2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2019 இலங்கைக் குண்டுவெடிப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்
புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை, தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஒன்று
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் is located in இலங்கை
கொழும்பு
கொழும்பு
நீர்கொழும்பு
நீர்கொழும்பு
மட்டக்களப்பு
மட்டக்களப்பு
தெகிவளை

தெகிவளை
தெமட்டகொடை
தெமட்டகொடை
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (இலங்கை)
இடம்கிறித்தவக் கோவில்கள்
உணவுவிடுதிகள்
  • சாங்கிரி-லா உணவு விடுதி, கொழும்பு
  • சினமன் கிராண்ட் உணவு விடுதி
  • கிங்சுபரி உணவு விடுதி
  • த டுரொப்பிக்கல் இன்
நாள்21 ஏப்ரல் 2019 (2019-04-21)
  • 08:00–08:45 முதல் ஆறு குண்டுவெடிப்புகள்
  • 14:10 தெகிவளை குண்டுவெடிப்பு
  • 14:40 - 15:20 தெமட்டகொடை குண்டுவெடிப்புகள்[1]
(இசீநே; ஒ.ச.நே + 05:30)
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்கள்[2]
இறப்பு(கள்)253[3]
காயமடைந்தோர்appr. 500[4]
தாக்கியோர்9 தற்கொலைக் குண்டுதாரிகள்[5]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
40 பேர் கைது

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள்,[9] 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர்[3] வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[10][11][12][13][14][15][16] கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.[17][18][19] இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.[20]

இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது.[6] 2019 மார்ச் 15 இல் நியூசிலாந்தில் இடம்பெற்ற கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகளுக்குப் பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைப் பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.[கு 1] இரு தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்தது.[25][26][27]

2019 ஏப்ரல் 23 அன்று, இசுலாமிய அரசு (ஐஎஸ்) என்ற இசுலாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது. தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[8] ஆனாலும், இசுலாமிய அரசுக் குழுவிற்கு எதிரான கூட்டமைப்பில் இலங்கை இல்லை எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் எனவும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது.[28] இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்து, இசுலாமிய அரசின் தலைவர் எனக் கருதப்படும் அபூ பக்கர் அல்-பக்தாதி என்பவர் 18-நிமிடங்கள் உரையாற்றிய காணொளி வெளியிடப்பட்டது.[29]

2009 ஆம் ஆண்டு ஈழப் போர் முடிவின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது பெரிய தாக்குதல் நிகழ்வுகள் இவையாகும்.[30]

பின்னணி[தொகு]

இலங்கையில் ஏறத்தாழ 7.4% மக்கள் கிறித்தவர்கள் ஆவர். இவர்களில் 82% போர்த்துக்கீச மரபு-வழி கத்தோலிக்கர் ஆவர். இலங்கைத் தமிழ் கத்தோலிக்கர் பிரான்சிஸ் சவேரியார் மற்றும் போர்த்துக்கீச மதப்பரப்புனர்களின் சமய மரபு வழி வந்தவர்கள். ஏனைய கிறித்தவர்கள் ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் சீர்திருத்தத் திருச்சபையினர் ஆவார்.[31] உயிர்ப்பு ஞாயிறு நாளன்று இலங்கையில் பெருந்தொகையான கிறித்தவர்கள் தேவாலயங்களில் இடம்பெறும் திருப்பலிப் பூசைகளில் கலந்து கொள்வது வழக்கமாகும்.[32] இந்நிகழ்வுகளில் கிறித்தவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சமயத்தவர்களும் கலந்து கொள்வர்.

