2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை
FIFA U-17 World Cup India 2017 | |
---|---|
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | India |
நாட்கள் | 6–28 அக்டோபர் 2017 |
அணிகள் | 24 (6 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 6 (6 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | இங்கிலாந்து (1-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | எசுப்பானியா |
மூன்றாம் இடம் | பிரேசில் |
நான்காம் இடம் | மாலி |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 52 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 183 (3.52 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 13,47,133 (25,906/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | இங்கிலாந்து ரியன் பிரவுஸ்டர் (8 goals ) |
சிறந்த ஆட்டக்காரர் | பில் ஃபோடான் |
சிறந்த கோல்காப்பாளர் | கேபிரியல் பிராசோ |
நேர்நடத்தை விருது | பிரேசில் தேசிய காற்பந்து அணி |
← 2015 2019 → | |
2017 பிபா U-17 உலகக் கோப்பை போட்டி என்பது 17 வது முறையாக நடத்தப்படும் பிபா U-17 உலகக் கோப்பை போட்டியாகும், மேலும் இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 17 வயதுக்குட்பட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த தேசிய அணிகள் போட்டியிடும் ஒரு சர்வதேச ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியாகும். இந்த முறை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவிற்குக் டிசம்பர் 5, 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்தப் போட்டி 6 அக்டோபர் 2017 ஆம் தேதி தொடங்கி 28 அக்டோபர் 2017 தேதி வரை நடைபெறும். இதுவே இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் எந்தவொரு சர்வதேச கால்பந்தாட்ட போட்டியாகும்.
போட்டி நடத்தும் நாடு தேர்ந்தெடுத்தல்
[தொகு]2017 பிபா U-17 உலகக்கோப்பையை நடத்துவதற்கான தேர்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பம் 28 மே 2013 ஆம் தேதி அன்று அஜர்பைஜான், இந்தியா, அயர்லாந்து குடியரசு மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் சமர்பித்தன.[1] இதற்கான முடிவை பிபா 15 நவம்பர் 2013 ஆம் தேதி [2] அன்று வெளியிட்டது. அந்த குறிப்பில் இந்தியா போட்டி நடத்துவதற்கான உரிமையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.[3]
போட்டியில் பங்குபெற தேர்ச்சிபெற்ற அணிகள்
[தொகு]போட்டி நடத்தும் நாடு எனபதன் அடிப்படையில் இந்தியா முதல் முறையாக 2017 பிபா U-17 உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பை பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தவிர்த்து 23 அணிகள் உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்த்து முதல் முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த முறை நியூ கடலோனியா மற்றும் நைஜர் நாடுகள் தகுதி பெற்றுள்ளன்.
கூட்டமைப்பு | தகுதிச் சுற்றுப் போட்டிகள் | தேர்வு செய்யப்பட்ட அணிகள் |
---|---|---|
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு AFC (Asia) | போட்டி நடத்தும் நாடு | இந்தியா1 |
2016 AFC U-16 Championship | ஈராக் ஈரான் சப்பான் வட கொரியா | |
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு CAF (Africa) | 2017 Africa U-17 Cup of Nations | கானா கினியா மாலி நைஜர்1 |
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (CONCACAF) (Central, North America and Caribbean) |
2017 CONCACAF U-17 Championship | கோஸ்ட்டா ரிக்கா ஒண்டுராசு மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா |
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு CONMEBOL (South America) | 2017 South American Under-17 Championship | பிரேசில் சிலி கொலம்பியா பரகுவை |
ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு OFC (Oceania) | 2017 OFC U-17 Championship | நியூ கலிடோனியா1 நியூசிலாந்து |
ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் UEFA (Europe) | 2017 UEFA European Under-17 Championship | இங்கிலாந்து பிரான்சு செருமனி எசுப்பானியா துருக்கி |
- 1.^ உலகக் கோப்பையில் முதல் முறையாக களமிறங்கும் அணிகள்.
