2023 பெசாவர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு

ஆள்கூறுகள்: 34°00′47″N 71°33′34″E / 34.01306°N 71.55944°E / 34.01306; 71.55944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 பெசாவர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு
2023 Peshawar mosque bombing
கைபர் பக்துன்க்வாவில் கிளர்ச்சி
தாக்குதலுக்குப் பிறகு பள்ளிவாசலின் உள் தோற்றம்
இடம்காவலர் குடியிருப்புப் பகுதி, பெசாவர், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்
ஆள்கூறுகள்34°00′47″N 71°33′34″E / 34.01306°N 71.55944°E / 34.01306; 71.55944
நாள்சனவரி 30, 2023 (2023-01-30)
13:30[1] (பாக்கித்தான் சீர் நேரம்)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
காவல்துறை அலுவலர்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்
இறப்பு(கள்)95
காயமடைந்தோர்220+
தாக்கியோர்தெரியவில்லை

2023 பெசாவர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு (2023 Peshawar mosque bombing) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வாவின் பெசாவரில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் 2023 ஆம் ஆண்டு 30 ஆம் தேதியன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.[2] நண்பகல் சூகர் நேர தொழுகையின் போது தாக்குதல் நடத்தியவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 223 பேர் காயமடைந்தனர்.[3] மேலும் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.[4][5][6][7]

பின்னணி[தொகு]

2004 ஆம் ஆண்டில், வடமேற்கு பாக்கித்தானில் இசுலாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் பாக்கித்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான போராக இசுலாமிய தாக்குதல்கள் தீவிரமடைந்தன. போர் 2017 ஆம் ஆண்டில் குறைந்த அளவிலான மோதலாக தீவிரம் குறைந்தது.[8] வடமேற்கு பாக்கித்தானில் உள்ள கைபர் பக்துன்வாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமான பெசாவரில் பல கிளர்ச்சி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2013, 2015, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பள்ளிவாசல்களில் நடந்த தாக்குதல்களும் இதில் அடங்கும்.[9]

தாக்குதல்[தொகு]

தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசல் உயர் பாதுகாப்பு வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இங்கு மாகாண காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் தலைமையகம் போன்றவையும் உள்ளன.[10] தற்கொலை குண்டு வீசியவர் உள்ளூர் காவல்துறையினரை ஏமாற்றி பல தடுப்புகளையும் கடந்துள்ளார்.[9] தாக்குதல் நடந்த அந்த நேரத்தில் 300 முதல் 400 காவல் துறை அதிகாரிகள் பள்ளிவாசலில் தங்களின் சூகர் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.[11]

பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த குண்டுதாரி தற்கொலை அங்கியைத் தூண்டினார். இதனால் பள்ளிவாசலின் கூரை இடிந்து விழுந்தது.[9] 100 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதைவிட இருமடங்கு அதிகமானோர் காயமடைந்தனர். பலியானவர்களில் 90% காவல்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குற்றவாளி[தொகு]

தற்கொலை குண்டுதாரியின் அடையாளம் தெரியவில்லை.[12]

பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் அமைப்பைச் சேர்ந்த இரண்டு கீழ்மட்ட அதிகாரிகள் அந்த அமைப்பின் சார்பாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.[12][13] உமர் காலித் கொராசானியின் படுகொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையே இத்தாக்குதலுக்கான காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதைத் தொடர்ந்து குழு, அதன் செய்தித் தொடர்பாளர் மூலம் இதை மறுத்தது.[12][13]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pakistan mosque blast: Police targeted in attack that kills 47". BBC News. 30 January 2023.
  2. "பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் பலி 92 ஆக அதிகரிப்பு; தாக்குதலுக்கு பாக். தலிபான்கள் பொறுப்பேற்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
  3. "பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - 28க்கும் மேற்பட்டோர் பலி". BBC News தமிழ். 2023-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
  4. "Blast at mosque in Pakistan". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  5. "46 killed, over 100 injured in Taliban suicide attack at mosque in high-security zone in Pakistan's Peshawar". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/international/world-news/blast-in-mosque-in-pakistans-peshawar-70-injured/articleshow/97439643.cms. 
  6. "Pakistan mosque blast: Police targeted in attack that kills 47". BBC News. 30 January 2023.
  7. Ahmad, Jibran (2023-01-31). "Pakistan mosque bombing death toll rises to 87" (in en). Reuters. https://www.reuters.com/world/asia-pacific/death-toll-pakistan-mosque-blast-rises-83-hospital-spokesperson-2023-01-31/. 
  8. Lieven, Anatol (2017). "Counter-Insurgency in Pakistan: The Role of Legitimacy". Small Wars & Insurgencies 28: 166–190. doi:10.1080/09592318.2016.1266128. 
  9. 9.0 9.1 9.2 Ahmed, Jibran (30 January 2023). "Suicide bombing at mosque in Pakistan kills 59, targeted police". Reuters. https://www.reuters.com/world/asia-pacific/blast-mosque-pakistans-peshawar-70-injured-2023-01-30/. 
  10. "Rescue operation continues after Pakistan blast that killed 92". Al Jazeera. 31 January 2023.
  11. "Pakistan mosque blast: Police targeted in attack that kills 59". BBC News. 30 January 2023.
  12. 12.0 12.1 12.2 Baloch, Shah Meer; Ellis-Petersen, Hannah (2023-01-31). "North-west Pakistan in grip of deadly Taliban resurgence". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
  13. 13.0 13.1 Saifi, Sophia; Mehsud, Saleem; Humayun, Hira (30 January 2023). "Pakistani Taliban claims responsibility for mosque blast that killed more than 40 people". CNN (in ஆங்கிலம்). Archived from the original on 30 January 2023. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.