உள்ளடக்கத்துக்குச் செல்

2025-2026 ஈரானியப் போராட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2025-2026 ஈரானியப் போராட்டாங்கள்
Part of ஈரான் அரசு மற்றும் பொருளாதாரச் சிக்கலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்
தேதி28 டிசம்பர் 2025 – தற்போது வரை (22 நாட்கள்)
அமைவிடம்
ஈரானின் 31 மாகாணங்களில் உள்ள 180 நகரங்களில் 512 இடங்கள்
காரணம்அரசியல் பிணக்குகள்
  • சர்வாதிகாரம்
  • மனித உரிமை மீறல்கள்
  • அரசியல் ஊழல்

கருத்தியல் பிணக்குகள்

ஈரானியப் பொருளாதாரச் சிக்கல்கள்

  • ஈரானிய ரியால் மதிப்பு வீழ்ச்சி (டிசம்பர் 2025ல் வீழ்ச்சி 42.2%)
  • உணவு & முக்கிய பண்டங்களின் விலைவாசி உயர்வு
  • குடிநீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை
  • ஈரான் மீதான் ஐ. நா & ஐக்கிய அமெரிக்க முதலிய அமைப்புகளின் பொருளாதாரத் தடைகள்
இலக்குகள்
  • இசுலாமியக் குடியரசை தூக்கி எறிதல்[1][2]
  • தவறான பொருளாதார நிர்வாக மேலாண்மையை முடிவுக்கு கொண்டு வருதல்.
    • நாணயப் பரிமாற்ற விகிதங்களை நிலைப்படுத்துதல்
    • பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் கஷ்டங்களுக்குத் தீர்வு காண்பது
  • ஈரான் மீதான உலகளாவிய தடைகளின் முடிவுக்கு கொண்டு வருதல்
முறைகள்
  • தெருமுனைப் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்
  • அரசுக்கு எதிராக கோசமிடுதல்
  • வேலை நிறுத்தப் போராட்டங்கள், கடைகளை மூடுதல்
  • இணையம் மூலம் நடவடிக்கைகள்
  • மாணவர்கள் செயற்பாடுகள்
நிலைநடப்பில் உள்ளது
தரப்புகள்

ஈரானியப் போராட்டக்காரர்கள்

  • பகலவி ஈரான் அரசுக்கு எதிரான போராட்டக்கார்கள்
  • முன்னாள் முடியாட்சிக்கு ஆதரவாளர்கள்
  • மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள்
அரசியல் கட்சிகள்:
  • ஈரானின் தேசிய எதிர்ப்புக் குழு[3]
  • வெளிப்படையான தேர்தலுக்கான ஈரான் தேசியக் குழு [4]
  • ஈரானிய மக்கள் முஜாகிதீன் அமைப்பு[5]வார்ப்புரு:Bsn
ஆதரவாளர்கள்:

ஈரானிய அரசு

வழிநடத்தியோர்

பகலவி வம்ச பட்டத்து இளவரசர் ரேசா பகலவி

எண்ணிக்கை
மில்லியன் கணக்கானோர் (போராட்டக்கார்களின் கூற்று)[12]
ஈரானியக் காவல்துறையினர், IRGC, துணை-இராணுவத்தினர்
800 ஈரான் ஆதரவு பெற்ற ஈராக்கிய தீவிரவாதிகள்[13]
10,000 எதிர் போராட்டக்காரர்கள்[14]
உயிரிழப்புகள்
இறப்பு(கள்)2,571
கைதானோர்16,700
நாடு முழுவதும் இணையதள சேவைகள் துண்டிப்பு

2025-2026 ஈரானியப் போராட்டாங்கள் (2025–2026 Iranian protests) என்பது ஈரான் நாட்டில் டிசம்பர் 28, 2025 அன்று தொடங்கி, ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசின் மீதான பரவலான அதிருப்தி மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஈரானின் பல நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆரம்பத்தில், விண்ணை முட்டும் பணவீக்கம், உயர்ந்து வரும் உணவுப் பொருட்கள் விலை மற்றும் ஈரானிய ரியால் நாணயததின் கடுமையான மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியால் தூண்டப்பட்ட இந்த போராட்டங்கள், விரைவிலேயே தற்போதைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரும் ஒரு பரந்த இயக்கமாக உருவெடுத்துள்ளது.[15][16] தலைநகர் தெரானில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் சந்தை வணிகர்களிடம் இருந்து தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டங்கள், விரைவில் பல்கலைக்கழகங்களுக்கும் பரவி, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்களை ஈர்த்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் "சர்வாதிகாரிக்கு மரணம்" போன்ற அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, தங்கள் குறைகளையும் பரந்த அரசியல் கோரிக்கைகளையும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்கின்றனர்.[17] இந்த இயக்கம், மகுசா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து 2022-2023-ல் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய அமைதியின்மை வெடிப்பாக விரைவாக மாறியுள்ளது.[18][19][20]

