரை செய்ததை ஏற்று கனடா கவர்னர் ஜெனரல் மேரி சிம்சன்ஸ் காமன்ஸ் சபையை 23 மார்ச் 2025 அன்று கலைத்தார்.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்
[தொகு]- கனடா பசுமைக் கட்சி
- கனடா பழமைவாதக் கட்சி
- கனடா புதிய ஜனநாயகக் கட்சி
- கனடா லிபரல் கட்சி
- கனடா மக்கள் கட்சி
- கியூபெக்வா கட்சி
2021 தேர்தலில் பெற்ற இடங்களும், அரசியல் கொள்கைகளும்
[தொகு]| பெயர் | கருத்தியல் | அரசியல் | தலைவர்கள் | 2021 தேர்தல் முடிவு | |||
|---|---|---|---|---|---|---|---|
| பெற்ற வாக்குகள்(%) | வென்ற இடங்கள் | ||||||
| கனடா லிபரல் கட்சி | தாரளவாதம் சமூக தாராளவாதம் |
நடு அரசியல் முதல் நடு-இடது அரசியல் வரை | மார்க் கார்னி | 32.62% |
160 / 338 |
152 / 338 | |
| கனடா பழமைவாதக் கட்சி | பழமைவாதம் சமூகப் பழமைவாதம் பொருளாதார தாரளவாதம் |
நடு-வலது அரசியலிருந்து வலதுசாரி அரசியல் | பியர் பொய்லிவ்ரே | 33.74% |
119 / 338 |
120 / 338 | |
| கியூபெக்வா கட்சி | கியூபெக் தேசியவாதம் கியூபெக் தனி நாடு இயக்கம் சமூக ஜனநாயகம் |
நடு-இடது அரசியல் | யவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட் | 7.64% |
32 / 338 |
33 / 338 | |
| கனடா புதிய ஜனநாயகக் கட்சி | சமூக ஜனநாயகம் | நடு-இடது அரசியல் முதல் இடதுசாரி அரசியல் | ஜெக்மீத் சிங் | 17.82% |
25 / 338 |
24 / 338 | |
| கனடா பசுமைக் கட்சி | பசுமை அரசியல் | எலிசபெத் மேரி & ஜோனாதன் பெட்னோல்ட் | 2.33% |
2 / 338 |
2 / 338 | ||
| கனடா மக்கள் கட்சி | வலதுசாரி அரசியல் கனடிய தேசியவாதம் பழமைவாதம் |
வலது அரசியலிருந்து தீவிர வலதுசாரி அரசியல் | மாக்சிம் பெர்னியர் | 4.94% |
0 / 338 |
0 / 338 | |
| சுயேச்சைகள் | N/A | 0.19% |
0 / 338 |
3 / 338 | |||
| காலியிடம் | N/A | 4 / 338 | |||||
2025 தேர்தல் முடிவுகள்
[தொகு]கனடா நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 343 இடங்களில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 172 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிவுகளின்படி எக்கட்சியும் பெரும்பான்மை இடங்கள் பெறவில்லை.[4] எனவே கனடா லிபரல் கட்சி தலைவரான மார்க் கார்னி தலைமையிலான கூட்டணி அரசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சீக்கியர் மற்றும் காலிஸ்தானிகளின் ஆதரவு பெற்றவரான ஜெக்மீத் சிங்கின் தலைமையிலான கனடா புதிய ஜனநாயகக் கட்சி சென்ற தேர்தலில் 17.82% வாக்குகள் பெற்று 25 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றது. 2025 தேர்தலில் ஜெக்மீத் சிங் தோல்வி அடைந்ததுடன், அவரது கட்சி 2% வாக்குகள் பெற்று, 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.[5]இருப்பினும் இத்தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட 65 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி இந்துகள் மற்றும் சீக்கியர்களில் 22 வெற்றி பெற்றுள்ளனர். அதில் 12 பேர் கனடா லிபரல் கட்சி சார்பிலும்; 10 பேர் கனடா பழமைவாதக் கட்சி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[6]

2025 கனடா நாடாளுமன்றத் தேர்தலில் கனடா அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் பெற்ற வாக்கு சதவீதம் விவரம் பின்வருமாறு:
- கனடா லிபரல் கட்சி - தலைவர் மார்க் கார்னி - வெற்றி பெற்ற இடங்கள் 169 - பெற்ற வாக்குகள் 49%
- கனடா பழமைவாதக் கட்சி - தலைவர் பியரே பொய்லிவ்ரே - வெற்றி பெற்ற இடங்கள் 144 - பெற்ற வாக்குகள் 42%
- கியூபெக்வா கட்சி - தலைவர் ஈவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட் - வெற்றி பெற்ற இடங்கள் 22 - பெற்ற வாக்குகள் 4%
- கனடா புதிய ஜனநாயகக் கட்சி - தலைவர் ஜெக்மீத் சிங் -வெற்றி பெற்ற இடங்கள் 7 - வாக்குகள் .2%
- கனடா பசுமைக் கட்சி - தலைவர்கள் எலிசெபத் மேரி & ஜோனதன் பெட்னீல்ட் - வெற்றி பெற்ற இடங்கள் 1 -வாக்குகள் 0.3%
- சுயேச்சைகள் - 3 இடங்கள்
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Election Night Results – National". Elections Canada. Retrieved April 30, 2025.
- ↑ Canada election 2025: What you need to know
- ↑ Canada elections 2025: The 4 candidates running for Prime Minister
- ↑ The final result: Who won what in 2025 Canada federal election, and why
- ↑ Why Khalistanis are the biggest losers of the 2025 Canadian election
- ↑ Punjab-origin leaders win 22 seats in Canada elections