உள்ளடக்கத்துக்குச் செல்

2022 அபுதாபி தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 அபுதாபி தாக்குதல்
2022 Abu Dhabi attack
ஏமனில் ஔதியாளர்கள் கிளர்ச்சியின் ஒரு பகுதி
இடம்அபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம்
நாள்17 சனவரி 2022 (2022-01-17)
14:29 – 14:50 (UTC+4:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
எண்ணெய் எரிபொருள் நிரப்பும் சரக்கு வண்டிகள் மற்றும் விமானநிலைய உட்கட்டமைப்பு
தாக்குதல்
வகை
ஆளில்லா விமானம் Motive: தெரியவில்லை
இறப்பு(கள்)3 [1]
காயமடைந்தோர்6
தாக்கியோர் ஔதி கிளர்ச்சியாளர்கள்

2022 அபுதாபி தாக்குதல் (2022 Abu Dhabi attack) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள வானூர்தி நிலையத்தில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதைக் குறிக்கிறது. 2022 ஆம் ஆண்டு 17 ஆம் தேதியன்று புதிதாகக் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த வானூர்தி நிலையப் பகுதியில் ஆளில்லா வானூர்தி மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 3 எரிபொருள் கலன்கள் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.[2][3][4]

அன்சர் அல்லா என்றழைக்கப்படும் ஔதி இசுலாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக அறியப்பட்டது. முசாஃபாவில் உள்ள மூன்றாவது தொழிற்சாலை நகரத்தில் உள்ள அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் எரிபொருள் நிரப்பும் சரக்கு வண்டிகள், சேமிப்பு வசதிகள் மற்றும் விமானநிலைய உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது.[5] இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் குறித்து வெளியான தகவலின்படி 2 இந்தியர்கள் மற்றும் பாக்கித்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suspected drone attack in Abu Dhabi kills 3, including Pakistani national". Dawn. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  2. CNN, Charbel Mallo and Celine Alkhaldi. "3 killed in suspected Houthi drone attack in Abu Dhabi". CNN. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17. {{cite web}}: |last= has generic name (help)
  3. "அபுதாபி: ட்ரோன் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி!". விகடன். https://www.vikatan.com/news/international/uae-capital-abu-dhabis-airport-one-part-is-blasted-attacked-by-drone. பார்த்த நாள்: 17 January 2022. 
  4. "அபுதாபியில் டிரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/TopNews/2022/01/17170241/Suspected-Drone-Attacks-Caused-Explosion-In-Abu-Dhabi.vpf. பார்த்த நாள்: 17 January 2022. 
  5. Reuters (2022-01-17). "Two Indians among 3 killed in Abu Dhabi fuel truck blast, Yemeni Houthis claim responsibility" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/uae-suspects-drones-caused-abu-dhabi-fires-yemen-houthis-claim-attack/article38281816.ece. 
  6. "2 Indians, 1 Pakistani killed in blast from 'drone attack' in Abu Dhabi". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2022_அபுதாபி_தாக்குதல்&oldid=3686459" இலிருந்து மீள்விக்கப்பட்டது