தேசிய தவ்கீத் ஜமாத் என்ற தீவிரவாத இசுலாமிய அமைப்பு இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக த நியூயார்க் டைம்ஸ், ஏஎஃப்பி ஆகிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன[33][34][35] இது குறித்த தகவல்கள் நாட்டின் அமைச்சரவைக்கோ அல்லது மூத்த அரசியல்வாதிகளுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.[34][35] அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தனது டுவிட்டர் செய்திக்குறிப்பில், தேசிய தௌவீத் ஜமாத் அமைப்பின் முகம்மது சகரான் என்பவரின் தலைமையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் தனது செய்தியில் இணைத்துள்ளார். இக்கடிதத்தின்படி, இலங்கையிலுள்ள பல கிறித்தவக் கோவில்கள், இந்தியத் தூதரகம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டிருந்தன.[20][36]

தாக்குதல்கள்[தொகு]

தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது கிறித்தவர்கள் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டிருந்தார்கள். உணவு விடுதிகளில் காலை உணவை அருந்துவதற்காகப் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்நாட்டினரும் கூடியிருந்த வேளை. பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதற்காகத் இத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டிருந்தன. அனைத்துத் தாக்குதல்களும் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்டன.[34]

முதலாவது தாக்குதல் நீர்கொழும்பு, புனித செபஸ்தியான் கோவிலில் இடம்பெற்றது. இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[34][37] இரண்டாவது தாக்குதல் கொழும்பு, புனித அந்தோனியார் கோவிலில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[38]

மூன்றாவது தாக்குதல் நாட்டின் மற்றொரு புறத்தில் மட்டக்களப்பு நகரில் சீர்திருத்தத் திருச்சபையின் சீயோன் தேவாலயம் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.[39]

2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் is located in Colombo District
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்
கொழும்பு குண்டுவெடிப்புகளின் அமைவிடங்கள்
கொச்சிக்கடை தேவாலயம்; சங்கிரி-லா உணவகம்;
கிங்சுபரி உணவகம்; சினமன் கிராண்ட் உணவகம்; டுரொப்பிக் இன் உணவகம்
குண்டுத்தாக்குதல்களின் காலக்கோடு[40]
நேரம் (ஒ.ச.நே + 05:30) அமைவிடங்கள்[1][41]
காலை 8:25

நீர்கொழும்பு: கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் கோவில்

காலை 8:45 கொழும்பு: புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை
காலை 9:05 மட்டக்களப்பு: சீயோன் தேவாலயம்
காலை 9.15 - 9.20 கொழும்பு: சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம், சங்கிரி-லா உணவகம்
பிற்பகல் 2:00 தெகிவளை: டுரொப்பிக்கல் இன்
பிற்பகல் 2:15 தெமட்டகொடை: வீட்டுத் திட்டம்

கிறித்தவத் தேவாலயங்கள்[தொகு]

Survived statue of Risen Jesus with blast marks and human blood after the Easter attack.

முதலாவது தாக்குதல் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற புனித அந்தோனியார் கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் கொழும்பின் வடக்கே கிறித்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியான் கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடத்தப்பட்டது.[38] பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.[34][42][43][44] இந்த இரண்டாவது தாக்குதலில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர்.[42][43]

தேவாலயங்கள் மீதான மூன்றாவது தாக்குதல் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் உள்ள கிறித்தவ சீர்திருத்த சபையின் நற்செய்திப் பறைசாற்று இயக்கக் கோவிலான சீயோன் தேவாலயம் மீது நடத்தப்பட்டது.[45] இத்தாக்குதலில் குறைந்தது 27 கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஞாயிறு பாடசாலையில் பயின்று வந்த சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது.[17][42][43] 300 இற்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மருத்துவமனை தெரிவித்தது.[19]

தங்கும் விடுதிகள்[தொகு]

தாக்குதல்களுக்குள்ளான மூன்று 5-நட்சத்திர தங்கும் விடுதிகள்: சாங்கிரி-லா விடுதி, சின்னமன் கிராண்ட் விடுதி, கிங்ஸ்பரி விடுதி ஆகியனவாகும். இவை கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ளன.[10][46]

