2022 உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பில் பாலியல் வன்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2022 உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பில் பாலியல் வன்முறை (Sexual violence in the 2022 Russian invasion of Ukraine) பெரும்பாலும் உருசிய ஆயுதப் படையினரால் நிகழ்த்தப்பட்டது.[1][2] உக்ரைன் நாட்டின் கீவ் மாகாணத்தின் புச்சா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான புச்சாவில் 25 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.[3][4][5]உருசியாவில் பிறந்த உக்ரைனிய அரசியல்வாதியான இலியுட்மிலா டெனிசோவா, உக்ரைனில் உள்ள அரசு வழக்கறிஞர் மற்றும் செய்தித்தாளான தி கார்டியன் ஆகியோர் பாலியல் வன்முறையை போரின் ஆயுதமாக உருசிய படைகள் செய்து வருகின்றன என்று கருத்து தெரிவிக்கின்றனர்.[4][6]பாலியல் வன்முறையின் அளவை மதிப்பிடுவதில் குறைவான அறிக்கையிடல் ஒரு தீவிர பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.[7][6]ஓர் உருசிய கைதிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.[7]உக்ரேனிய பிராந்திய தற்காப்புப் படைகளின் பாலியல் வன்முறை, பொதுவில் பகுதியளவு அல்லது முழுவதுமாக அகற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை அடிப்பதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.[7]

சூழல் மற்றும் அபாயங்கள்[தொகு]

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26, 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26 ஆம் தேதி வரையிலான உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் ஆரம்ப காலத்தை உள்ளடக்கிய அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் நான்கு வகையான பாலியல் வன்முறை அபாயங்களை பட்டியலிட்டுள்ளது. மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்த இராணுவம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தல், உள் இடப்பெயர்ச்சி, உக்ரைனை விட்டு வெளியேறும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் சிறுமிகள் மோதல் போன்ற காரணங்களால் பாலியல் வன்முறையும் மற்றும் மனித கடத்தலும் போன்ற அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தியது.[7] குடும்ப வன்முறை, மனித கடத்தல் மற்றும் பாலின பாகுபாடு ஆகியவற்றைத் தடுப்பதற்காக பெறப்படும் அறிக்கைகள் பாலியல் வன்கொடுமைக்கான அதிக ஆபத்தை சுட்டிக்காட்டின. மேலும் பல காரணிகள் குறைவான அறிக்கையையும் உருவாக்குகின்றன என்று உயர் ஆணையர் அலுவலகம் குறிப்பிடுகிறது.

உருசிய படையினரின் பாலியல் வன்முறைக்குக் காரணம்[தொகு]

உக்ரைனியப் படையெடுப்பின் போது உருசிய ஆயுதப்படைகளின் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் இன்னும் சரிபார்க்கவில்லை என்று 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட மனித உரிமைகள் உயர் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது.[7] வயதான பெண்கள், உருசிய ஆயுதப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தப்பிக்க முடியாமல், பெரும்பாலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர் அல்லது தற்கொலை செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று வெர்கோவ்னா ராதா உறுப்பினரான லெசியா வாசிலெங்கோ மார்ச்சு மாதம் 17 அன்று வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் கூறினார்.[8] சாட்சியமளிப்பதற்கான "வலிமையும் திறனும் குடும்பங்களுக்கு இல்லாததால் இத்தகைய வழக்குகள் குறைவாகப் பதிவாகின்றன என்று மேலும் அவரி குறிப்பிட்டார்.

சம்பவங்கள்[தொகு]

