2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு
DPRK–அமெரிக்க சிங்கப்பூர் உச்சி மாநாடு
[[File:
Logo used by Singapore

Logo used by the United States

கிம் ஜொங்-உன் மற்றும் டோனால்ட் டிரம்ப் உச்சி மாநாட்டின் தொடக்கத்தின் போது கைகுலுக்கிக்கொள்ளும் காட்சி|frameless|alt=|]]
இடம்பெற்ற நாடு சிங்கப்பூர்
தேதிசூன் 12, 2018
09:00 சிங்கப்பூர் திட்ட நேரம் (01:00 ஒ. ச. நே)
இடம்கேபெல்லா, சிங்கப்பூர்[1]
பங்குகொள்வோர்
2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு
North Korean Name
Chosŏn'gŭl조미 수뇌상봉
South Korean Name
அங்குல் எழுத்துமுறை북미 정상회담
Hanja北美 頂上會談

டோனால்ட் டிரம்ப் (Donald Trump), அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர், வட கொரியாவின் அதிபர் கிம் ஜொங்-உன் ஆகியோர் சூன் 12, 2018 அன்று இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான முதல் உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்டனர்.[2] உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ட்ரம்ப் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து இனிமேல் போர் ஒத்திகையில் ஈடுபடாது என்று உறுதியளித்தார். வட கொரிய அதிபர் கிம் முழுமையான அணு ஆயுத ஒழிப்பை நோக்கிய தனது பணியின் மீதான உறுதிப்பாட்டை மீள வலியுறுத்தினார்.

சிங்கப்பூர், இரு தரப்பினராலும் அரசியல் அமைதிப் பிரதேசமாக கருதப்பட்டதால், செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற உச்சிமாநாட்டை நடத்துவதற்கான முழுமையான தயாரிப்புகளை மேற்கொண்டது. சிங்கப்பூர் பிரதம அமைச்சர் லீசியன் லூங்கின் கூற்றுப்படி இந்த உச்சி மாநாட்டிற்கான செலவானது சிங்கப்பூர் டாலரில் 20 மில்லியன் (அமெரிக்க டாலரில் 15 மில்லியன்) எனவும், இத்தொகையில் பாதியளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவழிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[3] இரண்டு தலைவர்களுமே சிங்கப்பூர் பிரதமர் லீயுடன் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக சந்திப்பு நிகழ்த்தினர்.[4]

பின்னணி[தொகு]

