உள்ளடக்கத்துக்குச் செல்

2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 கோடை ஒலிம்பிக்கில் ஒவ்வொரு நாடும் பெற்ற பதக்கங்களைக் காட்டும் உலக நிலப்படம்.
குறிவிளக்கம்:
      தங்கம் குறைந்தது ஒரு தங்கப் பதக்கமாவது பெற்ற நாடுகள்.
      வெள்ளி குறைந்தது ஒரு வெள்ளிப் பதக்கமாவது பெற்ற நாடுகள்.
      வெண்கலம் குறைந்தது ஒரு வெண்கலப் பதக்கமாவது பெற்ற நாடுகள்.
      நீலம் எந்தவொரு பதக்கமும் பெறாத நாடுகள்.
      சிவப்பு 2016 கோடை ஒலிம்பிக்சில் பங்கேற்காத நாடுகள்.

2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் (Summer Olympics medal table) இரியோ டி செனீரோவில் ஆகத்து 5, 2016 முதல் ஆகத்து 21, 2016 வரை நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் (NOCs) மற்றும் ஒரு தேசியக்குழுவல்லாத அணியின் மெய்வல்லுநர்கள் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலாகும்.[1]

வியட்நாம், கொசோவோ, பிஜி, சிங்கப்பூர், புவேர்ட்டோ ரிக்கோ, பகுரைன், ஜோர்தான், தஜிகிஸ்தான், கோட் டிவார் ஆகிய நாடுகள் தங்கள் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன; தவிரவும் கொசோவோ, பிஜி, ஜோர்தான் நாடுகளுக்கு எந்தவகையிலும் முதல் ஒலிம்பிக் பதக்கங்களாகவும் அமைந்தன.[2][3][4][5][6][7][8][9][10][11]

குவைத்தின் சுடுதல்வல்லுநர் பெகையது அல்-தீகானி தங்கப் பதக்கமொன்றை வென்ற சார்பற்ற மெய்வல்லுநராக சாதனை படைத்தார்;[12][13] இதற்கு முன்னதாக ஒலிம்பிக் கொடியின் கீழ் 1992இல் ஐக்கிய அணி தங்கப் பதக்கங்களை வென்றிருந்த போதும் தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

பதக்கப் பட்டியல்

[தொகு]
2016 ஒலிம்பிக்கில் 4×100 மீ கட்டற்றவகை நீச்சற்போட்டியில் வென்ற அமெரிக்க அணி (அத்ரியன், எல்டு, பெல்ப்சு, டிரெசல்).
ஆண்கள் 85 கிலோ வகுப்பில் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றோர். ஈரானியர் கியனூசு ரோசுத்தமி தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்கள் 57 கிலோ வகுப்பு டைக்குவாண்டோ போட்டியில் வென்றவர்கள். சென்ற ஒலிம்பிக்கில் வென்றிருந்த பெரிய பிரித்தானியாவின் ஜேடு ஜோன்சு (இடதிலிருந்து இரண்டாவது) தனது பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டும் இந்தப் பட்டியல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு வழங்கிய பதக்கங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த வரிசை தேசிய ஒலிம்பிக் குழு பெற்ற தங்கப் பதக்கங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து வெள்ளிப்பதக்கங்களின் எண்ணிக்கையும் இறுதியாக வெண்கலப் பதக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்குப் பிறகும் சமனாக இருக்கும் நாடுகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாட்டுக் குறிகளின் ஆங்கில எழுத்துவரிசைப்படி அமைந்துள்ளன. இந்தப் பட்டியலை ப.ஒ.கு தந்துள்ளபோதும் ப.ஒ.கு எந்தவொரு தரவரிசைப் படுத்தலையும் ஆதரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை.[14][15]

குத்துச்சண்டை (13 போட்டிகள்), யுடோ (14), டைக்குவாண்டோ (8), மற்போர் (18) விளையாட்டுக்களில் ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. (மொத்தம் 53 கூடுதல் வெண்கலப் பதக்கங்கள்).

பெண்கள் 100 மீட்டர் கட்டற்றவகை நீச்சற்போட்டியில் முதலிடத்தைச் சமனாகப் பிடித்த இருவருக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படவில்லை.

ஆண்கள் 100 மீட்டர் வண்ணாத்தி நீச்சற்போட்டியில் இரண்டாமிடத்தில் சமனாக வந்த மூவருக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் வெண்கலப் பதக்கமேதும் வழங்கப்படவில்லை.