மார்ச்சு மாத இறுதியில், உக்ரைனின் வழக்கறிஞர் இரினா வெனிடிக்டோவா, உருசிய படைவீரர்கள் ஓர் உக்ரைனிய மனிதனை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது மனைவியைக் கற்பழித்ததாகக் கூறுவது குறித்து விசாரணையைத் தொடங்கினார். மார்ச் 28 அன்று டைம்சு இதழ் அந்தப் பெண்ணுடன் ஒரு நேர்காணலை வெளியிட்டது. தான் புரோவரி ரேயனில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கூறினார். உருசிய வீரர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து, நாயையும் கணவரையும் சுட்டுவிட்டு என் தலையில் துப்பாக்கியைப் பிடித்து, எனது மகன் வீட்டின் கொதிகலன் அறையில் அழுது கொண்டு இருந்தபோது என்னை பலாத்காரம் செய்தனர். படைவீரர்கள் இருவரும் 20 நிமிட இடைவெளி எடுத்துக் கொண்டு இரண்டாவது முறை, பின்னர் மூன்றாவது முறை என பலாத்காரம் செய்தனர். அந்த நேரத்தில் அவர்கள் அவ்வளவு குடிபோதையில் இருந்தனர். தனது மகனுடன் தப்பித்து, காவல்துறையில் சாட்சியமளித்தாகவும், சமூக ஊடக சுயவிவரங்களில் இருந்து தன்னை கற்பழித்தவர்களில் ஒருவரை அடையாளம் காட்டினாதாகவும் அப்பெண் நேர்காணலின்போது கூறினார்.[9] உருசிய செய்தித் தொடர்பாளர் திமிட்ரி பெசுகோவ் இக்குற்றச்சாட்டுகளை "பொய்" என்று விவரித்தார்.[1] போரின் சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மீறிய சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு உருசிய சிப்பாய்க்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெனெடிக்டோவா கூறினார்.[1]

மார்ச்சு மாதம் 13 ஆம் தேதியன்று உருசிய ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் ராயோனில் உள்ள மலாயா ரோகன் கிராமத்தில் 31 வயதுடைய பெண் ஒருவரை அடித்து பலாத்காரம் செய்தது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை செய்தது. மார்ச் 13 ஆம் தேதி நள்ளிரவில் ஓர் உருசிய சிப்பாய் ஒரு பள்ளிக்குள் நுழைந்தார். அங்கு அந்தப் பெண் தனது குடும்பத்தினருடனும் மற்ற கிராம மக்களுடனும் தங்கியிருந்தார். இராணுவ வீரர் துப்பாக்கி முனையில் பெண்ணை ஆடைகளை கழற்ற வற்புறுத்தினார். மேற்கூரையில் துப்பாக்கியால் சுட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். சிப்பாய் அந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்து, கன்னங்கள் மற்றும் கத்தியால் அறுத்து, முகத்தில் அடித்து, அறைந்து துன்புறுத்தினார். மார்ச்சு மாதம் 14 அன்று காலை 7 மணியளவில், சிப்பாய் அந்த பெண்ணை விடுவித்து கட்டிடத்தை விட்டு வெளியேறினார். அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் கார்கிவ் நகருக்கு நடந்து சென்று மருத்துவ உதவியைப் பெற்றனர்.[2]

ஏப்ரல் 12, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று பிபிசி செய்தி நிறுவனம் உக்ரைன் தலைநகரம் கீவிற்கு மேற்கே 70 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுப் பெண்ணை நேர்காணல் செய்தது. உருசிய ஆயுதப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்த செச்சென் என்பவர் துப்பாக்கி முனையில் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார். 40 வயதான பெண் ஒருவர் அதே சிப்பாயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் ஏன்று அண்டை வீட்டார் கூறினர். பிபிசி செய்தி நிறுவனம் "குழப்பம் தரும் குற்றக் காட்சி" என்று இதை வர்ணித்தது. ஆனால் பிபிசி செய்தியின் வருகைக்கு மறுநாள் 40 வயதுடையவரின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மார்ச்சு மாதம் 9 அன்று உருசிய வீரர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றனர். இருவர் அந்த மனிதனின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் வீரர்கள் வீட்டை எரித்து குடும்ப நாய்களையும் சுட்டுக் கொன்றனர். காவல்துறையினர் அந்த மனிதனின் உடலையும் கண்டுபிடித்தனர்.[3]

ஒரு பெண் உரோம மேலாடையுடன் நிர்வாணமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டு, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு உருளைக்கிழங்கு பாதாள அறையில் பூட்டப்பட்டாள்" என்று நியூயார்க்கு டைம்சு பத்திரிகை விவரித்தது. மார்ச் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கீவ் பிராந்தியத்தின் விடுதலைக்குப் பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது.[4]