சாங்கிரி-லா விடுதியில் காலை 08:57 மணிக்கு குண்டுவெடிப்பு நடைபெற்றது. விடுதியின் மூன்றாம் தளத்திலுள்ள "டேபிள் ஒன்" என்ற உணவகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த காலை உணவு நேரத்தில் தாக்குதல் நடந்தது.[47] இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரும் முதல் நாள் அங்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் உணவகத்திலும், மற்றவர் மூன்றாம் மாடியின் வேறோர் இடத்திலும் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.[48]

சின்னமன் கிராண்ட் விடுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அவ்விடுதியில் பொய்யான பெயரில் தான் ஒரு வர்த்தகர் எனக் கூறித் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.[48] இங்குள்ள "டாப்பிரபேன் உணவகத்தில்" காலை உணவுக்காக வரிசையில் நின்றவர்களுடன் இணைந்து இவரும் நின்று குண்டை வெடிக்க வைத்துள்ளார். இத்தாக்குதலில் அங்கு நின்றிருந்த உணவக முகாமையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.[49]

கொழும்பிலுள்ள உலக வரத்தக மையத்துக்கு அருகிலுள்ள கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியில் இன்னொரு தாக்குதல் இடம்பெற்றது.

பிற்பகல் வேளையில், கொழும்பின் தெற்குப் புறநகரான தெகிவளையில் உள்ள தெகிவளை விலங்கியல் பூங்காவிற்கு அருகில் உள்ள "ட்ராப்பிக் இன்" என்ற விடுதியில் குண்டு ஒன்று வெடித்தது. இங்கு இருவர் கொல்லப்பட்டனர்.[50][51][52]

தெமட்டகொடை தாக்குதல்[தொகு]

கொழும்பின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேலும் குண்டுகள் வெடித்தன. கொழும்பு, தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் குண்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்ட போது, குண்டுகள் வெடித்ததில் மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[53][54]

பாதிக்கப்பட்டோர்[தொகு]

தேசியம் வாரியாகக் கொல்லப்பட்டோர்[55]
தேசியம் கொல்லப்பட்டோர்
 இலங்கை 207
 இந்தியா[56][57] 12
 சீனா[58] 6
 ஐக்கிய இராச்சியம்[59] 6
 டென்மார்க்[60] 3
 நெதர்லாந்து[61] 3[கு 2]
 ஆத்திரேலியா[62] 2
 சவூதி அரேபியா[63][64] 2
 எசுப்பானியா[65] 2
 துருக்கி[66] 2
 ஐக்கிய இராச்சியம்/ ஐக்கிய அமெரிக்கா[67] 2
 ஐக்கிய அமெரிக்கா[68] 2
 வங்காளதேசம்[69] 1
 சப்பான்[70] 1
 போர்த்துகல்[71] 1
 சுவிட்சர்லாந்து[72] 1
Total 253[கு 3]

இக்குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்தனர்,[3] 500 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் ஆவர், 39 பேர் வெளிநாட்டவர்கள்[9]

இறந்தவர்களில் இலங்கைத் தொலைக்காட்சி சமையல் நிபுணர் சாந்தா மாயாதுன்னையும் அவரது மகளும் அடங்குவர். இவர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சற்று முன்னர் உணவகத்தில் உணவருந்திய படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.[73] டென்மார்க் தொழிலதிபர் ஆன்டர்சு பவுல்சென் என்பவரின் மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள்.[74] வங்காளதேச அரசியல்வாதி சேக் பசுலுல் செலிம் என்பவரின் பேரன் இறந்தவர்களில் ஒருவர் ஆவார்.[75][76][77] இந்திய சமயச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.[77] இறந்த வெளிநாட்டவர்களில் குறைந்தது 8 பேர் சிறுவர்கள் ஆவர்.[72][77][78]

ஏப்ரல் 23 அன்று, இறந்தவர்கள் பலரின் முதலாவது அடக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கையில் இந்நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.[79]

