2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன-இந்தியா எல்லைச் சன்டைகள்
இந்திய-சீன எல்லைப் பிணக்குகள் பகுதி
Kashmir Region (2020 skirmish locations).jpg
காஷ்மீரின் சிஐஏ வரைபடம்
நாள் 5 மே 2020 – தற்போது வரை
இடம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC), இந்திய-சீனா எல்லை
முடிவு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு
பிரிவினர்
 இந்தியா  சீனா
தளபதிகள், தலைவர்கள்
Flag of Indian Army.svgஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே
(இந்திய இராணுவத் தலைவர்)
Flag of Indian Army.svg லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ் குமார் ஜோஷி
(வடக்கு கட்டளை பிரிவு)
Flag of Indian Army.svg லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், (14-படைப் பிரிவுத் தலைவர்)
[1]
Flag of Indian Army.svg மேஜர் ஜெனரல் அபிஜித் பப்பத்
(கட்டளை அதிகாரி, (தரைப்படையின் 3-வது பிரிவு)[2]
Flag of Indian Army.svg கர்ணல் விஜய் ராணே (மோதலில் காயமடைந்தவர்]])[3]
(கட்டளை அதிகாரி, 11-வது மகர் ரெஜிமென்ட் )
Flag of Indian Army.svgகர்ணல் சந்தோஷ் பாபு (மோதலில் கொல்லப்பட்டவர்)[4]
(கட்டளை அதிகார், 16-வது பிரிவு, பிகார் ரெஜிமெண்ட்)
Ground Force Flag of the People's Republic of China.svg ஜெனரல் ஹான் வேய்குயோ
கட்டளை அதிகாரி, (மக்கள் விடுதலை இராணுவம்)
Ground Force Flag of the People's Republic of China.svgலெப்டினன்ட் ஜெனரல் சாங் சூலின்
(மேற்கு பிரிவின் கட்டளை அதிகாரி)[5]
Ground Force Flag of the People's Republic of China.svg மேஜர் ஜெனரல் லியூ லின்
(கட்டளை அதிகாரி, தெற்கு சிஞ்சியாங்[1]
படைப் பிரிவுகள்
இந்தியப் பாதுகாப்புப் படைகள்

இந்திய - திபெத் எல்லைக் காவல்படை

சீன ஆயுதப் படைகள்
இழப்புகள்
இந்தியத் தரப்பில்:

20 பேர் கொல்லப்பட்டனர் [5][6]
[7] கைது 10

இந்திய ஆதாரங்கள்:
43 பேர் கொல்லப்பட்டனர் (15 சூன்)[8]
காயம் 7 (10 மே)[9]

பிற நாட்டு ஆதாரங்கள்:
45 பேர் கொல்லப்பட்டனர்[10] [11][12]

2020 இந்திய-சீனா எல்லை மோதல்கள் (2020 China–India skirmishes) இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் பிரதேசத்தில், இந்திய-சீன எல்லைகளைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைந்த இந்தியாவின் கல்வான பள்ளத்தாக்கில் இந்திய-சீனப் படைகளுக்கும் இடையே 5 மே 2020 முதல் நடந்து கொண்டிருக்கும் இந்திய-சீன எல்லைப் பிணக்குகளின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் முன்னேறிய சீனப்படையிரை தடுத்து நிறுத்த வேன்டி, இந்தியப் படைகள் சூன் 15 மாலை முதல் 16 அதிகாலை வரை சீனப்படையினருடன் கைகலப்பில் ஈடுப்பட்டனர். 1996-இல் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது. எனவே இக்கைகலப்பு முற்றி, இருதரப்பும் கற்கள், தடிகள், இரும்பிக் கம்பிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். சூன் 15 -16 நாட்களில் நடைபெற்ற இந்த மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.[13]சீனத்தரப்பில் குறைந்தது ஒரு இராணுவ அதிகார் உள்ளிட்ட 43 வீரர்கள் படுகாயமடைந்திருக்கவோ அல்லது கொல்லப்பட்டிருக்க வேன்டும் என செய்திகள் வருகிறது.[8][14]மோதலின் போது சீனர்கள் பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகளை 17 சூன் 2020 அன்று விடுவித்தனர்.

பின்னணி[தொகு]

சீனா கோரும் பாங்காங் ஏரிப் பகுதி (பிங்க் நிறம்), இந்தியா கோரும் ஏரியின் பகுதி (சிவப்பு நிறம்). இந்த ஏரியின் மூன்றில் இருபகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலும், ஒரு பகுதி இந்தியாவில் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இருநாடு இடைப்பட்ட ஏரியின் எல்லைப்பகுதி சர்சைக்குரியதாக உள்ளது.
பாங்காங் ஏரியின் வடக்கு கரை[15]
with "fingers" – mountain spurs jutting into the lake[16]

6 சூன் 2020 அன்று சீனப்படையினர் உணமையான கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்தியாவின் லே மாவட்டம் மற்றும் திபெத் பகுதியில் உள்ள பாங்காங் ஏரியின் இந்தியப் பகுதியில் ஊடுவுருவி முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் தோண்டியதை, இந்திய வீரர்கள் தட்டிக் கேட்டு, கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற கட்டளையிட்டனர். இதனால் சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.[17][18]ருசியாவின் டாஸ் செய்தி நிறுவனம் பிப்ரவரி 2021இல் வெளியிட்ட செய்தியில், சீனா தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமரின் லடாக் வருகை[தொகு]

3 சூலை 2020 அன்று (வெள்ளிக் கிழமை) காலை லடாக்கின் எல்லைப் பகுதியில் உள்ள நிமு எனுமிடத்தில் இந்திய தரைப்படை, விமானாப்படை மற்றும் இந்தோ-திபெத்திய காவல் படைவீரர்களிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். அவ்வமயம் இந்திய முப்படைகளில் தலைவர் மற்றும் தரைப்படை தலைவர்கள் உடனிருந்தனர். [19][20][21] [22]சீனாவை மனதில் வைத்து, இனி எந்த நாடும் மற்ற நாட்டின் எல்லைப்பரப்பை ஆக்கிரமிக்கும் காலம் மலையேறி விட்டது என நரேந்திர மோதியின் தனது உரையில் குறிப்பிட்டார்.