அமைப்பு
[தொகு]போட்டிக்குத் தயாராகுதல்
[தொகு]இந்த போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு இடங்களுக்கு பிபா U-17 உலகக் கோப்பைக்கு முன்னதாக அரங்கங்கள் பெரும் புனரமைப்பு செய்யப்பட்டது.[4] அனைத்து விளையாட்டு அரங்குகளுக்கும் புதிய இருக்கைகள், புதிய உடைமாற்றும் அறைகள், ரசிகர்கள் ஆபத்துகாலத்தில் தப்பிக்க புதிய வழிகள் மற்றும் புதிய பயிற்சி மைதானங்கள் என்று புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் அமைப்பாளர்களின் குழு இயக்குநர் ஜாவியர் செபி இவ்வாறு கூறுகிறார், மெதுவாக தொடங்கிய புனரமைப்பு வேலைகள், பின்னர் வேகம் எடுத்து என்றார். மேலும் "கடந்த இரு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட ஒரு நீண்ட செயல்முறை ஆகும், இந்தியாவில் இது போன்ற விஷயங்களை ஆரம்பிக்க நேரம் எடுக்கிறது ஆனால் செயல்படுத்தும் வேகம் எடுத்தவுடன் விரைவாக செய்து முடிக்கப்படும். அதனால் திட்டங்களை செயல் படுத்துவதில் நான் எப்போதும் இந்தியாவை ஒரு மிகச் சிறந்து நாடு என்று கூறுவேன் என்றார்" [5]
போட்டியின் சின்னம்
[தொகு]2016 AFC U-16 சாம்பியன்ஷிப் போட்டியின் போது கோவாவில் 2016 செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டது.[6] பிபாவின் செய்தி வெளியீட்டின் படி இந்த சின்னம் "போட்டி நடத்தும் நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரங்களின் கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டது, இந்திய பெருங்கடலின் முக்கிய கூறுகள், ஆல மரம், காத்தாடி மற்றும் நட்சத்திர தீவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டது, இது அசோக சக்கர்த்தின் விளக்கமாகும், அசோக சக்ரம் இந்திய தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாகும்." [6]
பார்வையாளருக்கான அனுமதிச் சீட்டுகள்
[தொகு]2017 பிபா U-17 உலக கோப்பைக்கான நுழைவுச் சீட்டு விற்பனை தில்லியில் ஒரு விழாவில் மே 16, 2017 அன்று சிறப்பு விருந்தினர் கார்ல்ஸ் பியொல்லால் தொடங்கிவைக்கப்பட்டது.[7] பொது டிக்கட்டுகள் விற்பனை அதிகாரபூர்வமாக 17 மே 2017 அன்று 19:11 மணிக்கு தொடங்கியது. இது 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற (IFA Shield) கால்பந்துப் போட்டியில் முதல் முறையாக மோகன் பகான் அணி கிழக்கு யாக்சயர் ரெஜிமன்ட் அணியுடன் வெற்றி பெற்றதான் நினைவுகொள்ளும் வகையில் தொடங்கபட்டது.[7]
போட்டி நடைபெறும் இடங்கள்
[தொகு]கொல்கத்தா | கொச்சி | தில்லி |
---|---|---|
சால்ட் லேக் அரங்கம் | ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், கொச்சி | ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி |
இருக்கைகள் எண்ணிக்கை: 66,687[8] | *இருக்கைகள் எண்ணிக்கை: 41,700[8] | இருக்கைகள் எண்ணிக்கை: 58,000[8] |
நவி மும்பை | குவகாத்தி | கோவா |
பாட்டில் விளையாட்டு அரங்கம் | இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் | பாஃடொரடா விளையாட்டு அரங்கம் |