இந்த போராட்ட அலைக்கு வேகமாக மோசமடைந்து வரும் ஈரானின் பொருளாதாரச் சூழ்நிலையே காரணமாக இருந்தது. பணவீக்கம் அக்டோபர் 2025-ல் 48.6% ஆகவும், டிசம்பரில் 42.2% ஆகவும் உயர்ந்தது, இது குடும்பங்களின் வரவு-செலவுத் திட்டங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது.[18] டிசம்பர் 29-ஆம் தேதிக்குள், ஒரு அமெரிக்க டாலருக்கு 1.45 மில்லியன் ரியால் என்ற வரலாறு காணாத குறைந்த நிலைக்கு ஈரானிய ரியாலின் மதிப்பு சரிந்தது. இது உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் கடுமையான உயர்வை ஏற்படுத்தியது.[21][18]பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்த பொருளாதார நெருக்கடியானது, இஸ்ரேலுடன் 2025-ல் நடந்த பன்னிரண்டு நாள் போருக்குப் பிறகு மீண்டும் மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் 'ஸ்னாப்பேக்' பொறிமுறை மூலம் ஐ.நா.வால் மீண்டும் விதிக்கப்பட்ட அணுசக்தி தொடர்பான தடைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்பட்டது.[18]

ஆரம்பத்தில் தெகுரானின் வணிக மாவட்டங்களில் குவிந்திருந்த இந்த போராட்டங்கள், இசுபகான், சிராஸ் மற்றும் மஷ்ஹத் போன்ற முக்கிய நகரங்களுக்கும் பரவியது. தெகுரான் நகரத்தின் பெரிய கடை வீதியைச் சுற்றி போராட்டங்கள் மையம்கொண்டது; அங்கு வணிகர்கள் அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துவதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள் காட்டின. ஆர்ப்பாட்டங்களின் அளவு அதிகரித்தபோது, பல நகரங்களில் போராட்டக்காரர்கள் அரசியல் மாற்றத்திற்காக முழக்கமிட்டனர்; இதில் "சுதந்திரம்" கோரியும், அரசாங்கத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இறப்புகள்

[தொகு]

ஈரானிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி, As of 18 சனவரி 2026 முடிய இப்போராட்டத்தில் 2,571 பேர் வரை இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள்து. அவர்களில் பாதுகாப்பு படையினர் 135 பேர் அடங்குவர். [22]

பின்னணி

[தொகு]

ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரத் தடைகளால் ஈரான் தனது கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாத காரணத்தினால், 2024ஆம் ஆண்டு முதல் ஈரானின் பொருளாதாரம் கடுமையான பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் எரிசக்தி பற்றாக்குறை ஆகியவற்றைச் சந்தித்தது. இது தொடர்ச்சியான மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத் தடைகள் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியான் மன்னிப்புக் கோரல்களுக்கு வழிவகுத்தது. ஈரானின் முக்கிய கூட்டாளியான சிரியா அதிபர் பசார் அல்-அசத் ஆட்சியின் வீழ்ச்சி போன்ற உலகளாவிய செல்வாக்கில் ஏற்பட்ட பெரும் சரிவுகளாலும் ஈரான் பாதிக்கப்பட்டிருந்தது.[23] 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில், ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்நியச் செலாவணி விகிதங்களில் ஒரு பெரும் உயர்வைச் சந்தித்தது; அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய ரியாலின் மதிப்பு கடுமையாகச் சரிந்து, ஒரு டாலர் தோராயமாக 1,45,000 ஈரானிய ரியால்களை எட்டியது.[24] கூடுதலாக, நாட்டின் அரசு புள்ளிவிவர மையம் டிசம்பர் 2025 இல் பணவீக்க விகிதம் 42.2% ஆக இருந்ததாகத் தெரிவித்தது. இது நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 1.8% அதிகமாகும். உணவுப் பொருட்களின் விலைகள் 72% உயர்ந்தன. அதே நேரத்தில் சுகாதாரம் மற்றும் மருத்துவப் பொருட்களின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 50% அதிகரித்தன. ஈரான் தவறாக நிர்வகிக்கப்பட்ட ஒரு குடிநீர் நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகிறது. ஈரானியப் புத்தாண்டு தொடங்கும் மார்ச் 21 ஆம் தேதி முதல் அரசாங்கம் வரிகளை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்களில் வெளியான செய்திகள் குடிமக்கள் மத்தியில் மேலும் கவலையைத் தூண்டின. சில போராட்டச் செய்திகள் பொருளாதார நெருக்கடியை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் மீதான விமர்சனத்துடன் தொடர்புபடுத்தின; டிசம்பர் 2025 ஆர்ப்பாட்டங்களின் போது, சில பங்கேற்பாளர்கள் "காசாவும் வேண்டாம், லெபனானும் வேண்டாம், என் உயிர் ஈரானுக்காக" என்று முழக்கமிட்டனர்.[25] ஈரானில் நிலவும் அதிருப்திக்கு அரசியல் ஊழலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் ஈரானிய அரசாங்கத்தை சர்வாதிகாரம் என்றும், உள்நாட்டுத் தேவைகளை விட ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற பதிலி அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

