2024 பப்புவா நியூ கினியா வெள்ளம்
| நாள் | 18 மார்ச்சு 2024 – 22 மார்ச்சு 2024 |
|---|---|
| அமைவிடம் | பப்புவா நியூ கினி |
| காரணம் | மழை, ஓதம்[1] |
| இறப்புகள் | 23[2][1] |
2024 பப்புவா நியூ கினியா வெள்ளம் (2024 Papua New Guinea floods) பலத்த மழை மற்றும் பெரிய அலைகளால் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் 2024 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி வரை ஏற்பட்ட இவ்வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 23 பேர் கொல்லப்பட்டனர்.[2][1]
பாதிப்புகள்
[தொகு]வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஒரு தாய் மற்றும் அவரது குழந்தை உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். சிம்பு மாகாணத்தில் மூன்று தனித்தனி நிலச்சரிவுகளின் போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடலோரப் பகுதிகளில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. லெசு கவோரா கிராமம் இராட்சத அலைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவுத் தோட்டங்கள் சேதமாகின. நீர் கிணறுகளை மாசுபடுத்தியது. டெல்டாக்களைச் சுற்றியுள்ள ஆறுகள் நிரம்பி வழிந்தன. எங்கா மாகாணமும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.[1][3] அதே மாகாணத்தில் டன் கணக்கில் சேறு வீடுகளைப் புதைத்தது.[2] நாடு முழுவதும் மழை மற்றும் புயல் காலநிலை நிலவியது.[4]
பின்விளைவுகள்
[தொகு]வெள்ளம் உள்ளூர் பொருளாதாரத்தை நாசமாக்கியது. மேலும் பலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்தனர். நிவாரண உதவிக்காக அரசாங்கம் 10,000 பப்புவா நியூ கினியன் கினாக்களை ($2,645) ஒதுக்கியது. 2022 உலக ஆபத்து குறியீட்டின்படி, காலநிலை மாற்றத்தால் மிகவும் ஆபத்தில் சிக்கியுள்ள நாடுகளில் ஒன்றாக பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. ஆபத்து குறியீட்டுப் பட்டியலில் இந்நாடு 16ஆவது இடத்தில் உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Papua New Guinea floods, landslides leave at least 23 dead". 20 March 2024. Retrieved 15 April 2024.
- ↑ 2.0 2.1 2.2 "Papua New Guinea - Landslides and floods (media, PNGMET) (ECHO Daily Flash of 21 March 2024)". 21 March 2024. Retrieved 15 April 2024.
- ↑ 3.0 3.1 "More than 20 dead in Papua New Guinea floods, landslides". 19 March 2024. Retrieved 15 April 2024.
- ↑ "Over 20 dead in Papua New Guinea floods, landslides". Retrieved 15 April 2024.