இருக்கைகள் எண்ணிக்கை: 58,300[8] | இருக்கைகள் எண்ணிக்கை: 23,800[8] | இருக்கைகள் எண்ணிக்கை: 16,200[8] |
*பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இருக்கைகள் எண்ணிக்கை 29,000 மட்டும் பிபாவால் அனுமதிக்கப்பட்டுள்ளது
அணிகள்
[தொகு]2017 பிபா U-17 உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியிலும் தலா 21 வீரர்கள் கொண்ட அணியாக இருக்கும்.[9] இதில் பங்குபெரும் ஒவ்வொரு தேசிய நாடும் தங்களுது அணியில் விளையாடும் வீரர்கம்ளின் பட்டியலை 21 செப்டம்பர் 2017 குள் வெளியிட வேண்டும். 24ங்கு அணிகளையும் சேர்த்து மொத்தம் 504 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்குபெருவர். 26 செப்டம்பர் 2017 ஆம் தேதி அன்று பிபா அனைத்து அணிகளின் வீரர்கள் குறித்த விபரங்களை அதிகார பூர்வமாக வெளியிட்டது.[10][11]
குழுகள் நிலை
[தொகு]ஒவ்வொரு குழுவில் இருந்தும் சிறந்த முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் இரண்டு அணிகள் மற்றும் குழுவில் சிறந்த மூன்றாம் அணிகள் என்ற முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் மொத்தம் 16 அணிகள் அடுத்தச் சுற்று (சுற்று 16) ஆட்டத்திற்கு தகுதி பெரும். குழுவில் உள்ள ஒவ்வொரு அணியின் நிலை பின்வரும் முறைகளை பயன்படுத்தி வரிசைப்படுத்தப் படுகிறது (ஒழுங்குபடுத்துதலுக்கான கட்டுரை 17.7) [12]
குழுவிற்குள் நடக்கும் அனைத்துப் போட்டிகளில் ஒரு அணியால்,
- எடுக்கப்படும் புள்ளிகள்
- அடிக்கப்படும் கோல்களின் வித்தியாசம்
- அடிக்கப்படும் கோல்களின் மொத்த கூட்டுத்தொகை அல்லது எண்ணிக்கை
குழு அ
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | கானா (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 1 | +4 | 6 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | கொலம்பியா (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6 | |
3 | ஐக்கிய அமெரிக்கா (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6 | |
4 | இந்தியா (H, E) | 3 | 0 | 0 | 3 | 1 | 9 | −8 | 0 |
இந்தியா | 0–3 | ஐக்கிய அமெரிக்கா |
---|---|---|
அறிக்கை |
|
கானா | 0–1 | ஐக்கிய அமெரிக்கா |
---|---|---|
அறிக்கை |
|
இந்தியா | 1–2 | கொலம்பியா |
---|---|---|
|
அறிக்கை |
|
ஐக்கிய அமெரிக்கா | 1–3 | கொலம்பியா |
---|---|---|
|
அறிக்கை |
|
குழு ஆ
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பரகுவை (A) | 3 | 3 | 0 | 0 | 10 | 5 | +5 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | மாலி (A) | 3 | 2 | 0 | 1 | 8 | 4 | +4 | 6 | |
3 | நியூசிலாந்து (E) | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 | பெரும்பாலும் ஆட்டமிழக்கும் நிலை |
4 | துருக்கி (E) | 3 | 0 | 1 | 2 | 2 | 7 | −5 | 1 |
நியூசிலாந்து | 1–1 | துருக்கி |
---|---|---|
|
அறிக்கை |
|
பரகுவை | 3–2 | மாலி |
---|---|---|
|
அறிக்கை |
|
பரகுவை | 4–2 | நியூசிலாந்து |
---|---|---|
அறிக்கை |
