2023 சாவோ பாவுலோ வெள்ளம் மற்றும் நிலச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 சாவோ பாவுலோ வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
SP 55 próximo a Lagoinha (52698194177).jpg
லகோயிங்காவிற்கு அருகிலுள்ள உபாதுபாவில் உள்ள நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
நாள்2023 பிப்ரவரி 18 முதல்
அமைவிடம்சாவோ பாவுலோ, பிரேசில்
காரணம்கன மழை
இறப்புகள்48
காணாமல் போனோர்59

2023 சாவோ பாவுலோ வெள்ளம் மற்றும் நிலச்சரிவு (2023 São Paulo floods and landslides) பிரேசில் நாட்டில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. இந்த இயற்கைப் பேரிடரில் 48 பேர் கொல்லப்பட்டனர். 2023 ஆம் ஆண்டு பிரேசிலியத் திருவிழாவின் விடுமுறை வார இறுதியில், 24 மணி நேரத்தில் பெய்த 682 மிமீ (26.9 அங்குலம்) என்ற சாதனையளவு மழைப்பொழிவால் இப்பேரிடரை சாவோ பாவுலோ மாநிலம் சந்தித்தது. இதன் விளைவாக சாவோ பாவுலோ மாநிலம் முழுவதும் கொடிய வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. கொல்லப்பட்ட 48 பேரில் 45 பேர் சாவோ செபாசுடியோவில் இருந்தனர்.[1]

பின்னணி[தொகு]

சாவோ பாவுலோ மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள் மலைகளால் சூழப்பட்ட கடலோர சமூகங்களில் அமைந்துள்ளன.[2] பிப்ரவரி 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 18-19 தேதிகளில் பிரேசில் நாட்டு கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி ஈரமான கரையோரப் பாய்ச்சலைக் கொண்டுவந்தது. இப்பகுதியில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவுக்கும் இது வழிவகுத்தது. சாவோ பாலோவின் மலைத்தொடர்கள் குறைந்த உயரத்தில் இருந்து அதிக உயரத்திற்கு காற்று நிறையை நகர்த்தி மழையை அதிகரிக்க உதவின.[3] சாவோ செபாசுடியோவிற்கு வெளியே உள்ள பெர்டியோகாவில் ஒரேநாளின் 24 மணி நேரத்தில் மொத்தம் 682 மிமீ (26.9 அங்குலம்) மழைப்பொழிவு ஏற்பட்டது. சாவோ பாவுலோ நகரத்திலும் அதே நேரத்தில் 626 மிமீ (24.6 அங்குலம்) மழை காணப்பட்டது. குவாருசாவில் 395 மிமீ (15.6 அங்குலம்), இல்கபேலாவில் 337 மிமீ (13.3 அங்குலம்), உபாதுபாவில் 335 மிமீ (13.2 அங்குலம்) போன்ற நகரங்களும் இந்நேரத்தில் மழை பொழிவுக்கு உட்பட்ட இதர பகுதிகளாகும்.[4][5] 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று பெர்டியோகாவில் 24 மணிநேரத்தில் பெய்த 530 மிமீ (21 அங்குலம்) மழையே இதுவரையில் அந்நாட்டின் மிகப் பெரிய மழை பொழிவாக இருந்தது.[5] உலகிலேயே அதிக வெப்பமண்டலம் அல்லாத சூறாவளி மழை பொழிவுகளில் ஒன்றாக இது இருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.[3]

மேலும் பிப்ரவரி 21 அன்று பெய்த மழை நிலைமையை மோசமாக்கியது.[6] பிப்ரவரி 22 மற்றும் 23 தேதிகளில் மேலும் மழை பெய்யும் எனவும் உள்ளூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.[7]

தாக்கம்[தொகு]

கனமழை பொழிவால் சாவோ பாவுலோ மாநிலம் முழுவதும் நிலச்சரிவுகளும் மண்சரிவுகளும் ஏற்பட்டன. குறிப்பாக சாவோ செபாசுடியோ நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிப்ரவரி 21 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 44 இறப்புகளை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இவர்களில் 43 பேர் சாவோ செபாசுடியோவையும் மற்றவர் உபாதுபாவையும் சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டது.[6][8] ஆறு பேர் படுகாயமும் மேலும் 23 பேர் காயமும் அடைந்தனர்.[7] மக்கள் பலரைக் காணவில்லை. சாவோ செபாசுடியோவில் குறைந்தது 50 வீடுகளாவது இடிந்து அழிந்தன.[9] குறைந்தபட்சம் 2,496 பேர் இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்தனர் அல்லது வீடற்றவர்களாக மாறினர்.[5] இரியோ-சாண்டோசு நெடுஞ்சாலை, அதை ரியோ டி செனிரோ மாநிலத்துடன் இணைக்கும் பிராந்தியத்தின் முக்கிய சாலை ஏராளமான நிலச்சரிவுகளால் பெரும் சேதத்தை சந்தித்தது.[10] சாண்டோசை பெர்டியோகாவுடன் இணைக்கும் மற்றொரு சாலையும் இடிபாடுகளால் தடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடியரசுத் தலைவர் லூலாவும் ஆளுநர் டார்சியோ டி ஃப்ரீடாசும் பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்[தொகு]

