2022 தில்லி மாநகராட்சி தேர்தல்
![]() | |||||||||||||
| |||||||||||||
| |||||||||||||
![]() | |||||||||||||
![]() | |||||||||||||
|
தில்லி மாநகராட்சி தேர்தல், தில்லி மாநகராட்சியின் 250 வார்டு உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலம் வாக்காளர்கள் தேர்வு செய்ய 4 டிசம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2022 நடைபெற்றது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 18 மே 2022 அன்று தில்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றிணைத்து தில்லி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் இத்தேர்தலே தில்லி மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வென்று, தில்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது.
பின்னணி
[தொகு]தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பதவிக்காலம் 18 மே 2022 அன்றுடன் நிறைவுற்றது. [1] .
மீண்டும் தில்லி மாநகராட்சிகளை ஒன்றிணைத்தல்
[தொகு]இந்திய அரசு 22 மார்ச் 2022 அன்று தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் பகுதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் ஒரே தில்லி மாநகராட்சியாக நிறுவ சட்ட முன்வடிவத்திற்கு ஒப்புதல் வழங்கியது.[2] ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி 22 மே 2022 அன்று நிறுவப்பட்டது.[3]
வார்டுகள் இட ஒதுக்கீடு
[தொகு]250 வார்டுகளை கொண்ட தில்லி மாநகராட்சியின் 42 வார்டுகள் அட்டவணை சமூகத்தவர்களுக்கும், 50 ச தவீதம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. [4]
தேர்தல் அட்டவணை
[தொகு]தில்லி அரசின் தேர்தல் ஆணையம் 4 நவம்பர் 2022 அன்று தில்லி மாநகராட்சிக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.[5]
தேர்தல் நிகழ்வுகள் | அட்டவணை |
---|---|
தேர்தல் அறிவிக்கை நாள் | 7 நவம்பர் 2022 |
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் | 14 நவம்பர் 2022 |
வேட்பு மனு பரிசீலனை நாள் | 16 நவம்பர் 2022 |
வேட்பு மனுவை திரும்பப் பெறும் இறுதி நாள் | 19 நவம்பர் 2022 |
தேர்தல் நாள் | 4 டிசம்பர் 2022 |
வாக்கு எண்ணிக்கை | 7 டிசம்பர் 2022 |
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
[தொகு]தில்லி மாநகராட்சித் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையாக வார்டுகளை கைப்பற்றி தில்லி மாநகராட்சியை கைப்பற்றும் என்றும், பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் இடத்திலும்; இந்திய தேசிய காங்கிரசு மூன்றாம் இடத்திலும் வரும் எனக் கூறப்பட்டது.[6]
தேர்தல் முடிவுகள்
[தொகு]வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தமுள்ள 250 வார்களில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 104 வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர்.[7]
கட்சிகள் | வாக்குகள் | மொத்த வார்டுகள் (பெரும்பான்மைக்கு 126 வார்டுகள் தேவை) | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ± % | போட்டியிட்ட வார்டுகள் | வெற்றி பெற்ற வார்டுகள் | +/- | % | |||
ஆம் ஆத்மி கட்சி | 42.05% | ஏற்றம் 15.82% | 250 | 134[8] | ஏற்றம் 85 | ||||
பாரதிய ஜனதா கட்சி | 39.09% | ஏற்றம் 3.01% | 250 | 104 | வீழ்ச்சி 77 | ||||
இந்திய தேசிய காங்கிரசு | 11.68% | வீழ்ச்சி 9.41% | 247 | 9 | வீழ்ச்சி 22 | ||||
சுயேச்சைகள் | 3.46% | 3 | வீழ்ச்சி 7 | ||||||
பிற கட்சிகள் | 1.14% | 0 | வீழ்ச்சி 6 | ||||||
நோட்டோ | 0.78% | ||||||||
மொத்த வார்டுகள் | 250 | - | ±0 |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SEC likely to decide on Delhi civic body polls in second week of April: Sources". The Indian Express (in ஆங்கிலம்). 23 March 2022. பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
- ↑ "Union Cabinet clears Bill to merge three municipal corporations of Delhi". mint (in ஆங்கிலம்). 2022-03-22. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ "Delhi's unified municipal corporation formally comes into existence". Firstpost (in ஆங்கிலம்). 2022-05-22. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
- ↑ டில்லி மாநகராட்சிக்கு டிச.,4ல் தேர்தல்
- ↑ "Delhi MCD polls to be held on December 4, results on December 7". The Indian Express (in ஆங்கிலம்). 2022-11-04. பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.
- ↑ Delhi MCD Exit Poll Results 2022 LIVE Updates: 3 exit polls predict clear win for Aam Aadmi Party
- ↑ General Election to Municipal Corporation of Delhi – 2022
- ↑ Delhi MCD Election Results 2022