2022 தில்லி தீ விபத்து
| நாள் | 13 மே 2022 |
|---|---|
| அமைவிடம் | முந்கா, தில்லி, இந்தியா |
| காரணம் | மின்சாரக் கசிவு, குறுகிய சுற்று (இருக்கலாம்) |
| இறப்புகள் | 27 |
| காயமுற்றோர் | 40 |
| காணாமல் போனோர் | 0 |
2022 தில்லி தீ விபத்து (2022 Delhi fire) மே 13 ஆம் தேதியன்று இந்தியாவின் தில்லி நகரத்திலுள்ள முந்கா பகுதியில் உள்ள நான்கு மாடி அலுவலகம் மற்றும் வணிக கட்டிடத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை குறிக்கிறது. இவ்விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். குறைந்தது 50 பேர் மீட்கப்பட்டனர். தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது .[1][2]
கட்டடத்திற்கு தீயணைப்புத் துறையிடமிருந்து அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மேலும் அங்கு தீயணைப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை. தில்லி காவல்துறை தீ விபத்தை குற்றவியல் கொலை மற்றும் குற்றவியல் சதி என்ற பிரிவுகளின் கீழ் பதிவு செய்தது.[2] மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி புகைப்படக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான கோஃப் இம்பெக்சு பிரைவேட் லிமிடெட்டு நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு சகோதரர்களை அவர்கள் கைது செய்தனர். இந்த அலுவலகத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.[3]
தீயணைப்பு வீரர்கள் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாகக் கூறப்பட்டாலும், பாரந்தூக்கி ஓட்டுநர் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்டவர்களை தீயிலிருந்து காப்பாற்றினார். அந்த ஓட்டுநரின் கூற்றுப்படி, தீயணைப்பு சேவை சம்பவ இடத்திற்கு வர ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக எடுத்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delhi office fire: Dozens killed as fire sweeps through building" (in en-GB). BBC News. 2022-05-14. https://www.bbc.com/news/world-asia-india-61445600.
- ↑ 2.0 2.1 "Police arrest 2 after building fire kills 27 in New Delhi". The Independent (in ஆங்கிலம்). 2022-05-14. Retrieved 2022-05-14.
- ↑ "Delhi Mundka Fire Live Updates: Eight bodies identified; DFS chief says building did not have MCD clearance". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-14. Retrieved 2022-05-14.
- ↑ "With His Crane, This Man Saved Over 50 People Trapped In Delhi's Mundka Fire" (in en-GB). NDTV. 2022-05-15. https://www.ndtv.com/delhi-news/mundka-fire-with-his-crane-this-man-saved-over-50-people-trapped-in-delhis-mundka-fire-2977181.