குறிப்புகள்[தொகு]

  1. பார்க்க [21][22][23][24]
  2. இவர்களில் ஒருவர் சுவிசு-இடச்சுக் குடியுரிமையாளரும், இன்னும் ஒருவர் இடச்சு-இலங்கைக் குடியுரிமையாளர் ஆவார்.
  3. இவர்களில் ஒருவர் இன்னும் ஒரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டுள்ளார். இலங்கைக் குடியுரிமையைக் கொண்ட இலங்கை-சுவிட்சர்லாந்து குடும்பம் இங்கு சேர்க்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Thomas, Kris. "Easter Sunday Explosions In Sri Lanka: An Evolving Timeline Of Events". Roar Media. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  2. "Attacks carried out by suicide bombers, Govt. Analyst confirms". 22 April 2019. http://www.adaderana.lk/news/54531/attacks-carried-out-by-suicide-bombers-govt-analyst-confirms. 
  3. 3.0 3.1 3.2 "Sri Lanka toll revised down by 'about 100'". BBC News. 25 April 2019. https://www.bbc.co.uk/news/world-asia-48059328. 
  4. "Death toll from Easter Sunday attacks climbs to 321". AdaDerana. 23 April 2019. http://www.adaderana.lk/news/54578/death-toll-from-easter-sunday-attacks-climbs-to-321. பார்த்த நாள்: 23 April 2019. 
  5. Times, The New York (24 April 2019). "Sri Lanka Attacks: What We Know and Don't Know". The New York Times.
  6. 6.0 6.1 "The Latest: Sri Lanka: local militants carried out attacks - SFChronicle.com". www.sfchronicle.com. 22 April 2019 இம் மூலத்தில் இருந்து 22 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190422091123/https://www.sfchronicle.com/news/crime/article/The-Latest-Curfew-lifted-after-Sri-Lankan-13784450.php. பார்த்த நாள்: 22 April 2019. 
  7. "Daesh says its 'fighters' behind Sri Lanka bombings". DailySabah.
  8. 8.0 8.1 "Sri Lanka bombings: Isis claims responsibility for deadly church and hotel attacks on Easter Sunday". The Independent. 23 April 2019. https://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-bombings-isis-terror-church-attack-easter-islamic-state-a8882231.html. 
  9. 9.0 9.1 "Sri Lanka's minister of tourism says that 39 foreign tourists were killed in the attacks and 28 others are wounded". Sky News. 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  10. 10.0 10.1 Bastians, Dharisha; Gettleman, Jeffrey; Schultz, Kai (21 April 2019). "Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Over 200" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html. 
  11. "Sri Lanka attacks: Death toll soars to 290". BBC. 22 April 2019. https://www.bbc.co.uk/news/world-asia-48008073. பார்த்த நாள்: 22 April 2019. 
  12. "Death toll from Easter blasts at Sri Lanka hotels and churches rises to 290, 13 arrested". SBS. 22-04-2019. https://www.sbs.com.au/news/death-toll-from-easter-blasts-at-sri-lanka-hotels-and-churches-rises-to-290-13-arrested. பார்த்த நாள்: 22-04-2019. 
  13. "Multiple explosions in Sri Lanka: Blasts during Easter Sunday service in Colombo". The National (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  14. "Easter Day bombs kill 138 in attacks on Sri Lankan churches, hotels" (in en). Reuters. 21 April 2019. https://www.reuters.com/article/us-sri-lanka-blast-idUSKCN1RX038. 
  15. Pokharel, Sugam; McKirdy, Euan (21 April 2019). "Sri Lanka blasts: At least 138 dead and more than 400 injured in multiple church and hotel explosions" (in en). CNN. https://www.cnn.com/2019/04/21/asia/sri-lanka-explosions/index.html. 
  16. Bastians, Dharisha; Gettleman, Jeffrey; Schultz, Kai (21 April 2019). "Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Almost 200" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html. 
  17. 17.0 17.1 "Sri Lanka explosions: 137 killed as churches and hotels targeted". BBC News. 21 April 2019. https://www.bbc.com/news/world-asia-48001720. பார்த்த நாள்: 21 April 2019. 
