2024 இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்த உடன்படிக்கை
ஒப்பந்த வகை | போர் நிறுத்த ஒப்பந்தம் |
---|---|
அமைப்பு | 2024 லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பு மற்றும் இஸ்ரேல்-ஹெஸ்புல்லா மோதல் (2023-2024) |
கையெழுத்திட்டது | நவம்பர் 26, 2024 |
நடைமுறைக்கு வந்தது | 27 நவம்பர் 2024GMT | , 02:00
மத்தியஸ்தர்கள் | ஐக்கிய அமெரிக்கா பிரான்சு |
தரப்புகள் | இசுரேல் லெபனான் |
26 நவம்பர் 2024ல் அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகள் மத்தியஸ்தர்களாக இருந்து,.இஸ்ரேல்-லெபனான் இடையே 27 நவம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும்.[1]
8 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேலியப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே தெற்கு லெபனான் பகுதிகளில் போர் ஏற்பட்டது. 1 அக்டோபர் 2024 அன்று இஸ்ரேலியப் படைகள், லெபனானின் தெற்கு எல்லையை கடந்து தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது தாக்குதல்கள் தொடுத்தது.
இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின்படி[2][3],இஸ்ரேல் தனது படைகளை தெற்கு லெபனாலிருந்து வெளியேற வேண்டும், [4][5][6]மற்றும் ஹிஸ்புல்லா படையினர் லித்தானி ஆற்றின் வடக்கு பக்கமாக பின்வாங்க வேண்டும்.[7]மேலும் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் லெபனான் அரசுத் துருப்புகளும் மற்றும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் குழு, போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும்[8][5]. ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.[9]
போர் நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டவைகள்
[தொகு]- ஹிஸ்புல்லாவோ அல்லது லெபனானில் உள்ள வேறு எந்த ஆயுத இயக்கமோ இஸ்ரேலுக்கு எதிராக எந்த தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது.
- தரை, வான் மற்றும் கடல் உட்பட லெபனானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் எந்த தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளாது.
- இஸ்ரேலும் லெபனானும் ஐ. நா. பாதுகாப்பு மன்றத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
- லெபனான் ஆயுதப் படைகள்,இராணுவம் மற்றும் உள் பாதுகாப்புப் படைகள் மட்டுமே தெற்கு லெபனானில் செயல்பட அங்கீகரிக்கப்பட்ட ஆயுதக் குழுக்களாக இருக்கும்.
- லெபனானில் ஆயுதங்களின் விற்பனை, விநியோகம் மற்றும் உற்பத்தி லெபனான் அரசாங்கத்தின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
- ஆயுதங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத அமைப்புகளும், உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ நிலைகளும் அகற்றப்படும். அங்கீகரிக்கப்படாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும்.
- போர் நிறுத்தததை மேற்பார்வை செய்யும் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் இருப்பர்.
- 60 நாட்களுக்குள் இஸ்ரேல் தனது படைகளை படிப்படியாக இஸ்ரேலிய எல்லைக்குள் திரும்பப் பெறும்.
- இந்த காலகட்டத்தில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் லித்தானி ஆற்றின் வடக்கே பின்வாங்குவார்கள். அதே நேரத்தில் லெபனான் எல்லையில் லெபனான் நாட்டின் இராணுவம் மற்றும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைகள் மட்டும் இருப்பர்..
- ஹிஸ்புல்லா அல்லது லெபனானில் உள்ள மற்றொரு அமைப்பு ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் லெபனானைத் தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coote, Darryl; Godfrey, Paul (2024-11-27). "Israel-Hezbollah cease-fire: Displaced Lebanese begin to head home as guns, bombs fall silent". United Press International (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
- ↑ இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?
- ↑ What we know about Israel-Hezbollah ceasefire deal
- ↑ Geller, Adam (2024-11-26). "What to know about the ceasefire deal between Israel and Lebanon's Hezbollah". AP News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
- ↑ 5.0 5.1 Rasmussen, Sune Engel (2024-11-27). "The Impossible Mission to Enforce an Israel-Hezbollah Cease-Fire". The Wall Street Journal. https://www.wsj.com/articles/the-impossible-mission-to-enforce-an-israel-hezbollah-cease-fire-9402a682.
- ↑ Diamond, Jeremy; Edwards, Christian; Qiblawi, Tamara; Yosef, Eugenia (2024-11-26). "Israeli security cabinet approves Lebanon ceasefire deal, after 11th-hour strikes on central Beirut". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
- ↑ Picheta, Rob; Robinson, Lou; Pettersson, Henrik; Warnes, Soph (2024-11-27). "A visual guide to Israel and Hezbollah's ceasefire deal". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
- ↑ "Israel and Hizbullah strike a fragile deal to end their war". The Economist. 2024-11-26. https://www.economist.com/middle-east-and-africa/2024/11/26/israel-and-hizbullah-strike-a-fragile-deal-to-end-their-war.
- ↑ இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?