2017 தென் சூடான் பஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2017 தென் சூடான் பஞ்சம்
நாடு தெற்கு சூடான்
இடம் {{{location}}}
காலம் பிப்பிரவரி 2017 – தற்போதுவரை
அவதானிப்புகள் போர், வறட்சி
பஞ்சத்தின் வகைப்பாடுகளை குறைந்தபட்ச அளவிலிருந்து காட்டும் ஜனவரி 2017 வரைபடம்

2017 தென் சூடான் பஞ்சம் என்பது 2017 தொடக்கத்தில் இருந்து தென் சூடான் நாட்டின் பல பகுதிகள் எதிர்நோக்கும் பஞ்சத்தைக் குறிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழும் கடும் வறட்சியும், பல ஆண்டுகளாக இடம்பெறும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களும், மனிதாபிமான உதவிகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் இருக்கும் தடைகளும் இந்தப் பஞ்சத்துக்கு முக்கிய காரணங்கள் ஆகும். இந்தப் பஞ்சத்தால் சுமார் 100,000 பேர் பட்டினியை உடனடியாக எதிர்நோக்குகிறார்கள். மேலும் 5 மில்லியன் மக்கள் அல்லது 40% அளவிலான தென் சூடான் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளார்கள்.[1] சுமார் 250,000 குழந்தைகள் போசாக்கு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.[2] இவர்களின் பலர் சாவை எதிர்நோக்குகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் தென் சூடானில் பஞ்சம் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "South Sudan declares famine in Unity State". பிபிசி (20 February 2017). பார்த்த நாள் 9 ஏப்ரல் 2017.
  2. "Famine declared in part of South Sudan's Unity state". Aijazeera (21 February 2017). பார்த்த நாள் 9 ஏப்ரல் 2017.
  3. "Famine 'largest humanitarian crisis in history of UN'". Aijazeera (11 March 2017). பார்த்த நாள் 9 ஏப்ரல் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2017_தென்_சூடான்_பஞ்சம்&oldid=2245515" இருந்து மீள்விக்கப்பட்டது