உள்ளூர் அவசரகால மேலாண்மை முகமைகள் விரைவாக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்தன.[8] பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள், சாவோ பாலோ மாநில அரசு ஊழியர்கள், பிரேசிலிய இராணுவம், கூட்டாட்சி காவல்துறை, சாவோ செபாசுடியோவின் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகிய ஆறுநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.[5] இரண்டு வயது குழந்தை ஒன்றும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் சேற்றுக் கடலிலிருந்து மீட்கப்பட்டனர்.[8] பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள், சாவோ பாவுலோவில் உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரக் கருவிகள் உட்பட 7.5 டன் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.[2] நன்கொடைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கொள்ளையடிப்பது போன்ற குற்றச் செயல்களால் சில உதவி முயற்சிகள் தடைபட்டன.[11]

ஆளுநர் டார்சியோ டி ஃப்ரீடாசு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியன்று பாதிப்பிற்குள்ளான ஐந்து நகரங்களுக்கு அவசர நிலையை அறிவித்தார்.[8] சாவோ பாவுலோ நகரத்திற்கு 180 நாள் "பேரழிவு நிலை" என பின்னர் அறிவிக்கப்பட்டது.[12] அன்றைய தினம், பிரேசில் நாட்டின் குடியரசுத்தலைவர் லூயிசு இனாசியோ லூலா டா சில்வா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று சாவோ செபசுதியோ மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்தார். மலையோரங்களில் வசிப்பவர்களை வேறு இடங்களுக்குச் பாதுகாப்பாக செல்லுமாறும் அறிவுறுத்தினார்.[6][2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Death toll from Brazil downpours rises to 46; more rain forecast". Reuters. 21 February 2023. 22 February 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 22 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 2.2 Pollastri, Tatiana; Hughes, Eléonore (21 February 2023). "Brazil deluge toll hits 44 as search continues for missing". Stars and Stripes. https://www.stripes.com/theaters/americas/2023-02-21/brazil-flood-toll-9209106.html. பார்த்த நாள்: 21 February 2023. 
 3. 3.0 3.1 Nachtigall, Luiz F. (19 February 2023). "Chuva de quase 700 mm inunda Litoral de São Paulo e vai sequir". MetSul Meteorologia (Portuguese). 20 February 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 February 2023 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 4. Davies, Richard (20 February 2023). "Brazil – 680mm of Rain in 24 Hours Triggers Floods and Landslides in São Paulo, Dozens Killed". Flood List. 20 February 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 5.2 5.3 Davies, Richard (21 February 2023). "Brazil – Death Toll Rises in Sao Paulo Floods and Landslides". Flood List. 22 February 2023 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 6.2 "Death toll from flooding in Brazil rises to 44". Al Jazeera. 21 February 2023. https://www.aljazeera.com/news/2023/2/21/death-toll-from-flooding-in-brazil-rises-to-44. பார்த்த நாள்: 21 February 2023. 
 7. 7.0 7.1 "Brazil – Floods and landslides, update (Government of Sao Paulo, INMET, CEMADEN) (ECHO Daily Flash of 21 February 2023)". ReliefWeb. European Commission's Directorate-General for European Civil Protection and Humanitarian Aid Operations. 21 February 2023. 21 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
 8. 8.0 8.1 8.2 8.3 "Floods, landslides kill dozens in Brazil's Sao Paulo state". Al Jazeera. 20 February 2023. https://www.aljazeera.com/news/2023/2/20/floods-landslides-kill-dozens-in-brazils-sao-paulo-state. பார்த்த நாள்: 21 February 2023. 
 9. "Brazil – Floods and landslides (INMET, CEMADEN, media) (ECHO Daily Flash of 20 February 2023)". ReliefWeb. European Commission's Directorate-General for European Civil Protection and Humanitarian Aid Operations. 20 February 2023. 21 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Death toll from flooding in Brazil rises, Lula visits disaster-hit region". France24. 21 February 2023. https://www.france24.com/en/americas/20230220-death-toll-from-flooding-in-brazil-rises-lula-visits-disaster-hit-region. பார்த்த நாள்: 21 February 2023. 
 11. "Brazil floods: death toll rises to 48 as landslides and looters prevent aid reaching survivors" (in en-GB). The Guardian. 23 February 2023. https://www.theguardian.com/world/2023/feb/23/brazil-floods-death-toll-flooding-landslides-looters-sao-paulo-state. 
 12. "Deadly rains and landslides batter Brazil's São Paulo during carnival festivities". CNN. 21 February 2023. https://www.cnn.com/videos/world/2023/02/20/brazil-sao-paulo-floods-landslides-cprog-lon-orig-mrg.cnn. பார்த்த நாள்: 21 February 2023. 

புற இணைப்புகள்[தொகு]