அன்றே, எல்லை மோதல்களில் காயமுற்று, லே நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வீரர்களுடன் நரேந்திர மோதி உரையாடி, ஆறுதல் கூறினார்.[23][24]

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் - சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு[தொகு]

இந்திய-சீன எல்லை மோதல்கள் நடைபெறுவதை தடுக்க, 5 சூலை 2020 அன்று இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் இரண்டு மணி நேர தொலைபேசியில் பேசியதை அடுத்து, உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சீனப்படைகள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு சீனப்பகுதியில் பின்வாங்கினர்.[25][26][27]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Galwan Valley face-off: Indian, Chinese military officials meet to defuse tension". Hindustan Times. 18 June 2020. https://www.hindustantimes.com/india-news/galwan-valley-face-off-indian-chinese-military-officials-meet-to-defuse-tension/story-WPBzxRcYshSE51gGPPzTeM.html. 
 2. Anirban Bhaumik (18 June 2020). "Galwan Valley: Indian, Chinese diplomats to hold video-conference soon". Deccan Herald. https://www.deccanherald.com/national/galwan-valley-indian-chinese-diplomats-to-hold-video-conference-soon-851144.html. 
 3. "PLA Death Squads Hunted Down Indian Troops in Galwan in Savage Execution Spree, Say Survivors". News18 India.
 4. "India, Chinese troops face-off at eastern Ladakh; casualties on both sides". 16 June 2020. 17 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 Michael Safi and Hannah Ellis-Petersen (16 June 2020). "India says 20 soldiers killed on disputed Himalayan border with China". https://www.theguardian.com/world/2020/jun/16/india-says-soldiers-killed-on-disputed-himalayan-border-with-china. 
 6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :20 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. "India, China skirmishes in Ladakh, Sikkim; many hurt", The Tribune, 10 May 2020
 8. 8.0 8.1 "China suffered 43 casualties during face-off with India in Ladakh: Report". இந்தியா டுடே. 16 June 2020. https://www.indiatoday.in/india/story/india-china-face-off-ladakh-lac-chinese-casualties-pla-1689714-2020-06-16. பார்த்த நாள்: 17 June 2020. 
 9. Vedika Sud; Ben Westcott (11 May 2020). "Chinese and Indian soldiers engage in 'aggressive' cross-border skirmish". CNN. https://www.cnn.com/2020/05/11/asia/china-india-border-dispute-intl-hnk/index.html. 
 10. 45 Chinese soldiers killed during clashes with Indian troops at Galwan Valley, reveals Russian news agency
 11. 45 Chinese soldiers killed in Galwan clash June last year, Russian news agency TASS says
 12. 45 Chinese troops killed in Galwan valley clash with Indian soldiers last year
 13. "India soldiers killed in clash with Chinese forces" (in en-GB). BBC News. 16 June 2020. https://www.bbc.com/news/world-asia-53061476. 
 14. Commanding Officer of Chinese Unit among those killed in face-off with Indian troops in Galwan Valley
 15. India, Ministry of External Affairs, ed. (1962), Report of the Officials of the Governments of India and the People's Republic of China on the Boundary Question, Government of India Press, Chinese Report, Part 1 (PDF) (Report). pp. 4–5.
  The location and terrain features of this traditional customary boundary line are now described as follows in three sectors, western, middle and eastern. ... From Ane Pass southwards, the boundary line runs along the mountain ridge and passes through peak 6,127 (approximately 78° 46' E, 38° 50' N) [sic] and then southwards to the northern bank of the Pangong Lake' (approximately 78° 49' E, 33° 44' N). It crosses this lake and reaches its southern bank at approximately 78° 43' E, 33° 40' N. Then it goes in a south-easterly direction along the watershed dividing the Tongada River and the streams flowing into the Spanggur Lake until it reaches Mount Sajum.
 16. Lt Gen HS Panag (Retd) (4 June 2020). "India's Fingers have come under Chinese boots. Denial won't help us". The Print.
 17. "India needs to rid two misjudgments on border situation: Global Times editorial". Global Times. 17 June 2020. https://www.globaltimes.cn/content/1191846.shtml. பார்த்த நாள்: 17 June 2020. 
 18. "Chinese military urges India to return to correct track of dialogue, negotiations". People's Daily. 17 June 2020. http://en.people.cn/n3/2020/0617/c90000-9701202.html. பார்த்த நாள்: 17 June 2020. 
 19. PM Narendra Modi in Ladakh, accompanied by CDS Bipin Rawat and Army chief
 20. PM Modi’s Ladakh Visit Boosts Soldiers’ Morale But Takes Opposition By Surprise
 21. PM Narendra Modi's surprise visit to Ladakh: Key points
 22. PM Modi’s surprise visit to Ladakh is a game-changer
 23. Narendra Modi's Leh visit: Indian Army calls criticism of medical facility 'malicious and unsubstantiated'
 24. Army clarifies on Leh military facility visited by PM
 25. "இந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு". 2020-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-06 அன்று பார்க்கப்பட்டது.
 26. NSA Ajit Doval Held 2-hour Call With China's Foreign Min; De-escalation 'progress' At LAC
 27. NSA Ajit Doval talks to China’s Wang Yi, troops pulled back along LAC: Read full statement here

மேலும் படிக்க[தொகு]