2022 குவாசுலு-நடால் வெள்ளப்பெருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 குவாசுலு-நதால் வெள்ளம்
KwaZulu-Natal in South Africa.svg
தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு-நதால் அமைவிடம்
நாள்8 ஏப்ரல் 2022 – தற்போது வரை
அமைவிடம்தென்னாப்பிரிக்கா (குறிப்பாக குவாசுலு-நதால்)
இறப்புகள்395 உறுதி செய்யப்பட்டது[1]

2022 குவாசுலு-நதால் வெள்ளப்பெருக்கு (2022 KwaZulu-Natal floods) என்பது ஏப்ரல் 2022 இல், தென்கிழக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாசுலு-நதால் முழுவதும் பல நாட்கள் பெய்த கனமழையால் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தைக் குறிக்கிறது. குறிப்பாக டர்பன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறைந்தது 395 பேர் இறந்துள்ளதாகவும், பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததாகவும் அல்லது அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின்சார அமைப்புகள் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மேலும், இந்த சேதமானது மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை பெரிதும் பாதித்தது. இது 21 ஆம் நூற்றாண்டில் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகும். மேலும், 1987 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தென்னாப்பிரிக்கா வெள்ளத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான புயல் வெள்ள பாதிப்பு ஆகும்.[2][3]

பின்னணி மற்றும் வானிலை வரலாறு[தொகு]

ஏப்ரல் 13 அன்று ஏற்பட்ட இசா துணை வெப்பமண்டல மந்தநிலை

லா நினாவின் விளைவுகளால், தென்னாப்பிரிக்கா 2022 இல் சராசரிக்கும் அதிகமாஎல்ன மழைப்பொழிவைக் கண்டது. 1921 [4] ஆண்டு முதல் நம்பகமான பதிவுகள் தொடங்கியதில் இருந்து ஜனவரியில், பல பகுதிகள் மிகக் கடுமையான மழையை அனுபவித்தன. தென்னாப்பிரிக்கா முழுவதும் 2021-22 கோடையில் பல அழிவுகரமான வெப்பமண்டலச் சூறாவளிகள் மற்றும் வெள்ளங்களை சந்தித்தது.[5]

ஏப்ரல் 8 அன்று பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சில நாட்கள் வரை நீடித்தது.[6] ஏப்ரல் 11 ஆம் நாள், தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. தென்னாப்பிரிக்க வானிலை சேவையானது குவாசுலு-நடாலின் கரையோரப் பகுதிக்கும் அதை ஒட்டிய உள்பகுதிகளுக்கும் 5 ஆம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டது - இது பின்னர் நிலை 8 ஆக மாற்றப்பட்டது. மழையின் தாக்கம் மற்றும் அளவினை நன்கு புரிந்து கொள்ளப்பட்ட பின்னர் நிலை 9 எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வலஞ்சுழியான ஓட்டமானது, மிதவெப்ப மண்டலங்களில் இருந்து கடற்கரையை நோக்கி, ஈரமான காற்றைக் கொண்டு வந்தது, இதன் விளைவாக குவாசுலு-நடால் முழுவதும் கனமழை பெய்தது. இ தெக்வினி, ஐலெம்பெ, மற்றும் உகு நகராட்சிகளில் மிகத் தீவிரமான மழை பெய்தது. 8-12 காலகட்டத்தில் ஏப்ரலில், குவாசுலு-நடாலில் பெரும்பாலான பகுதிகள் 50 மிமீ (2.0 அங்குலமை்) அளவிற்கும் மேலான மழை அளவைக்கண்டன. கடலோரப் பகுதிகளில் 200 மிமீ (7.9 அங்குலம்) அளவிற்கான மழைப்பொழிவு இருந்தது. ஏப்ரல் 11-12 வரையிலான 24 மணி நேரத்தில், வர்ஜீனியா விமான நிலையம் 304 மிமீ (12.0 அங்குலம்) மழை அளவைப் பதிவு செய்திருந்தது. குவாசுலு-நடால் கடற்கரையில் உள்ள பகுதிகளில் 450 மிமீ (18 அங்குலம்) மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.[7]

ஏப்ரல் 12 அன்று, குறை அழுத்த அமைப்பு ஒரு துணை வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டதோடு மீடியோ பிரான்சால் இந்தச் சூழலின் அமைப்பு மற்றும் புயல் காற்றுகளைக் கருத்தில் கொண்டு துணை வெப்பமண்டல மந்தநிலை இசா என பெயரிடப்பட்டது.[8] தென்னாப்பிரிக்க கடற்கரையில் அதன் தென்மேற்குப் பாதையைத் தொடர்ந்து ஏப்ரல் 13 காலை கிழக்கு கேப்பின் வடகிழக்கு கடற்கரையை அடைந்த பிறகு, தாழ்வழுத்த அமைப்பு வடக்கு நோக்கித் திரும்பியது. கடலுக்குச் செல்வதற்கு முன் வடகிழக்கு திசையில் தென்னாப்பிரிக்க கடற்கரையில் தொடர்ந்து நகர்ந்து மேலும் வலுவிழந்தது.[9]

தாக்கம்[தொகு]

துணை வெப்பமண்டல மந்தநிலை இசாவின் பாதையின் வரைபடம்.