|
மாலி | 3–1 | நியூசிலாந்து |
---|---|---|
அறிக்கை |
|
குழு இ
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஈரான் (A) | 3 | 3 | 0 | 0 | 10 | 1 | +9 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | செருமனி (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 6 | −1 | 6 | |
3 | கோஸ்ட்டா ரிக்கா (E) | 3 | 0 | 1 | 2 | 3 | 7 | −4 | 1 | |
4 | கினியா (E) | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 |
செருமனி | 2–1 | கோஸ்ட்டா ரிக்கா |
---|---|---|
அறிக்கை |
|
கோஸ்ட்டா ரிக்கா | 0–3 | ஈரான் |
---|---|---|
அறிக்கை |
|
குழு ஈ
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரேசில் (A) | 3 | 3 | 0 | 0 | 6 | 1 | +5 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | எசுப்பானியா (A) | 3 | 2 | 0 | 1 | 7 | 2 | +5 | 6 | |
3 | நைஜர் (A) | 3 | 1 | 0 | 2 | 1 | 6 | −5 | 3 | |
4 | வட கொரியா (E) | 3 | 0 | 0 | 3 | 0 | 5 | −5 | 0 |
பிரேசில் | 2–1 | எசுப்பானியா |
---|---|---|
அறிக்கை |
|
வட கொரியா | 0–1 | நைஜர் |
---|---|---|
அறிக்கை |
|
குழு உ
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரான்சு | 3 | 3 | 0 | 0 | 14 | 3 | +11 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | சப்பான் | 3 | 1 | 1 | 1 | 8 | 4 | +4 | 4 | |
3 | ஒண்டுராசு | 3 | 1 | 0 | 2 | 7 | 11 | −4 | 3 | |
4 | நியூ கலிடோனியா | 3 | 0 | 1 | 2 | 2 | 13 | −11 | 1 |
நியூ கலிடோனியா | 1–7 | பிரான்சு |
---|---|---|
|
அறிக்கை |
சப்பான் | 1–1 | நியூ கலிடோனியா |
---|---|---|
|
அறிக்கை |
|
குழு ஊ
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 3 | 3 | 0 | 0 | 11 | 2 | +9 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | ஈராக் | 3 | 1 | 1 | 1 | 4 | 5 | −1 | 4 | |
3 | மெக்சிக்கோ | 3 | 0 | 2 | 1 | 3 | 4 | −1 | 2 | |
4 | சிலி | 3 | 0 | 1 | 2 | 0 | 7 | −7 | 1 |
சிலி | 0–4 | இங்கிலாந்து |
---|---|---|
அறிக்கை |
|
ஈராக் | 1–1 | மெக்சிக்கோ |
---|---|---|
|
அறிக்கை |
|
இங்கிலாந்து | 3–2 | மெக்சிக்கோ |
---|---|---|
அறிக்கை |
|
ஈராக் | 3–0 | சிலி |
---|---|---|
|
அறிக்கை |
இங்கிலாந்து | 4–0 | ஈராக் |
---|---|---|
|
அறிக்கை |
மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளின் தரவரிசை
[தொகு]மூன்றாம் இடம் பிடித்த முதல் நான்கு அணிகள் கீழ்கண்ட விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்படும். (ஒழுங்குப்படுத்துதலுக்கான விதிகளின் கட்டுரை 17.7):[12]
- அனைத்து குழு போட்டிகளிலும் பெற்ற புள்ளிகள்;
- அனைத்து குழு போட்டிகளிலும் அடித்த கோல்களின் வேறுபாடு;
- அனைத்து குழு போட்டிகளிலும் அடித்த கோல்களின் எண்ணிக்கை;
- ஒழுக்கத்தோடு விளையாடியதற்கான புள்ளிகள்;
- பிபா ஒழுங்குபடுத்தல் குழுவால் சீட்டுக் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பது.