பெண்கள் 100மீ பின்னோக்கிய வீச்சு நீச்சற்போட்டியிலும் ஆண்கள் கே-1 200 மீட்டர் சிறுபடகோட்டத்திலும் மூன்றாமிடத்தில் சமநேரத்தில் வந்த இருவருக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

குறிவிளக்கம்

      நடத்துநர் நாடு (பிரேசில்)

 நிலை  தேஒகு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 46 37 38 121
2  ஐக்கிய இராச்சியம் 27 23 17 67
3  சீனா 26 18 26 70
4  உருசியா 19 18 19 56
5  செருமனி 17 10 15 42
6  சப்பான் 12 8 21 41
7  பிரான்சு 10 18 14 42
8  தென் கொரியா 9 3 9 21
9  இத்தாலி 8 12 8 28
10  ஆத்திரேலியா 8 11 10 29
11  நெதர்லாந்து 8 7 4 19
12  அங்கேரி 8 3 4 15
13  பிரேசில்* 7 6 6 19
14  எசுப்பானியா 7 4 6 17
15  கென்யா 6 6 1 13
16  ஜமேக்கா 6 3 2 11
17  குரோவாசியா 5 3 2 10
18  கியூபா 5 2 4 11
19  நியூசிலாந்து 4 9 5 18
20  கனடா 4 3 15 22
21  உஸ்பெகிஸ்தான் 4 2 7 13
22  கசக்கஸ்தான் 3 5 9 17
23  கொலம்பியா 3 2 3 8
24  சுவிட்சர்லாந்து 3 2 2 7
25  ஈரான் 3 1 4 8
26  கிரேக்க நாடு 3 1 2 6
27  அர்கெந்தீனா 3 1 0 4
28  டென்மார்க் 2 6 7 15
29  சுவீடன் 2 6 3 11
30  தென்னாப்பிரிக்கா 2 6 2 10
31  உக்ரைன் 2 5 4 11
32  செர்பியா 2 4 2 8
33  போலந்து 2 3 6 11
34  வட கொரியா 2 3 2 7
35  பெல்ஜியம் 2 2 2 6
 தாய்லாந்து 2 2 2 6
37  சிலவாக்கியா 2 2 0 4
38  சியார்சியா 2 1 4 7
39  அசர்பைஜான் 1 7 10 18
40  பெலருஸ் 1 4 4 9
41  துருக்கி 1 3 4 8
42  ஆர்மீனியா 1 3 0 4
43  செக் குடியரசு 1 2 7 10
44  எதியோப்பியா 1 2 5 8
45  சுலோவீனியா 1 2 1 4
46  இந்தோனேசியா 1 2 0 3
47  உருமேனியா 1 1 3 5
48  புரூணை 1 1 0 2
 வியட்நாம் 1 1 0 2
50  சீன தைப்பே 1 0 2 3
51  பஹமாஸ் 1 0 1 2
 ஐவரி கோஸ்ட் 1 0 1 2
 சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் (IOA) 1 0 1 2
54  பிஜி 1 0 0 1
 யோர்தான் 1 0 0 1
 கொசோவோ 1 0 0 1
 புவேர்ட்டோ ரிக்கோ 1 0 0 1
 சிங்கப்பூர் 1 0 0 1
 தஜிகிஸ்தான் 1 0 0 1
60  மலேசியா 0 4 1 5
61  மெக்சிக்கோ 0 3 2 5
62  அல்ஜீரியா 0 2 0 2
 அயர்லாந்து 0 2 0 2
64  லித்துவேனியா 0 1 3 4
65  பல்கேரியா 0 1 2 3
 வெனிசுவேலா 0 1 2 3
67  இந்தியா 0 1 1 2
 மங்கோலியா 0 1 1 2
69  புருண்டி 0 1 0 1
 கிரெனடா 0 1 0 1
 நைஜர் 0 1 0 1
 பிலிப்பீன்சு 0 1 0 1
 கத்தார் 0 1 0 1
74  நோர்வே 0 0 4 4
75  எகிப்து 0 0 3 3
 தூனிசியா 0 0 3 3
77  இசுரேல் 0 0 2 2
78  ஆஸ்திரியா 0 0 1 1
 டொமினிக்கன் குடியரசு 0 0 1 1
 எசுத்தோனியா 0 0 1 1
 பின்லாந்து 0 0 1 1
 மொரோக்கோ 0 0 1 1
 மல்தோவா 0 0 1 1
 நைஜீரியா 0 0 1 1
 போர்த்துகல் 0 0 1 1
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 0 0 1 1
 ஐக்கிய அரபு அமீரகம் 0 0 1 1
மொத்தம் (87 தேஒகு) 307 307 361 975

பதக்க நிலைகளில் மாறுதல்கள்

[தொகு]

