உள்ளடக்கத்துக்குச் செல்

2022 யோகா நாள் கலவரம்

ஆள்கூறுகள்: 04°10′30.4″N 73°30′39.7″E / 4.175111°N 73.511028°E / 4.175111; 73.511028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 யோகா தினக் கலவரம்
2022 Maldives's International Yoga Day Violence
இடம்மாலே, மாலைத்தீவுகள்
ஆள்கூறுகள்04°10′30.4″N 73°30′39.7″E / 4.175111°N 73.511028°E / 4.175111; 73.511028
நாள்21 சூன் 2022
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பன்னாட்டு யோகா நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 150 பங்கேற்பாளர்கள் (இந்திய, ஐக்கிய இராச்சிய , ஐக்கிய நாடுகள் அவை, வங்காளதேச துதர்கள் உட்பட)
இறப்பு(கள்)இல்லை
காயமடைந்தோர்இல்லை
நோக்கம்மத வழிபாட்டிற்கு எதிராக .

2022 யோகா நாள் கலவரம் (2022 yoga day riot) மாலத்தீவில் பன்னாட்டு யோகா நாளைக் கொண்டாடும் நிகழ்வில் நிகழ்ந்தது. தூதர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 150 பங்கேற்பாளர்கள் மாலே நகரில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்தில் இந்நிகழ்வுக்காகக் கூடியிருந்தனர். ஒரு கூட்டம் அரங்கில் புகுந்து பங்கேற்பாளர்களைத் தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியது.[1][2] காவல்துறை கலவரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொண்டது. பின்னர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அந்தப் பகுதியைப் பாதுகாக்கவும் மிளகுத்தூள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது.[3]

போராட்டக்காரர்களில் பாக்கித்தான் மற்றும் சீனா ஆதரவு இசுலாமிய எதிர்ப்புக் கட்சி உறுப்பினர்களும் காணப்பட்டதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற ஒலி அமைப்பு கருவிகள் மற்றும் வெள்ளை ஆப்கானித்தானியக் கொடிகள் ஆகியவையும் மாலத்தீவின் முற்போக்குக் கட்சியால் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. [4]

"இது தீவிரமான கவலைக்குரிய செய்தியாகக் கருதப்படுகிறது, மேலும் பொறுப்பானவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று தற்போதைய மாலத்தீவு சனாதிபதி இப்ராகிம் முகமது சோலிக்கு கூறியுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலவரம்!! பரபரப்பு!!". www.dinamaalai.com. 2022-06-21. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
  2. "யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்; மாலத்தீவில் அத்துமீறல் - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
  3. https://www.reuters.com/world/asia-pacific/protesters-attack-yoga-day-event-maldives-2022-06-21/ வார்ப்புரு:Bare URL inline
  4. https://raajje.mv/119532
  5. https://twitter.com/ibusolih/status/1539117697157713921?s=20&t=HHQS0pAb9qjXHJHQ4-qcZA வார்ப்புரு:Bare URL inline
"https://ta.wikipedia.org/w/index.php?title=2022_யோகா_நாள்_கலவரம்&oldid=3497606" இலிருந்து மீள்விக்கப்பட்டது