அரசாங்கத்தின் பணவியல் மற்றும் நிதி கொள்கைகள், தவறான பொருளாதார மேலாண்மை, நாள்பட்ட வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் சர்வதேசத் தடைகளின் தொடர்ச்சி ஆகியவையே முக்கியக் காரணிகள் என்று பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இந்த நிலைமைகள் வர்த்தகக் குழுக்களை, குறிப்பாக இறக்குமதியைச் சார்ந்த வணிகங்களை நேரடியாகப் பாதித்தன. கடுமையான அந்நியச் செலாவணி விகித ஏற்ற இறக்கங்கள் பல வணிகர்களால் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவோ, விநியோகங்களைப் பெறவோ அல்லது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடரவோ முடியாத நிலைக்குத் தள்ளியது.[26][27][28] 2025ஆம் ஆண்டு முழுவதும் ஈரானில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்தது. சூன் 2025-ல், ஈரான் இஸ்ரேலுடன் ஒரு ஆயுத மோதலில் ஈடுபட்டது. இந்த மோதலின் போது ஈரானின் அணுசக்தித் திட்டம் குறிவைக்கப்பட்டதுடன், அதன் அணுசக்தி வசதிகள் அமெரிக்காவாலும் தாக்கப்பட்டன.[29]செப்டம்பர் 2025-ல், ஐக்கிய நாடுகள் சபை "ஸ்னாப்பேக்" பொறிமுறையின் மூலம் ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்தது. இதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துக்கள் முடக்கப்பட்டது. ஆயுத பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டன. மேலும் அந்நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் தொடர்பான அபராதங்களும் விதிக்கப்பட்டன. இது சந்தை நிலைத்தன்மை இன்மைக்கு வழிவகுத்தது.

தி கார்டியன் பத்திரிகையின்படி, பொருளாதார நெருக்கடியே போராட்டங்களுக்கு வித்திட்டது. இருப்பினும், அரசாங்க ஊழல் மீதான குறைகளை வெளிப்படுத்தும் விதமாக அவை விரிவடைந்தன.[16] அரசாங்கத்தை அகற்றுமாறு அழைப்பு விடுக்கும் குரல்கள் எழுந்ததாகவும், பேச்சுவார்த்தைக்கான அரசாங்கத்தின் அழைப்புகள் மீது அவநம்பிக்கை நிலவியதாகவும் அது மேலும் செய்தி வெளியிட்டது.

இஸ்ரேல் & அமெரிக்க மீது குற்றச்சாட்டு

[தொகு]

