2017 தமிழ்நாட்டு எரிவாயு அகழ்வு எதிர்ப்புப் போராட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டு எரிவாயு அகழ்வு எதிர்ப்புப் போராட்டங்கள் என்று அறியப்படுவது நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லை உட்பட்ட ஊர்களில் இயற்கை எரிவாயு திட்டங்களைச் செயற்படுத்துவதை எதிர்த்து அந்த ஊர் மக்களாலும், மாணவர்களாலும், பல தரப்பட்டவர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். பெப்ரவரி 15 இல் நெடுவாசலில் இருந்து எரிவாயு அகழ்வு செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இருந்து மார்சு தொடக்கம் வரை இந்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.[1] எரிவாயு அகழ்வினால் தங்கள் வேளாண்மையும், நீர் வளங்களும், நலமும், வாழ்முறையும் பாதிக்கப்படும் என்று ஊர் மக்கள் கூறுகின்றார்கள். எரிவாயு அகழ்வு நாட்டின் வருமானத்துக்கும் ஆற்றல் தன்னிறைவு இலக்கை எட்டவும் அவசியாமனது என்றும், எடுக்கப்படும் நிலங்களுக்கு ஈடு வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறுகிறது.

நெடுவாசல் செயற்திட்டத்தை அரசு கைவிடும் என்று ஒன்றிய அமைச்சர்களால் உறுதிகூறப்பட்டதால் நெடுவாசல் மக்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தியதாக மார்ச் 12 செய்திகள் கூறுகின்றன.[2] எனினும் வடகாடு உட்பட்ட பிற ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jency Samuel. "Villagers protest a hydrocarbon project in an agricultural village in Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2017.
  2. "Neduvasal stir ends after talks with ministers". பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2017.

வெளி இணைப்புகள்[தொகு]