ஒட்டு மொத்த அளவுகோல்[தொகு]

விசாரிக்கப்பட்ட முதல் பிரோவரி ரயன் வழக்குடன் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் இருப்பதாகக் உக்ரைனிய நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மெசென்ட்சேவா கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் "பேசுவதற்குத் தயாரானவுடன்", ஆதாரங்கள் பகிரங்கமாகிவிடும் என்றும் அவர் கூறினார். வெனடிக்டோவாவால் அறிவிக்கப்பட்ட ஒற்றை வழக்கை விட, படையெடுப்பின் போது பாலியல் வன்கொடுமை மிகவும் பரவலாக இருந்தது என்று உக்ரைனிய வழக்கறிஞர் கேத்ரினா புசோல் கூறுகிறார். "கும்பல் பலாத்காரம், குழந்தைகள் முன்னிலையில் கற்பழிப்பு, குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் வன்முறை பற்றிய அறிக்கைகளையும் அவர் குறிப்பிடுகிறார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்றும், அவர்கள் உருசிய ஆயுதப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்றும் புசோல் கூறினார்.[1] 13/14 மார்ச்சு மாத பலாத்காரத்தைத் தவிர மற்றவை போதுமான அளவு சரிபார்க்கப்படவில்லை என்று மக்கள் உரிமை உயர் ஆணையம் கூறியது.[2]

2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், மனித உரிமைகளுக்கான உக்ரைன் அலுவலர் லியுட்மிலா டெனிசோவா, புச்சாவில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 25 சிறுமிகள் மற்றும் பெண்கள் உருசிய வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினார். "உக்ரைனிய குழந்தைகள் பிறப்பதை தடுக்கவும் எந்தவொரு ஆணுடனும் அவர்கள் பாலியல் தொடர்பை விரும்பாத அளவிற்குமான மனநிலையை உருவாக்கவுமே உக்ரைனியப் பெண்களை கற்பழிக்க எண்ணியதாக உருசிய வீரர்கள் விவரித்ததாக டெனிசோவா கூறினார். உதவிக்கு அழைக்கும் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் முறையான சாட்சியங்களை வழங்க விரும்பாமல் உளவியல் ஆதரவை விரும்புவதால் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்வது சாத்தியமற்றது[3][4] என்று டெனிசோவா கூறுகிறார்.[5]

ஏப்ரல் 3 ஆம் தேதி மனித கடத்தலுக்கு எதிரான உக்ரைனின் லா இசுட்ராடா அமைப்பு மனித கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றில் இருந்து தப்பியவர்களுக்கு உதவ முயல்கிறது. சமாதான காலத்தில் கற்பழிப்பு குறைவாக அறிக்கையிடப்படுவதாகவும் இந்த அமைப்புக்கு தெரிந்த சம்பவங்கள் மேலும் பல உள்ளதாகவும் இவ்வமைப்பு கூறுகிறது.[6]

அகதிகள் நெருக்கடியில் பாலியல் வன்முறை[தொகு]

உக்ரைனில் வன்முறையில் இருந்து தப்பிச் செல்லும் போது, பெண்கள் மற்றும் குழந்தை அகதிகள் பாதிக்கப்பட்டதாக இரண்டு தனித்தனி வழக்குகள் உள்ளன. மார்ச்சு மாத நடுப்பகுதியில் போலந்தில் 19 வயது உக்ரைனிய அகதியை கற்பழித்ததாகக் கூறப்படும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரிடம் தங்குமிடம் மற்றும் அகதி உதவி கோரியதாகக் கூறப்படுகிறது, மேலும் அகதிகளுக்கான செருமானிய தங்குமிடங்களில் தங்கியிருந்த உக்ரைனிய பதின்பருவ அகதியை இருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.[10] ஐக்கிய இராச்சிய அரசாங்கங்கள் அகதிகளுக்கான வீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு பெண் தன்னுடன் தங்குவதற்கு முயற்சித்த ஒரு ஆண் மற்றும் பாலுறவுக்கு அனுமதித்தால் இலவச தங்குமிடம், உணவு, செலவுகள் மற்றும் மாதாந்திர கொடுப்பனவு ஆகியவற்றை உறுதியளித்ததாகப் புகாரளித்தார். தனது தாயுடன் பயணிப்பதாக அவருக்குத் தெரிவித்த பின்னரே அந்த மனிதனைத் தடுக்க முடிந்தது என்று கூறினார்.[11]

