2021 எயிட்டி நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2021 எயிட்டி நிலநடுக்கம்
Sismo Haití 2021.jpg
2021 எயிட்டி நிலநடுக்கம் is located in Haiti
2021 எயிட்டி நிலநடுக்கம்
Port-au-Prince
Port-au-Prince
Léogâne
Léogâne
Les Cayes
Les Cayes
நிலநடுக்க அளவு7.2 Mw
ஆழம்10.0 கிமீ (6.2 மைல்)
நிலநடுக்க மையம்18°24′29″N 73°28′30″W / 18.408°N 73.475°W / 18.408; -73.475ஆள்கூறுகள்: 18°24′29″N 73°28′30″W / 18.408°N 73.475°W / 18.408; -73.475[1]
உரசுமுனைஎன்றிக்கிலோ-பிளான்டன் கார்டன் பிளவுப் பாறைமண்டலம்
வகைசாய்வுப் பிளவுப் பெயர்ச்சி-நேர்மாறு
அதிகபட்ச செறிவுIX (Violent)
உயிரிழப்புகள்குறைந்தது 1,297 இறப்புகள், 5,700 காயம்[2][3]

எயிட்டி நிலநடுக்கம் 2021 ஆகத்து 14 கிநேவ) காலை 8:29:09 மணிக்கு நிகழ்ந்தது. 7.2 செறிவான இந்நிலநடுக்கம் கரிபியன் நாடான எயிட்டியில் லா எசுப்பானியோலா தீவில் திபுரோன் மூவலந்தீவைத் தாக்கியது.[1] எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் இருந்து 150 கிமீ மேற்கே 10 கிமீ ஆழத்தில் இதன் அதிர்வுமையம் காணப்பட்டது.[4][5] இது எயிட்டியின் கடலோரப் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கையை விடுத்தது, ஆனாலும் அவ்வெச்செரிக்கை சிறிது நேரத்தில் விலக்கப்பட்டது.[5] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை "அதிக உயிரிழப்புகள்" மற்றும் பரவலான பேரழிவை மதிப்பிட்டது.[6] 8,200 இற்கும் அதிகமான கட்டடங்கள் அழிந்தன அல்லது சேதமடைந்தன, குறைந்தது 1,297 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டது.[7] 2021 இல் இடம்பெற்ற மிகப்பெரும் நிலநடுக்கமாக தற்போது இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "M 7.2 - 12 km NE of Saint-Louis du Sud, Haiti". மூல முகவரியிலிருந்து 14 August 2021 அன்று பரணிடப்பட்டது.
  2. Agence France-Presse (15 August 2021). "Haiti quake death toll rises as crews scramble to find survivors". al-Jazeera. https://www.aljazeera.com/news/2021/8/15/haitians-scramble-to-rescue-survivors-from-ruins-of-major-quake. 
  3. "Haiti struck by deadly 7.2-magnitude earthquake". 14 August 2021. https://www.bbc.com/news/world-latin-america-58215631. 
  4. European-Mediterranean Seismological Centre. "Earthquake, Magnitude 7.2 - HAITI REGION - 2021 August 14, 12:29:09 UTC". மூல முகவரியிலிருந்து 14 August 2021 அன்று பரணிடப்பட்டது.
  5. 5.0 5.1 "Major earthquake in Haiti felt across Caribbean, high casualties expected" (14 August 2021). மூல முகவரியிலிருந்து 14 August 2021 அன்று பரணிடப்பட்டது.
  6. "Live updates: 7.2 magnitude earthquake hits near Haiti". 14 August 2021. https://www.cnn.com/world/live-news/haiti-earthquake-08-14-21/index.html. 
  7. "web/20210815121558/https://www.aljazeera.com/news/2021/8/15/haitians-scramble-to-rescue-survivors-from-ruins-of-major-quake Haiti quake death toll rises as crews scramble to find survivors" (2021-08-15). மூல முகவரியிலிருந்து 15 August 2021 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]