நிலை | குழு | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | அ | கானா | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | உ | ஒண்டுராசு | 3 | 1 | 0 | 2 | 7 | 11 | −4 | 3 | |
3 | ஈ | நைஜர் | 3 | 1 | 0 | 2 | 1 | 6 | −5 | 3 | |
4 | ஊ | மெக்சிக்கோ | 3 | 0 | 2 | 1 | 3 | 4 | −1 | 2 | |
5 | ஆ | நியூசிலாந்து | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1[a] | |
6 | இ | கோஸ்ட்டா ரிக்கா | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1[a] |
குறிப்புகள்:
ஆட்டமிழக்கும் நிலை
[தொகு]அடுத்தச்சுற்றாட்டங்களின் அட்டவணை
[தொகு]
16 அணிகளின் சுற்று | காலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதிப்போட்டி | |||||||||||
16 October — தில்லி | ||||||||||||||
கொலம்பியா | 0 | |||||||||||||
22 October — கொல்கத்தா | ||||||||||||||
செருமனி | 4 | |||||||||||||
செருமனி | 1 | |||||||||||||
18 October — ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (கொச்சி) | ||||||||||||||
பிரேசில் | 2 | |||||||||||||
பிரேசில் | 3 | |||||||||||||
25 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
ஒண்டுராசு | 0 | |||||||||||||
பிரேசில் | 1 | |||||||||||||
16 October — தில்லி | ||||||||||||||
இங்கிலாந்து | 3 | |||||||||||||
பரகுவை | 0 | |||||||||||||
21 October — கோவா | ||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா | 5 | |||||||||||||
ஐக்கிய அமெரிக்கா | 1 | |||||||||||||
17 October — கொல்கத்தா | ||||||||||||||
இங்கிலாந்து | 4 | |||||||||||||
இங்கிலாந்து (pen.) | 0 (5) | |||||||||||||
28 October — கொல்கத்தா | ||||||||||||||
சப்பான் | 0 (3) | |||||||||||||
இங்கிலாந்து | 5 | |||||||||||||
17 October — கோவா | ||||||||||||||
எசுப்பானியா | 2 | |||||||||||||
மாலி | 5 | |||||||||||||
21 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
ஈராக் | 1 | |||||||||||||
மாலி | 2 | |||||||||||||
18 October — பாட்டில் விளையாட்டு அரங்கம் (நவி மும்பை) | ||||||||||||||
கானா | 1 | |||||||||||||
கானா | 2 | |||||||||||||
25 October — பாட்டில் விளையாட்டு அரங்கம் (நவி மும்பை) | ||||||||||||||
நைஜர் | 0 | |||||||||||||
மாலி | 1 | |||||||||||||
17 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
எசுப்பானியா | 3 | மூன்றாம் இடம் | ||||||||||||
பிரான்சு | 1 | |||||||||||||
22 October — ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (கொச்சி) | 28 October — கொல்கத்தா | |||||||||||||
எசுப்பானியா | 2 | |||||||||||||
எசுப்பானியா | 3 | பிரேசில் | 2 | |||||||||||
17 October — கோவா | ||||||||||||||
ஈரான் | 1 | மாலி | 0 | |||||||||||
ஈரான் | 2 | |||||||||||||
மெக்சிக்கோ | 1 | |||||||||||||
16-சுற்றுஆட்ட அட்டவணை
[தொகு]ஈரான் | 2–1 | மெக்சிக்கோ |
---|---|---|
அறிக்கை |
|
பிரான்சு | 1–2 | எசுப்பானியா |
---|---|---|
|
அறிக்கை |
இங்கிலாந்து | 0–0 | சப்பான் |
---|---|---|
அறிக்கை | ||
ச.நீ | ||
5–3 |
பிரேசில் | 3–0 | ஒண்டுராசு |
---|---|---|
|
அறிக்கை |
காலிறுதிச் சுற்று
[தொகு]ஐக்கிய அமெரிக்கா | 1–4 | இங்கிலாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
எசுப்பானியா | 3–1 | ஈரான் |
---|---|---|
|
அறிக்கை |
|
அறையிறுதிச் சுற்று
[தொகு]பிரேசில் | 1–3 | இங்கிலாந்து |
---|---|---|
|
|
மாலி | 1–3 | எசுப்பானியா |
---|---|---|
|
|
மூன்றாம் இடத்திற்கான போட்டி
[தொகு]இறுதிப் போட்டி
[தொகு]இங்கிலாந்து | 5–2 | எசுப்பானியா |
---|---|---|
|
|
விருதுகள்
[தொகு]கீழ்கண்ட விருதுகள் இறுதிப் போட்டியின் முடிவில் வழங்கப்பட்டது.
தங்கப் பந்து | வெள்ளிப் பந்து | வெண்கலப் பந்து |
---|---|---|
பில் ஃபோடான் | சர்ஜியோ கோம்ஸ் மார்டின் | ரியன் பிரவுஸ்டர் |
தங்கப் பூட் | வெள்ளிப் பூட் | வெண்கலப் பூட் |
ரியன் பிரவுஸ்டர் | லிசானா நிதியா | அபெல் ரூஸ் |
8 goals | 6 goals | 6 goals |
தங்கக் கையுறை | ||
கேப்ரியல் பிராசோ | ||
பிஃபா சிறந்த ஒழுக்க விருது | ||
பிரேசில் |
புதிய சாதனைகள்
[தொகு]28 அக்டோபர் 2017 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் பிஃபா 17 வயதுக்குடபட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி பல புதிய சாதனைகளை படைத்திருக்கிறது.