ஈரானில் நடைபெறும் போராட்டங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் உளவு அமைப்புகள் தூண்டியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள்து.[30]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Day four of Iran protests sees rallies spread and regime change calls grow". Iran International (in ஆங்கிலம்). 2026-01-01. Retrieved 2026-01-02.
  2. Parent, Deepa; Christou, William. "'No future for us': disaffected Iranians say it's now or never to topple regime". The Guardian (in ஆங்கிலம்).
  3. "Iran: Uprising in Kazerun and Malekshahi; Regime Forces Open Fire, Causing Casualties". National Council of Resistance of Iran (in அமெரிக்க ஆங்கிலம்). 2026-01-03. Retrieved 2026-01-04.
  4. Teller, Neville (30 June 2025). "Is there a chance for regime change in Iran? - opinion". The Jerusalem Post. https://www.jpost.com/opinion/article-859384. 
  5. "Iran grinds to standstill as protesters take to the streets, crowds chant 'Death to Khamenei'" (in English). NY Post. 31 December 2025. https://nypost.com/2025/12/31/world-news/iran-nears-standstill-as-protestors-charge-governors-office-with-crowds-chanting-death-to-khamenei/. 
  6. https://www.scmp.com/news/world/europe/article/3338638/members-iranian-diaspora-uk-rally-london-support-protesters-iran
  7. "Trump threatens Iran over protest crackdown as deadly unrest flares". Reuters.
  8. "Israel's Mossad tells Iranian protesters 'We are with you'". Al Arabiya English. 31 December 2025.
  9. "Israel's Mossad tells Iranian protesters 'We are with you'". Al Arabiya English. 31 December 2025.
  10. "Iran claims arrest of Mossad agent as protests grow | The Jerusalem Post". The Jerusalem Post | JPost.com (in ஆங்கிலம்). 2026-01-05. Retrieved 2026-01-05.
  11. "بيان جيش رجال الطريقة النقشبندية بتأييد ودعم ثورة الشعوب الإيرانية المباركة لإسقاط نظام ملالي الدجل والشعوذة في طهران – الموقع الرسمي لجيش رجال الطريقة النقشبندية".
  12. "Millions of Iranians take to the streets as protest death toll hits 42". Iran International. 9 January 2026. Retrieved 9 January 2026.
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; auto16 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  14. Christou, William; Parent, Deepa (2026-01-12). "Iran holds pro-government rally as regime seeks to downplay protests" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/global-development/2026/jan/12/iran-protests-crackdown-toll-foreign-minister. 
  15. விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி... வீதிகளில் திரண்ட மக்கள் - ஈரானில் நடப்பது என்ன?
  16. 16.0 16.1 Parent, Deepa; Christou, William (2025-12-31). "'We want the mullahs gone': economic crisis sparks biggest protests in Iran since 2022" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2025/dec/31/we-want-the-mullahs-gone-economic-crisis-sparks-biggest-protests-in-iran-since-2022. 
  17. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :12 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  18. 18.0 18.1 18.2 18.3 "Protests erupt in Iran over currency's plunge to record low". AP News (in ஆங்கிலம்). 29 December 2025. Retrieved 30 December 2025.
  19. Salem, Mostafa (30 December 2025). "Iran's ailing supreme leader resorts to his only playbook as crises mount and protests erupt". CNN (in ஆங்கிலம்). Retrieved 31 December 2025.
  20. Barin, Mohsen (31 December 2025). "Iran's economic crisis, political discontent threaten regime". DW News. Retrieved 31 December 2025.
  21. Bozorgmehr, Najmeh (29 December 2025). "Iran's currency 'turns to ash' as economy spirals". Financial Times. https://www.ft.com/content/7295df7f-5e4b-4fe6-a266-7390c71412f5. 
  22. "Death toll from nationwide protests in Iran spikes to at least 2,000, activists say". AP News. 13 January 2026. https://apnews.com/article/iran-protests-us-israel-war-nuclear-economy-1b2368e0804676d33d6aa0696815a102. 
  23. "Iran's turbulent 2024: Regional losses, economic pains and impending threats". AL-Monitor. 31 December 2024. Retrieved 31 December 2025.
  24. "Collapse of the Iranian rial against the dollar". TRT Persian (in பெர்ஷியன்). Retrieved 29 December 2025.
  25. Iran crisis deepens – protests spread with chants of "death to the dictator". BBC News. 2025. Retrieved 31 December 2025.
  26. "Record-breaking exchange rates and protests by Tehran shopkeepers; what happened". BBC News Persian (in பெர்ஷியன்). 28 December 2025. Retrieved 29 December 2025.
  27. "Strike and protest by Alaeddin Shopping Center merchants in Tehran – DW – 28 December 2025". DW Persian (in பெர்ஷியன்). Retrieved 29 December 2025.
  28. "Single exchange rate policy and money supply control as key inflation measures" (in பெர்ஷியன்). Retrieved 29 December 2025.
  29. Faucon, Benoit (29 December 2025). "Growing Iran Protests Put New Pressure on an Embattled Regime". The Wall Street Journal. https://www.wsj.com/world/middle-east/growing-iran-protests-put-new-pressure-on-an-embattled-regime-279ba067. 
  30. அமெரிக்கா, இஸ்ரேலின் பயங்கரவாத ஏஜெண்ட்களே போராட்டங்களை தூண்டிவிட்டனர்: ஈரான் குற்றச்சாட்டு