  18. "Multiple blasts hit Sri Lanka churches, hotels on Easter Sunday". aljazeera.com. Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  19. 19.0 19.1 "Sri Lanka blasts: hundreds injured in church and hotel explosions". தி கார்டியன். 21 April 2019. https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-explosions-80-believed-injured-in-blasts-at-two-churches. பார்த்த நாள்: 20 April 2019. 
  20. 20.0 20.1 "இலங்கை குண்டுவெடிப்பு: தாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கை? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: அமைச்சர் கேள்வி". பிபிசி தமிழ். 22-4-2019. https://www.bbc.com/tamil/sri-lanka-48008883?ocid=socialflow_facebook. பார்த்த நாள்: 22-04-2019. 
  21. "Bombings were response to Christchurch shooting – State Minister". Ada derana. DeranaTV. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  22. "State Defense Minister: Bombings were retaliation for Christchurch killings". CNN. 23 April 2019. https://edition.cnn.com/asia/live-news/sri-lanka-attacks-churches-hotels-dle-intl/index.html. பார்த்த நாள்: 23 April 2019. 
  23. Wade, Matt (23 April 2019). "Sri Lankan attacks 'retaliation for Christchurch': minister". The Sydney Morning Herald.
  24. "Sri Lanka blasts were in retaliation for New Zealand mosque shootings, official says". Washington Post. 23 April 2019. https://www.washingtonpost.com/world/sri-lanka-bombings-latest-updates/2019/04/22/f2afe32a-6531-11e9-a698-2a8f808c9cfb_story.html. பார்த்த நாள்: 23 April 2019. 
  25. "New Zealand PM says no intelligence linking Sri Lanka attacks to Christchurch". Reuters. 24 April 2019. https://www.reuters.com/article/us-sri-lanka-blasts-newzealand/new-zealand-pm-says-no-intelligence-linking-sri-lanka-attacks-to-christchurch-idUSKCN1RZ2K4. 
  26. "Sri Lanka: Nearly 300 dead, Kiwi security expert says attacks unlikely to be linked to Christchurch". NZ Herald. 23 April 2019. https://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=12224350. 
  27. "ISIS fanatics celebrate SL attacks". Daily mirror. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  28. "Easter bombings victims identified". NewsComAu. 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
  29. "Abu Bakr al Baghdadi: Video emerges of 'Islamic State leader alive'". Sky News. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
  30. "Sri Lanka bombings: 138 killed, 400 injured as explosions rock Catholic churches during during Easter service". The Sydney Morning Herald (in ஆங்கிலம்). 21 April 2019. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  31. "Sri Lanka – Christianity". Mongabay.
  32. Khushbu Shah; Sean Collins (21 April 2019). "Sri Lanka Easter Sunday attacks: what we know" (in English). Vox Media. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  33. https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-explosion.html?smid=fb-nytimes&smtyp=cur
  34. 34.0 34.1 34.2 34.3 34.4 Burke, Jason; Perera, Amantha (21 April 2019). "Sri Lanka death toll expected to rise as leaders condemn killings". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  35. 35.0 35.1 n/a, n/a (2019-04-21). "Police Advisory". AFP. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
  36. "Harin tweets intelligence memo warning of a planned attack". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  37. "Sri Lanka Attacks: What We Know And Don't Know"; New York Times:24 April. 2019
  38. 38.0 38.1 "Who is behind the Sri Lanka bombings? - Current News Times". www.currentnewstimes.com. Archived from the original on 21 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  39. "Sri Lanka Attacks: What We Know And Don't Know"; New York Times, 24 April 2019
