உள்ளடக்கத்துக்குச் செல்

2025 இயாஃபர் தொடருந்து கடத்தல்

ஆள்கூறுகள்: 29°38′53″N 67°35′3″E / 29.64806°N 67.58417°E / 29.64806; 67.58417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2025 இயாஃபர் தொடருந்து கடத்தல்
2021 ஆம் ஆண்டில் படம்பிடிக்கப்பட்ட அதே இயாஃபர் விரைவு இரயில்
இடம்சிபி, பலூசிசுத்தான், பாக்கித்தான்
ஆள்கூறுகள்29°38′53″N 67°35′3″E / 29.64806°N 67.58417°E / 29.64806; 67.58417
நாள்11 மார்ச் 2025 (2025-03-11)
அண்.1:15 PM (PST)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பொதுமக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள்
தாக்குதல்
வகை
கடத்தல்
ஆயுதம்வெடிபொருள்
இறப்பு(கள்)39-227+ (27 தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட)
காயமடைந்தோர்22+ (இரண்டுக்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட)
தாக்கியோர்பலுசிஸ்தான் விடுதலைப்படை
தாக்கியோரின் எண்ணிக்கை28+

2025 இயாஃபர் தொடருந்து கடத்தல் (2025 Jaffar Express hijacking) என்பது 2025 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் தேதியன்று பாக்கித்தான் நாட்டில் நடந்த கடத்தல் நிகழ்வாகும். பாக்கித்தானின் தென்மேற்கு பலுசிசுத்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து 9 பெட்டிகளில் சுமார் 500 பயணிகளுடன் இயாஃபர் விரைவுத் தொடருந்து, கைபர் பக்துன்வாவில் உள்ள பெசாவருக்கு சென்று கொண்டிருந்த போது இந்நிகழ்வு நடந்தது.[3] இந்தத் தொடருந்து பலுசிசுத்தான் மாகாணம், போலன் மாவட்டத்தின் முசுகாப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பாக்கித்தானிடமிருந்து பலூசிசுத்தானுக்கு விடுதலை கோரும் பலுசிஸ்தான் விடுதலைப்படை என்ற கிளர்ச்சிப்படையினர் இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால், தொடருந்து தடம் புரண்டது. தொடருந்தில் துப்பாக்கிகளுடன் ஏறிய கிளர்ச்சிப்படையினர் பயணித்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளையும் பிணைக் கைதிகளாக பிடித்தனர்.[4][5]

பின்னணி

[தொகு]

பலூசிசுத்தான் மாகாணம், குறைந்தபட்சம் 1947 ஆம் ஆண்டு முதல் பாக்கித்தான் அரசாங்கத்திற்கு எதிராக பலூச்சு பிரிவினைவாதிகள் மற்றும் இசுலாமிய போராளிக் குழுக்களால் கிளர்ச்சிகள் மற்றும் மோதல்களில் ஈடுபட்டுள்ளது.[6][7] இந்தப் பகுதி மிகவும் வறுமை மற்றும் வளர்ச்சியடையாத உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல், இங்குள்ள ஆயுதக் குழுக்கள், பிற மாகாணங்களுக்கு பயனளிக்கும் என்று அவர்கள் நம்பும் பிராந்தியத்தில் ஏற்படும் பெரிய வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Pakistan Train Hijack LIVE: 30 Security Personnel Killed, 214 Still In Captivity; BLA Demands Release Of Baloch Activists" (in en). News18. March 11, 2025 இம் மூலத்தில் இருந்து 11 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250311114414/https://www.news18.com/world/pakistan-train-hijack-live-updates-balochistan-militant-attack-jaffar-express-bla-rescue-operation-liveblog-9257922.html. 
  2. "Race to rescue Jaffar Express hostages in Balochistan" (in en). Dawn. March 11, 2025. https://www.dawn.com/news/1897307/race-to-rescue-jaffar-express-hostages. 
  3. "Pakistan Train Hijack Update: BLA Militants Release Civilians, Keep 214 Military Personnel Hostage Aboard Jaffar Express; 30 Soldiers Killed" (in en). English Jagran. March 11, 2025. https://english.jagran.com/world/pakistan-balochistan-liberation-army-bla-attacks-jaffar-express-over-400-hostages-as-gunfire-erupts-death-toll-updates-peshawar-10223207. 
  4. "பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் கடத்தல்: தீவிரவாதிகளால் 30 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை - முழு விவரம்". Hindu Tamil Thisai. 2025-03-12. Retrieved 2025-03-12.
  5. "Pakistan train hijack live updates: 27 terrorists killed, 155 passengers freed as rescue ops continue". India Today (in ஆங்கிலம்). 2025-03-11. Retrieved 2025-03-12.
  6. Akhtar, Aasim Sajjad (2007). "Balochistan versus Pakistan". Economic and Political Weekly (Economic and Political Weekly) 42 (45/46): 73–79. பன்னாட்டுத் தர தொடர் எண்:00129976. http://www.jstor.org/stable/40276835. பார்த்த நாள்: 11 March 2025. 
  7. Kirmani, Nida (2024). "Resisting erasure: tweeting against enforced disappearances in Balochistan". Dialectical Anthropology 48 (1): 21–37. doi:10.1007/s10624-024-09713-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-4092. 
  8. "Baloch separatists attack traders". BBC News. 27 July 2009. Archived from the original on 17 May 2020. Retrieved 11 March 2025.