2020 ஐசிசி உலக இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 ஐசிசி உலக இருபது20
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வகைபன்னாட்டு இருபது20
நடத்துனர்(கள்) ஆத்திரேலியா
2016
2022 →

2020 ஐசிசி உலக இருபது20 (2020 ICC World Twenty20) என்பது 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்.[1] இது அக்டோபர் 18 தொடங்கி நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. இதன் இறுதிப்போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெறும்.

தகுதி[தொகு]

31 திசம்பர் 2018 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் முதல் 9 அணிகள் மற்றும் தொடரின் நடத்துனரான ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகளும் 2020 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. அவற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் சிறப்பு 12கள் சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த இரு அணிகளும், 2020 தகுதி-காண் போட்டிகள் மூலம் தகுதிபெறவுள்ள 6 அணிகளுடன் சேர்ந்து குழுநிலைப் போட்டிகளில் மோதும். பிறகு குழுநிலைப் போட்டிகளில் இருந்து முதல் 4 அணிகள் சிறப்பு 12கள் சுற்றுக்கு முன்னேறும்.


தகுதி பெறும் காரணம் நாள் நிகழிடம் மொத்த அணிகள் அணிகள்
நடைபெறும் நாடு 10 பெப்ரவரி 2015 1  ஆத்திரேலியா
ஐசிசி இருபது20 வாகை
(தரவரிசையின் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள்)
31 டிசம்பர் 2018 பல்வேறு 9  பாக்கித்தான்
 இந்தியா
 இங்கிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 நியூசிலாந்து
 மேற்கிந்தியத் தீவுகள்
 ஆப்கானித்தான்
 இலங்கை
 வங்காளதேசம்
2019 ஐசிசி உலக இருபது20 தகுதி-காண் போட்டிகள் 11 அக்டோபர்–3 நவம்பர் 2019 ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி ஐக்கிய அரபு அமீரகம் 6 TBD
மொத்தம் 16

நிகழிடங்கள்[தொகு]

சனவரி 2018இல் பின்வரும் நிகழிடங்களை ஐசிசி அறிவித்தது:[2]

அடிலெயிட் பிரிஸ்பேன் கீலோங் ஹோபார்ட்
அடிலெய்டு ஓவல் த காபா கர்தீனியா பூங்கா பெல்லரைவ் ஓவல்
கொள்ளளவு: 53,500 கொள்ளளவு: 42,000 கொள்ளளவு: 34,000 கொள்ளளவு: 20,000
Adelaide city centre view crop.jpg Australia vs South Africa.jpg Skilled-stadium-geelong.jpg Bellerive oval hobart.jpg
போட்டிகள்: 6
(அரையிறுதி உட்பட)
போட்டிகள்: 4 போட்டிகள்: 6 போட்டிகள்: 8
மெல்பேர்ண் பேர்த் சிட்னி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் பேர்த் அரங்கம் சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 100,024 கொள்ளளவு: 60,000 கொள்ளளவு: 46,000
2017 AFL Grand Final panorama during national anthem.jpg E37 Perth Stadium Open Day 089.JPG Sydney Cricket Ground (24509044622).jpg
போட்டிகள்: 7
(இறுதி உட்பட)
போட்டிகள்: 6 போட்டிகள்: 7
(அரையிறுதி உட்பட)


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2020_ஐசிசி_உலக_இருபது20&oldid=2794533" இருந்து மீள்விக்கப்பட்டது