- முதல் முறையாக இந்தியா பங்குபெரும் முதல் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியாகும்.
- முதல் முறையாக இங்கிலாந்து உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை வென்று கோப்பை பெற்றுக்கிறது.
- அதிக பார்வையாளர்கள் பார்த்த போட்டி என்ற சாதனையை படைத்திருக்கிறது. சுமார் 13 இலட்சம் பார்வையாளர்கள் போட்டியை நேரில் சென்று பார்த்திருக்கிறார்கள்.[13]
- அதிக எண்ணிக்கையிலான கோல்கள் அடித்த (மொத்தம் 182 கோல்கள்) என்ற் புதிய சாதனையை படைத்திருக்கிறது.[13]
இறுதித் தரவரிசை அட்டவணை
[தொகு]தரவரிசை | அணி | ஆ | வெ | ச | தோ | கோ த | கோ எ | கோ வே | பு | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 7 | 6 | 1 | 0 | 23 | 6 | +17 | 19 | |
2 | எசுப்பானியா | 7 | 5 | 0 | 2 | 17 | 10 | +7 | 15 | |
3 | பிரேசில் | 7 | 6 | 0 | 1 | 14 | 5 | +9 | 18 | |
4 | மாலி | 7 | 4 | 0 | 3 | 16 | 11 | +5 | 12 | |
காலிறுதிச் சுற்றுடன் வெளியேற்றம் | ||||||||||
5 | ஈரான் | 5 | 4 | 0 | 1 | 13 | 5 | +8 | 12 | |
6 | கானா | 5 | 3 | 0 | 2 | 8 | 3 | +5 | 9 | |
7 | ஐக்கிய அமெரிக்கா | 5 | 3 | 0 | 2 | 11 | 7 | +4 | 9 | |
8 | செருமனி | 5 | 3 | 0 | 2 | 10 | 8 | +2 | 9 | |
16 சுற்று ஆட்டத்தில் வெளியேற்றம் | ||||||||||
9 | பிரான்சு | 4 | 3 | 0 | 1 | 15 | 5 | +10 | 9 | |
10 | பரகுவை | 4 | 3 | 0 | 1 | 10 | 10 | 0 | 9 | |
11 | கொலம்பியா | 4 | 2 | 0 | 2 | 5 | 7 | −2 | 6 | |
12 | சப்பான் | 4 | 1 | 2 | 1 | 8 | 4 | +4 | 5 | |
13 | ஈராக் | 4 | 1 | 1 | 2 | 5 | 10 | −5 | 4 | |
14 | ஒண்டுராசு | 4 | 1 | 0 | 3 | 7 | 14 | −7 | 3 | |
15 | நைஜர் | 4 | 1 | 0 | 3 | 1 | 8 | −7 | 3 | |
16 | மெக்சிக்கோ | 4 | 0 | 2 | 2 | 4 | 6 | −2 | 2 | |
குழு ஆட்டத்தில் வெளியேற்றம் | ||||||||||
17 | கினியா | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 | |
நியூசிலாந்து | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 | ||
19 | கோஸ்ட்டா ரிக்கா | 3 | 0 | 1 | 2 | 3 | 7 | −4 | 1 | |
20 | துருக்கி | 3 | 0 | 1 | 2 | 2 | 7 | −5 | 1 | |
21 | சிலி | 3 | 0 | 1 | 2 | 0 | 7 | −7 | 1 | |
22 | நியூ கலிடோனியா | 3 | 0 | 1 | 2 | 2 | 13 | −11 | 1 | |
23 | வட கொரியா | 3 | 0 | 0 | 3 | 0 | 5 | −5 | 0 | |
24 | இந்தியா | 3 | 0 | 0 | 3 | 1 | 9 | −8 | 0 |
கோல் அடித்தவர்களின் பட்டியல்
[தொகு]கவனிக்கவும்: தடிமனான பெயர்கள் இருக்கும் வீரர்கள் இன்னும் போட்டியில் உள்ளனர்.
