2020 இல் இலங்கை
Appearance
| |||||
பத்தாண்டுகள்: |
| ||||
---|---|---|---|---|---|
இவற்றையும் பார்க்க: |
2020 இல் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
ஆட்சியாளர்கள்
[தொகு]தேசியம்
[தொகு]- அரசுத்தலைவர் – கோட்டாபய ராஜபக்ச
- பிரதமர் – மகிந்த ராசபக்ச
- தலைமை நீதிபதி – ஜயந்த ஜயசூரியா
- சட்டமா அதிபர் –
- மன்றாடியார் நாயகம் –
மாகாணம்
[தொகு]- ஆளுநர்கள்
- மத்திய மாகாணம் – லலித் கமகே
- கிழக்கு மாகாணம் – அனுராதா யகம்பத்
- வடமத்திய மாகாணம் – திச விதாரண
- வட மாகாணம் – பி. எஸ். எம். சார்லசு
- வடமேல் மாகாணம் – ஏ. ஜெ. எம். முசம்ம்மில்]]
- சப்ரகமுவா மாகாணம் – திக்கிரி கொப்பேக்கடுவா
- தென் மாகாணம் - வில்லி கமகே
- ஊவா மாகாணம் - ராஜா கொலூர்
- மேல் மாகாணம் – சீதா அரம்பேப்பொல
நிகழ்வுகள்
[தொகு]சனவரி
[தொகு]- 3 சனவரி – அப்புத்தளை அருகே விமானப் படையில் சிறிய ரக கார்பின் வை-12 ரக வானூர்தி வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த இலங்கை வான்படையினர் நால்வரும் உயிரிழந்தனர்.[1]
- 12 சனவரி – பிரபல சிங்கள நாடகத், திரைப்பட நடிகர் ஜயலத் மனோரத்தின தனது 71-வது அகவையில் மூளைப் புற்றுநோய் காரணமாகக் காலமானார்.[2]
- 25 சனவரி – 2019–20 வூகான் கொரோனாவைரசுத் தொற்று: இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று பரவிய முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார். இவர் ஒரு சீனப் பெண் ஆவார்.[3]
பெப்ரவரி
[தொகு]- 1 பெப்ரவரி – 2019–20 வூகான் கொரோனாவைரசுத் தொற்று: சீனாவின் வூகான் நகரில் சிக்கியிருந்த 33 இலங்கை மாணவர்கள் சிறீலங்கன் ஏர்லைன்சு சிறப்பு விமானத்தில் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் அடூத்த 14 நாட்களுக்கு தியத்தலாவை இராணுவ சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.[4]
- 14 பெப்ரவரி – இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா 2009 நான்காம் ஈழப்போரின் போது அவருடைய கட்டளைப் பொறுப்புக் காரணமாக பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதற்கான 'நம்பகமான' சான்றுகள் உள்ளதெனக் கூறி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஐக்கிய அமெரிக்காவினுள் நுழைவதற்கு அமெரிக்க அரசுத் திணைக்களம் தடை விதித்தது.[5][6]
விடுமுறைகள்
[தொகு]2020 இல் அரசாங்க, வர்த்தக, வங்கி விடுமுறைகள்[7]
- சனவரி 10 வெள்ளி – துருது பௌர்ணமி*†
- சனவரி 15 புதன் – தைப்பொங்கல்*†‡
- பெப்ரவரி 4 செவ்வாய் – சுதந்திர நாள்*†‡
- பெப்ரவரி 8 சனி – நவம் பௌர்ணமி*†
- பெப்ரவரி 21 வெள்ளி – மகா சிவராத்திரி*†
- மார்ச் 9 திங்கள் – மெதின் பௌர்ணமி*†
- ஏப்ரல் 7 செவ்வாய் – பக் பௌர்ணமி*†
- ஏப்ரல் 10 வெள்ளி – பெரிய வெள்ளி*†
- ஏப்ரல் 12 ஞாயிறு – சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய நாள்*†‡
- ஏப்ரல் 13 திங்கள் – சிங்கள, தமிழ் புத்தாண்டு*†‡
- ஏப்ரல் 14 செவ்வாய் – சிரப்பு வங்கி விடுமுறை†
- மே 1 வெள்ளி – மே நாள்*†‡
- மே 7 வியாழன் – வெசாக் பௌர்ணமி*†
- மே 8 வெள்ளி – வெசாக் (2ம் நாள்)*†‡
- மே 25 திங்கள் – ரமழான் *†
- சூன் 5 வெள்ளி – போசன் பௌர்ணமி*†
- சூலை 4 சனி – எசல பௌர்ணமி*†
- ஆகத்து 1 சனி – ஹஜ்*†
- ஆகத்து 3 திங்கள் – நிக்கினி பௌர்ணமி*†
- செப்டம்பர் 1 செவ்வாய் – பினரா பௌர்ணமி*†
- அக்டோபர் 1 வியாழன் - அதி-வப் பௌர்ணமி*†
- அக்டோபர் 30 வெள்ளி – வப் பௌர்ணமி*†
- அக்டோபர் 30 வெள்ளி – நபிகள் பிறந்த நாள்*†‡
- நவம்பர் 14 சனி – தீபாவளி*†
- நவம்பர் 29 ஞாயிறு - இல் பௌர்ணமி*†
- திசம்பர் 25 வெள்ளி – நத்தார்*†‡
- திசம்பர் 29 செவ்வாய் – உந்துவப் பௌர்ணமி*†
- பொது விடுமுறை *
- வங்கி விடுமுறை †
- வர்த்தக விடுமுறை ‡
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Four air force personnel killed in aircraft crash at Haputale". Ada Derana. 3 January 2020. http://www.adaderana.lk/news/59999/four-air-force-personnel-killed-in-aircraft-crash-at-haputale. பார்த்த நாள்: 3 January 2020.
- ↑ Veteran actor Jayalath Manirathna passes away
- ↑ "Sri Lanka confirms first case of coronavirus: health official" (in en). Reuters. 2020-01-27. https://www.reuters.com/article/us-health-china-sri-lanka-idUSKBN1ZQ1WF.
- ↑ "வுஹான் நகர மாணவர்களை மீட்கும் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை குழு". வீரகேசரி. 2020-02-01. https://www.virakesari.lk/article/74673.
- ↑ "US bans visits by Sri Lanka army chief over war crimes". டெய்லி மிரர். 2020-02-14. http://www.dailymirror.lk/top_story/US-bans-visits-by-Sri-Lanka-army-chief-over-war-crimes/155-183145.
- ↑ Daphne Psaledakis (14 பெப்ரவரி 2020). "U.S. bans Sri Lankan army chief from entry, citing civil war abuses". reuters. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ "SRI LANKA DESK CALENDAR - 2020:" (PDF). Department of Government Printing. 1 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.