2020 பெத்திரீனியா நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 பெத்திரீனியா நிலநடுக்கம்
2020 Petrinja earthquake
2020-12-29 Petrinja, Croatia M6.4 earthquake shakemap (USGS).jpg
2020 பெத்திரீனியா நிலநடுக்கம் is located in குரோவாசியா
2020 பெத்திரீனியா நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு6.4 Mw,[1] 6.2 ML[2]
ஆழம்10 கிமீ (6.2 மைல்)
Epicentre45°25′19″N 16°15′18″E / 45.422°N 16.255°E / 45.422; 16.255ஆள்கூறுகள்: 45°25′19″N 16°15′18″E / 45.422°N 16.255°E / 45.422; 16.255[1]
வகைதிருப்பு பிளவுப்பெயர்ச்சி
பாதிக்கப்பட்ட பகுதிகள்
அதிகபட்ச செறிவுIX (பெருவெடிப்பு)
முன்னதிர்வுகள்3 (ML 4.0 அல்லது மேல்
பெரியது: Mw 5.2 05:28 ஒசநே, 28 திசம்பர் 2020
பின்னதிர்வுகள்பல
பெரியது: Mw 4.8 05:15 ஒ.ச.நே, 30 திசம்பர் 2020
உயிரிழப்புகள்7 இறப்புகள், 26 பேர் காயம்

2020 கொரோவாசிய நிலநடுக்கம் (2020 Croatia earthquake) அல்லது பெத்திரீனியா நிலநடுக்கம் (Petrinja earthquake) 2020 திசம்பர் 29 அன்று கிட்டத்தட்ட பிப 12:20 ம.ஐ.நே (11:20 ஒ.ச.நே) குரோவாசியாவின் சிசாக்-மொசுலாவினா மாவட்டத்தில் இடம்பெற்ற 6.4 Mw (6.2 ML) அளவு நிலநடுக்கம் ஆகும். இதன் நிலநடுக்க மையம் பெத்ரீனியா நகரில் இருந்து 3 கிமீ (1.8 மைல்) மேற்கு-தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்தது.[1] இதன் ஆகக்கூடிய செறிவு ஐரோப்பிய நுண்புவியலைவு அளவுகோளில் VIII (பெரும் பாதிப்பு) முதல் IX (நாசம்) ஆகக் கணக்கிடப்பட்டது.[2][3] இந்நிகழ்விற்கு முன்னதாக முந்தைய நாளில் மூன்று முன்னதிர்வுகள் ஆகக்கூடியது 5.2 Mw அளவில் இடம்பெற்றிருந்தது.[4] இந்த நிலநடுக்கத்தின் பின்னர் 4.8 Mw வரையான பல பின்னதிர்வுகள் இடம்பெற்றன.[3]

இந்நிலநடுக்கத்தினால் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெத்ரீனியா நகரில் பல கட்டடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்தன.[5] நகரின் அரைவாசிப் பகுதி சேதமடைந்ததாக நகர முதல்வர் தாரிங்கோ தும்போவிச் அறிவித்தார்.[6][7][8][9]

இந்நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு குரோவாசியா, மற்றும் அயல் நாடுகளான சுலோவீனியா, ஆஸ்திரியா, பொசுனியா எர்செகோவினா, செர்பியா, அங்கேரி, சிலோவாக்கியா, இத்தாலி ஆகியவற்றின் பல பகுதிகளிலும், அத்துடன் மொண்டெனேகுரோ, ஜெர்மனி, செக் குடியரசு வரை உணரப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]