கொரிய தீபகற்பமானது 1945 ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து கிடக்கிறது. 1950–1953 காலகட்டத்தில் நடந்த கொரியப் போர் கொரிய சமரச ஒப்பந்தத்துடன் நிறைவுக்கு வந்தது. ஆனால், அது இறுதியான அமைதிக்கான ஒப்பந்தமல்ல. அவ்வப்போது, தொடர்ச்சியற்ற பிணக்குகளும், சச்சரவுகளும் தொடர்ந்தன. அமெரிக்கப் படைகள் தெற்குப் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருந்தன. வட கொரியாவானது 1963 ஆம் ஆண்டில் ஒரு அணு உலையைக் கட்டத் தொடங்கியது. 1980 களில் வட கொரிய பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டம் ஒன்றைத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பிற்கான கூட்டுத் தீர்மானத்தில் வட கொரியா அணு ஆயுத ஒழிப்பிற்கான உறுதியை முதலில் அளித்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் வட கொரியவை தனது 2002 ஆம் ஆண்டு உரையின் போது “தீமையின் அச்சு” எனக் குறிப்பிட்டார். [5]ஆனால், அவரது நிர்வாகக் காலத்தின் முடிவு நெருங்கும் போது, வட கொரியா தானாகவே முன்வந்து தங்களது அணு ஆயுதத் திட்டம் தொடர்பான தகவல்களை அமெரிக்க உதவியைப் பெறுவதற்கு மாற்றாக வழங்கியது. விரைவிலேயே, பயங்கரவாதத்திற்கு உதவியளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து (அமெரிக்க ஐக்கிய நாட்டில் தயாரிக்கப்படும் பட்டியல்) வட கொரியா நீக்கப்பட்டது. இருந்தபோதிலும், அணுசக்தி ஆய்வாளர்கள் 2008 இன் இறுதியில் வட கொரிய ஆயுதக் கருவிகளை ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தனர்.[6] அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகக் காலத்தில் பொறுமையுடன் கூடிய உத்தி கடைப்பிடிக்கப்பட்டது; இந்த உத்தியின்படி, வட கொரியாவால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் தூண்டுதல்கள் அதிபரால் அலட்சியப்படுத்தப்பட்டன. உயர்மட்ட தூதுவர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை, மாறாக, அதற்குப் பதிலாக, தென் கொரியா மற்றும் ஜப்பானுடனான கூடுதலான இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் வடகொரியா தண்டிக்கப்பட்டது.[7] இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் பல அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இயான்பியாங் பீரங்கித் தாக்குதல் ஒத்திகைகள் வட கொரியாவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையே போர்ப்பதட்டத்தை அதிகரித்தது. வட கொரியாவின் அணுசக்தித் திட்டத்தின் விரிவாக்கமானது குறிப்பாக டிசம்பர் 2011 இல் கிம் ஜோங்-இல் இறப்பிற்குப் பின் அதிபரான அவரது மகன் கிம் ஜோங்-உன் ஆட்சியின் கீழ் மேலும் முன்னேற்றம் கண்டது.[5]டோனால்ட் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டில் பராக் ஒபாமாவின் வட கொரியாவுடன் பொறுமையைக் கடைபிடிக்கும் உத்திக் கொள்கையை எதிர்த்ததன் காரணமாகவும் வெற்றி பெற்றார். ஒரு கடுமையான நிலைப்பாட்டில் வாதிடுகையில், அவர் தலைவர் கிம் ஜோங்-உன் திறந்த மனதுடன் உரையாடலுக்கும் "ஹாம்பர்கர்" சாப்பிடவும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். நாடுகளுடனான இராணுவ உடன்படிக்கைகள் குறித்த முரண் தொடர்பாக அவர், தென் கொரியாவும், ஜப்பானும் தங்களைத் தாங்களாகவே பாதுகாத்துக் கொள்வது நல்லது என்று கூறியிருந்தார். இது தொடரபாக ஒரு வட கொரிய ஆதரவு இணையத்தளம் அவரை ஒரு "அறிவார்ந்த அரசியல்வாதி" எனக் குறிப்பிட்டிருந்தது.[8] 2017 ஆம ஆண்டில், மூன் சே-இன் வட கொரியாவுடன் நட்புறவைத் தொடர்வதற்கான சூரிய ஒளிக் கொள்கையின்படி (வட கொரியாவுடனான உறவு தொடர்பான தென் கொரியாவின் வெளியுறவுக் கொள்கை) செயல்படுவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தென் கொரியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarah Sanders [PressSec] (June 4, 2018). "Sarah Sanders on Twitter: "UPDATE: The venue for the Singapore summit between @POTUS and Leader Kim Jong Un will be the Capella Hotel on Sentosa Island. We thank our great Singaporean hosts for their hospitality."" (Tweet). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. Nakamura, David; Wagner, John (May 10, 2018). "Trump announces June 12 summit in Singapore with North Korean leader". The Washington Post. https://www.washingtonpost.com/politics/trump-announces-june-12-summit-in-singapore-with-north-korean-leader/2018/05/10/8f1ad3ac-5438-11e8-9c91-7dab596e8252_story.html. பார்த்த நாள்: May 10, 2018. 
  3. Sim, Royston (June 10, 2018). "Trump-Kim summit will cost about $20m to host - a cost Singapore willing to pay for regional stability: PM Lee" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் June 11, 2018.
  4. "Singapore gears up to host Trump-Kim summit" (in ஆங்கிலம்). June 6, 2018. பார்க்கப்பட்ட நாள் June 7, 2018.
  5. 5.0 5.1 Baker, Rodger (April 5, 2018). "Here's What's Actually Different About The Latest North Korea Talks". Forbes. Stratfor. பார்க்கப்பட்ட நாள் April 29, 2018.
  6. Xu, nBiena; Bajoria, Jayshree (September 30, 2013). "The Six Party Talks On North Korea's Nuclear Program". Council on Foreign Relations. https://www.cfr.org/backgrounder/six-party-talks-north-koreas-nuclear-program. பார்த்த நாள்: May 24, 2018. 
  7. Spetalnick, Matt; Yukhananov, Anna (April 9, 2013). "Analysis: North Korea tests Obama's "strategic patience"". Reuters. https://www.reuters.com/article/us-korea-north-obama/analysis-north-korea-tests-obamas-strategic-patience-idUSBRE9380YR20130409. பார்த்த நாள்: June 12, 2018. 
  8. Evans, Stephen (November 17, 2016). "What will President Trump do about North Korea?". BBC News. http://www.bbc.com/news/world-asia-38001843. 
  9. "South Korea's likely next president warns the U.S. not to meddle in its democracy". Washington Post.