உள்ளடக்கத்துக்குச் செல்

2021 கின்னௌர் நிலச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2021 கின்னௌர் நிலச்சரிவு (2021 Kinnaur landslide) என்பது 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கின்னௌர் மாவட்டத்தில் நிகுல்சாரி என்ற இடத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவைக் குறிக்கிறது. இந்நிலச்சரிவு 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் தேதி பிற்பகலில் பியோ - சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலச்சரிவில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கின.[1] இந்த நிலச்சரிவு மீட்புப் பணியில் இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு பணியினரும் இணைந்துள்ளனர். இந்நிலச்சரிவில் ஆகத்து 11 மாலை நிலவரப்படி 13 பேர் இறந்துள்ளதாகவும், 60 -க்கும் அதிகமானோர் நிலச்சரிவில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலச்சரிவு ஆகத்து பிற்பகல் 12.45 மணிக்கு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் இந்த நிகழ்வில் சரிவுகளுக்கு அடியில் சிக்கியிருக்கிறது.[2] ஆகத்து 13 அன்றைய நிலையில் மேலும் 2 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kinnaur landslide live updates: 13 bodies recovered; rescue operations underway". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
  2. "Major landslide in Himachal's Kinnaur, more than 40 feared buried". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
  3. "Kinnaur landslide Live Updates: Search and rescue operations resume; 2 more bodies recovered". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2021_கின்னௌர்_நிலச்சரிவு&oldid=3665798" இலிருந்து மீள்விக்கப்பட்டது