பலத்த மழை, மிகுந்த எண்ணிக்கையிலான வீடுகளை அழித்தது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளில் மண்சரிவுகள் ஏற்பட்டன. ஏப்ரல் 13 அன்று, குவாசுலு-நதால் முழுவதும் இ தெக்வினியில் 45 பேர் மற்றும் ஐலெம்பெயில் 14 பேர் ஆக மொத்தம் 59 பேர் பெருமழை வெள்ளம் காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது.[10][11] அன்றைய தினம், வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை [12] மேலும் அதிகரித்தது. குறைந்தது 2,000 வீடுகள் மற்றும் 4,000 குடிசை வீடுகள் சேதமடைந்தோ அழிந்தோ போயுள்ளதாக குவாசுலு-நதால் பிரீமியர் சிஹ்லே ஜிகலலா தெரிவித்தார்.[10] கிளேர் எஸ்டேட் அருகே உள்ள குடிசைப்பகுதியில் 5 பேர் பலியாகினர். டோங்காட்டில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளின் கார் பெருக்கெடுத்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் கொல்லப்பட்டனர். வெருலத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கரையோர என்2 நெடுஞ்சாலை பல பகுதிகளில் முற்றிலுமாக அரிக்கப்பட்டு காணாமல் போயின. பாலங்கள் அழிக்கப்பட்டன. டர்பனையும் ஜோகன்னஸ்பர்க்கையும் இணைக்கும் என்3 நெடுஞ்சாலையின் தெற்குப் பாதைகள் வெள்ளம் மற்றும் குப்பைகள் காரணமாக மூடப்பட்டன. ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள், 10 ஆம் தேதிக்கு பின் மேரியன் ஹில் பிளாசாவிலிருந்து என்3 சாலை முழுவதும் சரக்குந்துகள் தேங்கி நின்றன. டர்பனில் உள்ள துறைமுகத்திற்குள் நுழைய முடியாததால் ஹம்மர்ஸ்டேல் வரை 10 கி.மீ. அளவிலான சாலையை அடைத்துக்கொண்டு வாகனங்கள் நின்றன.[13]

டிரான்ஸ்நெட் டர்பனில் துறைமுக செயல்பாடுகளை நிறுத்தப்பட்டது. இது ஏப்ரல் 11 திங்கட்கிழமை மாலையில் நிகழ்ந்தது, துறைமுகத்தில் நடவடிக்கைகளைக் கண்காணிக்க டிரான்ஸ்நெட், வாடிக்கையாளர்கள் மற்றும் இயக்குபவர்களால் உருவாக்கப்பட்ட கட்டளை மையம் அமைக்கப்பட்டது.[14] அப்போது பெய்த கனமழையால் துறைமுகத்திற்குள் செல்லும் சாலைகள் மற்றும் நகருக்குச் செல்லும் N3 சாலைகள் சேதமடைந்தன. துறைமுகத்துக்கான கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் டர்பனுக்கு போக்குவரத்து சரக்குகளை அனுப்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டது. ரிச்சர்ட்ஸ் விரிகுடா துறைமுகத்தில், குறைந்த தினனோடு முனையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.[14]

எஸ்காம் நிறுவனத்தால் இயக்கப்படும் ஒரு நீர்மின் அணையானது, உயரும் நீரால் நிரம்பி வழிந்தது. செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 12 அன்று அறிவித்தார், அதிக மழையினால் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அன்று மாலை மாறி மாறி இணையத் தடைகள் ஏற்படக்கூடும் என்று எஸ்காம் முதன்மை செயல் அலுவலர் ஆண்ட்ரே டி ருய்டெர் அறிவித்தார்.[15] குவாசுலு நதாலில் உள்ள பிற சிக்கல்கள் யாதெனின் மின் கம்பிகள் மற்றும் துணை மின் நிலையங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததாகும்.[15]

மாகாணத்தின் அலைபேசிச் சேவை உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டது.[16] வோடகாம் 400 கோபுரங்கள் பெரும்பாலும் மின்சாரத் தடைகள் மற்றும் வெள்ளம் மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய இழை இணைப்புக்கோளாறுகளின் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.[16] எம்டிஎன் 500 தளங்கள் வெள்ளம் மற்றும் மின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.[16]

