2017 கூனேரு தொடர்வண்டி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூனேரு தொடர்வண்டி விபத்து
ஹிராக்கந்த் தொடர்வண்டி வழித்தடம்
ஹிராக்கந்த் தொடர்வண்டி வழித்தடம்
கூனேரு புகைவண்டி நிலையம் is located in ஆந்திரப் பிரதேசம்
கூனேரு புகைவண்டி நிலையம்
கூனேரு புகைவண்டி நிலையம்
Location within ஆந்திரப் பிரதேசம்
கூனேரு புகைவண்டி நிலையம் is located in இந்தியா
கூனேரு புகைவண்டி நிலையம்
கூனேரு புகைவண்டி நிலையம்
கூனேரு புகைவண்டி நிலையம் (இந்தியா)
தேதி21 சனவரி 2017
நேரம்11:00 இரவு. உள்ளூர் நேரம் 21 சனவரி)
இடம்கூனேரு,ஆந்திரப்பிரதேசம்
ஆள்கூறுகள்18°57′59″N 83°26′25″E / 18.96639°N 83.44028°E / 18.96639; 83.44028
நாடுஇந்தியா
வழித்தடம்ஜர்சுக்டா–விஜயநகரம் வழி
இயக்குநர்கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம்
விபத்தின் வகைதடம் புரண்ட சம்பவங்கள்
காரணம்விசாரணையில் உள்ளது.
புள்ளிவிவரம்
புகைவண்டிகள்1
பயணிகள்~600
இறப்பு42[1]
காயம்68

கூனேரு தொடர்வண்டி விபத்து அல்லது ஹிராக்கந்த் தொடர்வண்டி விபத்து என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் கூனேரு ரயில் நிலையம் அருகே 21 சனவரி 2017 இரவு ஹிராக்கந்த் அதிவிரைவுத் தொடர்வண்டி தடம் புரண்ட விபத்தை குறிப்பாதாகும்.[2]

விபத்து[தொகு]

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்று கொண்டிருந்த ஹிராக்கந்த் அதிவிரைவுத் தொடர்வண்டி, ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் கூனேரு ரயில் நிலையம் அருகே 21 சனவரி 2017 இரவு தடம் புரண்டது.[3] மூன்று பெட்டிகள் முற்றிலும் இருப்புப்பாதையை விட்டு தடம் புரண்டன.[4] சில பெட்டிகள் அருகில் இணையாக சென்று கொண்டிருந்த சரக்கு வண்டியுடன் மோதி புரண்டன.[5]

அதிவிரைவுத் தொடர்வண்டியின் பொறி இயந்திரம் உட்பட 9 பெட்டிகள் தடம் புரண்டதில் 13 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பின்னர் இறந்ததால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.[1]

இழப்பீடு[தொகு]

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய இரயில்வே சார்பில் தலா ரூ.2 லட்சமும் ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]