உரிமை கோருதல்[தொகு]

மார்ச்சு மாதத்தின் பிற்பகுதியில் கீவ் பிராந்தியம் விடுவிக்கப்பட்டது. கூட்டுப் பலாத்காரம், துப்பாக்கி முனையில் பாலியல் தாக்குதல்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கற்பழிப்பு பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து, உக்ரைனியப் பெண்கள் கற்பழிப்பு அச்சுறுத்தலை போர் ஆயுதமாக எதிர்கொள்வதாக தி கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியது. மனித உரிமைகளுக்கான உக்ரைனில் உள்ள டெனிசோவா, பாலியல் வன்முறையை படைகள் போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் "ஊகிக்கிறார் [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Engelbrecht, Cora (2022-03-29). "Reports of sexual violence involving Russian soldiers are multiplying, Ukrainian officials say". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2022-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220329182049/https://www.nytimes.com/2022/03/29/world/europe/russian-soldiers-sexual-violence-ukraine.html. 
  2. 2.0 2.1 2.2 "Ukraine: Apparent War Crimes in Russia-Controlled Areas". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 2022-04-03. Archived from the original on 2022-04-03. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
  3. 3.0 3.1 3.2 Limaye, Yogita (2022-04-12). "Ukraine conflict: 'Russian soldiers raped me and killed my husband'". BBC News இம் மூலத்தில் இருந்து 2022-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220416185632/https://www.bbc.com/news/world-europe-61071243. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Gall, Carlotta; Berehulak, Daniel (2022-04-11). "'They shot my son. I was next to him. It would be better if it had been me.' – Bucha's Month of Terror". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2022-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220414105136/https://www.nytimes.com/interactive/2022/04/11/world/europe/bucha-terror.html. 
  5. 5.0 5.1 Peuchot, Emmanuel (2022-04-13). "Biden Accuses Putin of Ukraine Genocide as Humanitarian Corridors Paused". The Moscow Times இம் மூலத்தில் இருந்து 2022-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220417230722/https://www.themoscowtimes.com/2022/04/13/biden-accuses-putin-of-ukraine-genocide-as-humanitarian-corridors-paused-a77297. 
  6. 6.0 6.1 6.2 McKernan, Bethan (2022-04-04). "Rape as a weapon: huge scale of sexual violence inflicted in Ukraine emerges". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 2022-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220414081326/https://www.theguardian.com/world/2022/apr/03/all-wars-are-like-this-used-as-a-weapon-of-war-in-ukraine. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "Update on the human rights situation in Ukraine – Reporting period: 24 February – 26 March" (PDF). UN Human Rights Monitoring Mission in Ukraine. 2022-03-26. Archived (PDF) from the original on 2022-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
  8. Trew, Bel (2022-03-17). "Ukrainian MPs detail 'medieval' tactics and sexual violence of Vladimir Putin's army". The Independent இம் மூலத்தில் இருந்து 2022-03-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220317201230/https://www.independent.co.uk/news/uk/politics/ukraine-mps-russia-violence-invasion-b2038105.html. 
  9. Philp, Catherine (2022-03-28). "'One soldier raped me, then the other, as my son cried'". தி டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2022-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220328213625/https://www.thetimes.co.uk/article/one-soldier-raped-me-then-the-other-as-my-son-cried-7xbqwzdqw. 
  10. Reis, Chen (March 28, 2022). "Ukrainian female refugees are fleeing a war, but in some cases more violence awaits them where they find shelter". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
  11. Bradley, Jane (1 April 2022). "Ukraine-Russia: Homes for Ukraine scheme exploited by men offering shelter in return for sex, Scots charity warns". www.scotsman.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.