- 8 goals
- 6 goals
- 5 goals
- 4 கோல்கள்
- 3 கோல்கள்
- 2 கோல்கள்
- பவுல்லின்ஹொ
- ஆன்டிரஸ் கோமீஸ்
- ஏஞ்ஜல் கோம்ஸ்
- டேனி லோடர்
- அலக்ஸ் ஃபிலிப்ஸ்
- வில்சன் ஐசிடார்
- ரிச்சர்டு டான்சோ
- இப்ராஹிம் சோமா
- ஃபான்ஜி தோரி
- யோநிஸ் டெல்பி
- மொஹமத் ஷரிவ்
- தாய்சி மியாசரோ
- ஃபோடீ கொநாடீ
- டியாகோ லினிஸ்
- ரொபர்டொ டி ல ரோசா
- அந்தோனி கலிநோ
- ஆலன் பிரான்சிஸ்கோ ரோடிரிக்
- அனிபல் விகா
- சீசர் ஜில்பர்ட்
- ஆன்டிரு காரிலிடான்
- 1 கோல்
- மார்கோஸ் அந்தோனி சில்வா சான்டோஸ்
- டிபர் சிகாடோ
- ஜான் விடல்
- யகசி ஜார்கின்
- மார்கன் சிப்ஸ் ஒயிட்
- பில் ஃபோடான்
- சலாம் ஹட்சன் ஒடி
- எமிலி சுமித் ரோ
- யாசின் அடிலி
- கிலாடி கோம்ஸ்
- மேக்ஸன் கியாரட்
- லென்னி பின்டர்
- நோ அவுகு
- யன் ஆரல் பிசக்
- ஷாவர்டி செர்டின்
- நிகோலஸ் குன்
- ஜான் யாபோ
- சாதிக் இப்ராஹிம்
- மொஹமத் குடு
- இம்மானுல் டோகு
- ஜோஸா கானாலஸ்
- ஜீக்சன் சிங் தொநொஜம்
- மொஹமத் கோபிஷாவி
- சயத் கரீம்
- வஹித் நம்தாரி
- மொஹமத் சர்தாரி
- தாஹா ஷரியாடி
- அலிகரீம்
- தகிபியோசா குபோ
- டோசி சுசிகி
- சிமி கமாரா
- சலாம் ஜிடோ
- காமரூன் வாடஞஸ்
- ஜேகோப் ஜிநொ
- மேக்ஸ் மாடா
- சார்லஸ் பிராக்
- சலிம் அப்துர்ஷமி
- பிலாஸ் அர்மோ
- ஜியோவானி போகடோ
- பெர்னான்டொ டேவிட் கார்டோசா
- லியனார்டோ கோஹினர்
- செர்ஜி கோமீஸ் மார்டின்
- ஜுயன் மிரன்டா
- மொஹமத் மெளகிஸ்
- கிரன் கிஜின்
- அஹமத் குடு
- ஜார்ஜ் அகோடா
- அயா அகினோலா
- கிறிஸ் டர்கின்
ஒளிபரப்பும் உரிமை
[தொகு]பிஃபா 2017 - 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஊடகம் மற்றும் ஒளிபரப்பும் உரிமையை 21 செப்டம்பர் 2017 ஆம் தேதி வெளியிட்டது.[14] இந்தியாவிற்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி டென் (Sony TEN) மற்றும் சோனி ஈஸ்பின் (Sony ESPN) [15] பெற்றது.அமெரிக்காவில் Fox Sports 2 தொலைக்காட்சியும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் Eurosport தொலைக்காட்சியும் பெற்றுள்ளது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "FIFA Executive Committee fully backs resolution on the fight against racism and discrimination". FIFA. 28 May 2013 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171012070249/http://www.fifa.com/about-fifa/news/y=2013/m=5/news=fifa-executive-committee-fully-backs-resolution-the-fight-against-racism-2085775.html. பார்த்த நாள்: 1 October 2017. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-12. பார்க்கப்பட்ட நாள் 2017-10-11.
