2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்

← 2018 27 பிப்ரவரி 2023
 
கட்சி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி

 
கட்சி நாகாலாந்து மக்கள் முன்னணி ஐக்கிய ஜனதா தளம்
கூட்டணி - -


நடப்பு முதலமைச்சர்

நைபியு ரியோ
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி



2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் (2023 Nagaland Legislative Assembly), நாகாலாந்து சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட மார்ச் 2023ல் தேர்தல் நடைபெற உள்ளது.[1][2]

பின்னணி[தொகு]

தற்போதைய நாகாலாந்து சட்டமன்றத்தின் பதவிக்காலம் 12 மார்ச் 2023 அன்றுடன் முடிவடைகிறது.[3] முன்னர் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் 2018 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்று நைபியு ரியோ தலைமையில் ஆட்சி அமைத்தது.[4]

தேர்தல் அட்டவணை[தொகு]

நிகழ்வு நாள்
வேட்பு மனு தாக்கல் - துவக்கம் சனவரி 31
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் பிப்ரவரி 7
வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 8
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் பிப்ரவரி 10
தேர்தல் நாள் 27 பிப்ரவரி 2023
வாக்கு எண்ணிக்கை நாள் 2 மார்ச் 2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்றது. ஆளும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 37 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 தொகுதிகளையும்; பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.[5] பாரதிய ஜனதா கட்சி கட்சி கூட்டணியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நைபியு ரியோ தலைமையிலான அமைச்சரவை 7 மார்ச் 2023 பதவியேற்க உள்ளது.[6]

கூட்டணி கட்சி வாக்குகள் தொகுதிகள்
Votes % ± கூடுதல்/குறைவு போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி +/−
வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 3,68,848 32.22 7.02 40 25 7
பாரதிய ஜனதா கட்சி 2,15,336 18.81 3.51 20 12 -
மொத்தம் 5,84,184 51.03 10.53 60 37 7
கூட்டணி இல்லை தேசியவாத காங்கிரசு கட்சி 1,09,467 9.56 8.50 12 7 7
தேசிய மக்கள் கட்சி (இந்தியா) 66,157 5.76 1.14 12 5 3
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 98,971 8.65 8.65 15 2 2
நாகாலாந்து மக்கள் முன்னணி 81,191 7.09 31.71 22 2 24
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) TBD TBD TBD 9 2 -
ஐக்கிய ஜனதா தளம் 37,182 3.25 1.25 7 1 -
இந்திய தேசிய காங்கிரசு 40,650 3.55 1.45 23 0 -
சுயேச்சைகள் TBD TBD TBD 4 3
பிறர் TBD TBD TBD 0 -
நோட்டா 3,508 0.31 0.26
மொத்தம் 100%
செல்லத் தக்க வாக்குகள்
செல்லாத வாக்குகள்
பதிவான வாக்குகள்
புறக்கணிப்புகள்
மொத்த வாக்குகள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Upcoming Elections in India
  2. 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
  3. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
  4. "Neiphiu Rio takes oath as Nagaland chief minister". mint (in ஆங்கிலம்). 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  5. Nagaland Assembly Election Party Wise Result
  6. Neiphiu Rio may take oath as Nagaland CM on March 7