  40. "Easter Sunday massacres: Where do we go from here?".
  41. Malone, Theresa; Levett, Cath (22 April 2019). "Sri Lanka bombings – a timeline and visual guide" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2019/apr/22/sri-lanka-bombings-a-timeline-and-visual-guide. 
  42. 42.0 42.1 42.2 Irugalbandara, Ramesh (21 April 2019). "LIVE: Death toll in Easter Sunday explosions crosses 160". நியூஸ் பெர்ஸ்ட். https://www.newsfirst.lk/2019/04/21/explosion-at-the-st-anthonys-church-in-kochikade/. பார்த்த நாள்: 21 April 2019. 
  43. 43.0 43.1 43.2 Bastians, Dharisha; Schultz, Kai (21 April 2019). "Sri Lanka Bombings Target Churches and Hotels, Killing at Least 48". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html. பார்த்த நாள்: 20 April 2019. 
  44. Sri Lanka church and hotel explosions: More than 200 dead in Easter Sunday bomb attacks. The Telegraph, 21 April 2019.
  45. "Sri Lanka Bombings Live Updates: Deadly Carnage at Churches and Hotels" (in en-US). The New York Times. 21 April 2019. https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-explosion.html. 
  46. "Three more explosions Kingsbury, Shangri-La, Cinnamon Grand". Daily News. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  47. "Sri Lanka Suicide Bombings Targeting Christians Kill Hundreds". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  48. 48.0 48.1 "கொழும்பு குண்டுவெடிப்பு: முதல்நாளே அறைகளை பதிவு செய்துகொண்ட குண்டுதாரிகள்". SBS. 22-04-2019. பார்க்கப்பட்ட நாள் 22-04-2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  49. "Sri Lanka bomber queued at hotel buffet then unleashed devastation". Yahoo News. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  50. "Another explosion rocks Dehiwala". பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  51. "Seventh bomb explosion heard at Sri Lanka Tropical Inn as Easter Sunday attacks continue". 21 April 2019. https://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-blast-news-latest-bombing-death-toll-attack-colombo-a8879796.html. 
  52. "Sri Lanka bomb blasts LIVE updates: Eighth blast occurs in Colombo's Orugodawatta, no casualties reported yet". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  53. "BREAKING: Three police officers killed in house raid". CNN. 21 April 2019. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  54. "Attacks on Sri Lanka churches and hotels". CNN. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  55. "Who are the victims of the Sri Lanka attacks?". 22 April 2019 – via www.bbc.com.
  56. "Sri Lanka blasts: 11 Indians dead, bodies of 7 JDS members to reach Karnataka". https://www.indiatoday.in/world/story/sri-lanka-blasts-11-indians-dead-bodies-of-7-jds-members-to-reach-karnataka-1508758-2019-04-24#close-overlay. பார்த்த நாள்: 23 April 2019. 
  57. Dubai resident missing after Sri Lanka attacks confirmed dead
  58. "Missing Chinese national confirmed dead after Colombo bombings: Chinese embassy". 25 April 2019. https://www.shine.cn/news/nation/1904253673/. 
  59. "Sri Lanka attacks: Eight Britons killed in explosions". https://www.bbc.com/news/uk-48004465. பார்த்த நாள்: 22 April 2019. 
  60. "Three children of Danish billionaire killed in Sri Lanka attacks". https://www.reuters.com/article/us-sri-lanka-blasts-denmark/three-children-of-danish-billionaire-killed-in-sri-lanka-attacks-idUSKCN1RY0IB. பார்த்த நாள்: 22 April 2019. 