- ↑ "Bidding process opened for five FIFA competitions in 2016 and 2017". FIFA. 17 April 2013 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171004034637/http://www.fifa.com/media/news/y=2013/m=4/news=bidding-process-opened-for-five-fifa-competitions-2016-and-2017-2059713.html. பார்த்த நாள்: 1 October 2017. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-11.
- ↑ "Official: India to host U-17 World Cup in 2017". Goal.com. 5 December 2013 இம் மூலத்தில் இருந்து 10 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160310225438/http://www.goal.com/en-india/news/136/india/2013/12/05/4454372/official-india-to-host-u-17-world-cup-in-2017. பார்த்த நாள்: 1 October 2017.
- ↑ "FIFA U-17 World Cup 2017: An interactive look at the facelifts the six stadiums have received". FirstPost. 28 September 2017. http://www.firstpost.com/sports/fifa-u-17-world-cup-2017-an-interactive-look-at-the-facelifts-the-six-stadiums-have-received-4067169.html. பார்த்த நாள்: 2 October 2017.
- ↑ "‘Infrastructure ready for FIFA U-17 World Cup’". The Hindu. 17 February 2017. http://www.thehindu.com/sport/football/Infrastructure-ready-for-FIFA-Under-17-World-Cup-says-Local-Organising-Committee-chief/article17318579.ece. பார்த்த நாள்: 2 October 2017.
- ↑ 6.0 6.1 "Official Emblem launched for FIFA U-17 World Cup India 2017". FIFA. 27 September 2016 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171004034928/http://www.fifa.com/u17worldcup/news/y=2016/m=9/news=official-emblem-launched-for-fifa-u-17-world-cup-india-2017-2837035.html. பார்த்த நாள்: 2 October 2017. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-11.
- ↑ 7.0 7.1 "Fifa U-17 World Cup 2017: Carles Puyol kicks off ticket sales, honours Mohun Bagan icon". FirstPost. 16 May 2017. http://www.firstpost.com/sports/fifa-u-17-world-cup-2017-carles-puyol-kicks-off-ticket-sales-honours-mohun-bagan-icon-3448412.html. பார்த்த நாள்: 2 October 2017.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 "FIFA Stats" (PDF). FIFA. Archived from the original (PDF) on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12.
- ↑ "FIFA U-17 World Cup: When is the last date for teams to submit final squads". Goal.com. 15 August 2017. http://www.goal.com/en-us/news/2017-fifa-u-17-world-cup-last-date-final-squad/weeesj6ktmqt1nimnu9i7hrxx. பார்த்த நாள்: 3 October 2017.
- ↑ "Talented youngsters set for Indian odyssey". FIFA.com. 26 September 2017. Archived from the original on 5 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2017. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12.
- ↑ "FIFA U-17 World Cup India 2017 – List of Players" (PDF). FIFA.com. Archived from the original (PDF) on 2017-10-30. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12.
- ↑ 12.0 12.1 "Regulations – FIFA U-17 World Cup India 2017" (PDF). FIFA.com. Archived from the original (PDF) on 2017-08-08. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-08-08. பார்க்கப்பட்ட நாள் 2017-10-12.
- ↑ 13.0 13.1 http://tamil.thehindu.com/sports/article19930690.ece
- ↑ "FIFA U-17 World Cup India 2017 Media Rights Licenses" (PDF). FIFA. Archived from the original (PDF) on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-24. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-24.
- ↑ "TV Guide: Date, time and where to get your football fix". Goal.com. 30 September 2017. http://www.goal.com/en-us/news/tv-guide-date-time-and-where-to-get-your-football-fix/5l0mbuqqo1bv1xm1k182d1b0c. பார்த்த நாள்: 3 October 2017.
- ↑ "FIFA Under-17 World Cup: Fixtures, teams, TV & guide to India 2017". Goal.com. 30 September 2017. http://www.goal.com/en-us/news/fifa-under-17-world-cup-fixtures-schedule-tv-channel-stream/sg8bjezco37u1f7t0wzyzguph. பார்த்த நாள்: 3 October 2017.