உள்ளடக்கத்துக்குச் செல்

2018 அமிருதசரசு தொடருந்து விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 அமிருதசரசு தொடருந்து விபத்து
ஜோடா படாக் is located in பஞ்சாப்
ஜோடா படாக்
ஜோடா படாக்
இந்தியா, பஞ்சாப் மாவட்டத்தில் அமைவிடம்
தேதி19 அக்டோபர் 2018
நேரம்~18:30 இசீநே (ஒசநே+5:30)
இடம்அமிருதசரசு
ஆள்கூறுகள்31°37′51″N 74°53′50″E / 31.630833°N 74.897222°E / 31.630833; 74.897222
நாடுஇந்தியா
இயக்குநர்இந்திய இரயில்வே: வடக்குத் தொடருந்து
புள்ளிவிவரம்
இறப்பு59
காயம்குறைந்தது 100

அமிருதசரசு தொடருந்து விபத்து என்பது இந்திய மாநிலம், பஞ்சாப்பிலுள்ள, அமிருதசரசு நகருக்கு அருகே இருப்புப் பாதையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது தொடருந்து மோதி ஏற்பட்ட விபத்தினைக் குறிக்கும். அக்டோபர் 19, 2018 அன்று நடந்த இந்த விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.[1]

விபத்து விவரம்[தொகு]

அமிருதசரசு நகருக்கு அருகிலுள்ள ஜோடா படாக் என்னுமிடத்தில் மைதானம் ஒன்றில், தசரா பண்டிகையை 300 பேர் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படும் நிகழ்வை பொதுமக்களில் ஒரு பிரிவினர் அருகிலுள்ள இருப்புப் பாதையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு தடங்களிலும் தொடருந்துகள் வந்ததில், ஒரு தொடருந்து பொதுமக்கள் கூட்டத்தின்மீது மோதி 59 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

உருவ பொம்மை எரிக்கப்படும்போது பட்டாசுகள் வெடித்ததில், கூட்டத்தின் ஒரு பகுதியினர் இருப்புப் பாதையை நோக்கி ஓடியதாகவும் அப்போது நெரிசல் ஏற்பட்டது என்பதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது. அப்போது அக்கூட்டத்தின்போது தொடருந்து மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "At least 61 killed as train runs over revellers". தி இந்து (ஆங்கிலம்). 20 அக்டோபர் 2018. https://www.thehindu.com/news/national/other-states/dussehra-tragedy-in-amritsar-live-updates-many-killed-as-train-runs-over-revellers/article25264444.ece?homepage=true. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2018. 

வெளியிணைப்புகள்[தொகு]

வெளி ஒளிதங்கள்
Footage of Amritsar Train Accident / The Quint, ANI