  61. "Nog twee Nederlandse slachtoffers onder doden Sri Lanka". Volkskrant. Volkskrant. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  62. "Two Australians confirmed dead in Sri Lanka Easter Sunday terror attacks". https://www.theguardian.com/world/2019/apr/22/two-australians-confirmed-dead-in-sri-lanka-easter-sunday-terror-attacks. பார்த்த நாள்: 22 April 2019. 
  63. "2 Saudis among Victims of Sri Lanka Bombings". Asharq Al-Awsat. 23 April 2019 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190426040241/https://aawsat.com/english/home/article/1691521/2-saudis-among-victims-sri-lanka-bombings. 
  64. "Saudi Arabian Airlines Statement". Twitter. 23 April 2019. https://twitter.com/svmedia_center/status/1120621486346207232. 
  65. "Una pareja de españoles, entre las víctimas mortales de los atentados de Sri Lanka". El País. 22 April 2019. https://elpais.com/politica/2019/04/22/actualidad/1555949479_395920.html. பார்த்த நாள்: 22 April 2019. 
  66. "2 Turkish engineers among dead in Sri Lanka bombings". https://www.aa.com.tr/en/asia-pacific/2-turkish-engineers-among-dead-in-sri-lanka-bombings/1458989. பார்த்த நாள்: 22 April 2019. 
  67. Gardner, Bill; Johnson, Jamie (23 April 2019). "Grieving father tells how he lost two teenage children in Sri Lanka bombings". The Telegraph. https://www.telegraph.co.uk/news/2019/04/23/perhaps-could-have-saved-says-father-two-british-teenagers-killed/. பார்த்த நாள்: 25 April 2019. 
  68. "A billionaire’s children, a D.C. fifth-grader, a celebrity chef: the victims in Sri Lanka". https://www.washingtonpost.com/world/2019/04/22/celebrity-chef-children-denmark-billionaire-among-dead-sri-lanka-bomb-attacks/. 
  69. "Sheikh Selim’s minor grandson dies in Sri Lanka bombings". bdnews24.com. 22 April 2019. https://bdnews24.com/bangladesh/2019/04/21/sheikh-selims-minor-grandson-dies-in-sri-lanka-bombings. பார்த்த நாள்: 22 April 2019. 
  70. "One Japanese national killed, four others injured as Sri Lanka attacks rock expat community". https://www.japantimes.co.jp/news/2019/04/22/national/taro-kono-sends-sympathy-sri-lanka-terror-attacks-amid-report-japanese-among-fatalities/. பார்த்த நாள்: 22 April 2019. 
  71. "Rui Lucas morreu às mãos dos terroristas no Sri Lanka. Português de 31 anos estava em lua de mel". https://www.cmjornal.pt/portugal/detalhe/rui-lucas-morreu-as-maos-dos-terroristas-no-sri-lanka-portugues-de-31-anos-estava-em-lua-de-mel. பார்த்த நாள்: 22 April 2019. 
  72. 72.0 72.1 "Sri Lanka attacks: tributes paid as two more victims named - live news". The Guardian. 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  73. Davidson, Tom (21 April 2019). "Tragic last picture hours before TV chef and daughter killed in Sri Lanka attack". Mirror. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  74. Goodley, Simon (22 April 2019). "Three children of Asos billionaire killed in Sri Lanka attacks". The Guardian. The Guardian. https://www.theguardian.com/world/2019/apr/22/asos-billionaire-loses-three-children-sri-lanka-anders-holch-povlsen. பார்த்த நாள்: 22 April 2019. 
  75. "Sheikh Selim's son-in-law, grandson, injured in Sri Lanka bomb blast". Dhaka Tribune. 21 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  76. "Father's tribute to 'wonderful wife' and 'amazing children' killed in Sri Lanka hotel blast". ITV. 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  77. 77.0 77.1 77.2 "Sri Lanka attacks: Who are the victims?". BBC. 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  78. "Australian man recalls horror of finding wife and daughter dead in Sri Lanka attack". The Guardian. 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  79. "Sri Lanka attacks: Mass funeral on day of mourning". 23 April 2019. https://www.bbc.com/news/world-asia-48019189. பார்த்த நாள்: 23 April 2019.