சாப்பி சாய்க்கார், டுகேலா மற்றும் இசுடேஞ்சர் ஆகிய மூன்று காகித ஆலைகளை மூடப்பட்டன, மற்ற இரண்டு மட்டுமே செயல்படும் நிலையில் இருந்தன.[17] டர்பனில் உள்ள பெப்கோர் விநியோக மையம் வெள்ளம் காரணமாக மூடப்பட்டது, மேலும் இருவர் ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுனில் விநியோகச் சங்கிலிக்கு உதவ உள்ளனர்.[17]

மேற்கோள்கள்[தொகு]

 1. Ward, Rogan (15 Apr 2022). "S.Africa releases emergency funds for deadly floods, nearly 400 dead" (in en). Al Jazeera. https://www.reuters.com/world/africa/safrica-releases-emergency-funds-deadly-floods-east-coast-2022-04-15/. 
 2. France-Presse, Agence (13 April 2022). "South Africa floods: deadliest storm on record kills over 300 people". the Guardian. 14 April 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 3. "South Africa braces for more heavy rain after floods kill hundreds". the Guardian. 14 April 2022. 14 April 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 4. Cele, S'thembile; Njini, Felix (12 April 2022). "Floods Wash Away Bridges, Close Routes to Key South African Port". Bloomberg. https://www.bloomberg.com/news/articles/2022-04-12/floods-wash-away-bridges-close-routes-to-key-south-african-port. பார்த்த நாள்: 12 April 2022. 
 5. Chutel, Lynsey (12 April 2022). "Heavy Floods and Mudslides Leave at Least 45 Dead in South Africa". https://www.nytimes.com/2022/04/12/world/africa/floods-mudslides-south-africa.html. பார்த்த நாள்: 12 April 2022. 
 6. Erasmus, Des (12 April 2022). "Death toll mounts as KZN sinks beneath torrential rains, floods amid decimated infrastructure". https://www.dailymaverick.co.za/article/2022-04-12-death-toll-mounts-as-kzn-sinks-beneath-torrential-rains-floods-amid-decimated-infrastructure/. பார்த்த நாள்: 12 April 2022. 
 7. CNN, David McKenzie, Larry Madowo, Mia Alberti and Angela Dewan. "Over 300 killed after flooding washed away roads, destroyed homes in South Africa". CNN. 14 April 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 8. "WARNING NUMBER: 1/11/20212022: SUBTROPICAL DEPRESSION 11 (ISSA)" (PDF). 11 April 2022. 12 April 2022 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 9. "WARNING NUMBER: 5/11/20212022: SUBTROPICAL DEPRESSION 11 (ISSA)" (PDF). 13 April 2022. 15 April 2022 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 14 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 10. 10.0 10.1 "Nearly 60 dead in South Africa floods". CNA. 13 April 2022. Archived from the original on 12 ஏப்ரல் 2022. https://web.archive.org/web/20220412232055/https://www.channelnewsasia.com/world/nearly-60-dead-south-africa-floods-2622766. பார்த்த நாள்: 13 April 2022. 
 11. "Heavy rains claim 45 lives in South Africa's KwaZulu-Natal province". Reuters. 12 April 2022. https://www.reuters.com/world/africa/heavy-rains-claim-45-lives-south-africas-kwazulu-natal-province-2022-04-12/. பார்த்த நாள்: 12 April 2022. 
 12. "DEATH TOLL DUE TO KWAZULU-NATAL'S DEVASTATING FLOODS HITS 253". 13 April 2022. https://ewn.co.za/2022/04/13/death-toll-due-to-kwazulu-natal-s-devastating-floods-hits-253. பார்த்த நாள்: 13 April 2022. 
 13. Papayya, Mary (14 April 2022). "Bereaved look for Ramaphosa's help". 
 14. 14.0 14.1 "Port operations affected as major damage caused to Durban road networks". 13 April 2022. https://www.iol.co.za/mercury/news/port-operations-affected-as-major-damage-caused-to-durban-road-networks-5d21344f-4e8a-407c-adb1-b2b913dbddbe. 
 15. 15.0 15.1 Lekabe, Thapelo (13 April 2022). "Eskom blames rain again". 
 16. 16.0 16.1 16.2 Mboto, Sibusiso; Singh, Karen; Pillay, Yogashen (13 April 2022). "Rains, mudslides claim lives in KZN". The Mercury: pp. 1. 
 17. 17.0 17.1 "KZN floods hit Sappi mills, Pepkor and insurance shares". 14 April 2022.