ஆகத்து 18, 2016 அன்று கிர்கிசுத்தான் பாரம்தூக்கும் போட்டியாளர் இச்சத் ஆர்டிகோவ் ஆண்கள் 69 கிலோ வகுப்பில் பெற்ற வெண்கலப் பதக்கம் ஊக்கமருந்து சோதனையில் தவறியதால் பறிக்கப்பட்டது; அந்நிகழ்வில் நான்காவதாக வந்த கொலொம்பியாவின் லூயி யேவியர் மோசுகுயேராவிற்கு அது தரப்பட்டது.[16][17][18]

மாற்றப் பட்டியல்

[தொகு]
பதக்க நிலைகளில் அலுவல்முறையான மாற்றங்கள்
தீர்வு நாள் விளையாட்டு போட்டி தேஒகு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
18 ஆகத்து 2016 பாரம் தூக்குதல் ஆடவர் 69 கிலோ வகுப்பு பாரம் தூக்குதல்  கிர்கிசுத்தான் −1 −1
 கொலம்பியா +1 +1

மேற்சான்றுகள்

[தொகு]
 1. "Medals By Countries". Archived from the original on 18 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-18. பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
 2. "2016 Rio Olympics Medals Tally". 7 August 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
 3. "Rio Olympics 2016: Vietnam win first ever Games gold". BBC.com. 6 August 2016. http://www.bbc.com/sport/olympics/36684724. பார்த்த நாள்: 7 August 2016. 
 4. "Majlinda Kelmendi wins gold for Kosovo's historic first Olympic medal". CNN.com. 7 August 2016. http://edition.cnn.com/2016/08/07/sport/majlinda-kelmendi-kosovo-olympics/. பார்த்த நாள்: 7 August 2016. 
 5. "Fiji wins rugby sevens for nation's first Olympic gold". usatoday.com. 11 August 2016. http://www.usatoday.com/story/sports/olympics/rio-2016/2016/08/11/fiji-wins-rugby-sevens-first-olympic-gold/88591028/. பார்த்த நாள்: 12 August 2016. 
 6. "Olympics: Joseph Schooling's coronation complete as he wins Singapore's first gold". Straits Times. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
 7. "Rio Olympics 2016: Monica Puig wins Puerto Rico's first ever gold medal". BBC.com. 13 August 2016. http://www.bbc.com/sport/olympics/37074621. பார்த்த நாள்: 13 August 2016. 
 8. "Jebet wins Bahrain's first ever gold". reuters.com. 15 August 2016. http://www.reuters.com/article/us-olympics-rio-athletics-w-steeplechase-idUSKCN10Q1FF. பார்த்த நாள்: 15 August 2016. 
 9. "Ahmad Abughaush earns Jordan its first-ever gold in taekwondo 68kg". nbcolympics.com. 18 August 2016 இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160822154819/http://www.nbcolympics.com/video/ahmad-abughaush-earns-jordan-its-first-ever-gold-68kg. பார்த்த நாள்: 18 August 2016. 
 10. "Nazarov wins men's hammer for Tajikistan's first gold". reuters.com. 19 August 2016. http://www.reuters.com/article/us-olympics-rio-athletics-m-hammer-idUSKCN10V030. பார்த்த நாள்: 19 August 2016. 
 11. "Olympics: Cisse wins first ever gold for Ivory Coast". straitstimes.com. 19 August 2016. http://www.straitstimes.com/sport/olympics-cisse-wins-first-ever-gold-for-ivory-coast. பார்த்த நாள்: 19 August 2016. 
 12. "Kuwaiti becomes first independent athlete to win gold with men's double trap win". stuff.co.nz. 10 August 2016. http://www.stuff.co.nz/sport/olympics/83050529/kuwaiti-becomes-first-independent-athlete-to-win-gold-with-mens-double-trap-win. பார்த்த நாள்: 10 August 2016. 
 13. "Veteran Deehani wins men’s double trap gold – First-ever gold medal won by Kuwaiti at Olympics". Kuwait Times. 10 August 2016. http://news.kuwaittimes.net/website/veteran-deehani-wins-mens-double-trap-gold-first-ever-gold-medal-won-kuwaiti-olympics/. பார்த்த நாள்: 14 August 2016. 
 14. www.olympic org ஒலிம்பிக் சாற்றுரை, p.99
 15. Shipley, Amy (25 August 2008). "China's Show of Power". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/08/24/AR2008082400851_pf.html. பார்த்த நாள்: 28 August 2011. 
 16. Rio Olympics 2016:Izzat Artykov stripped of weightlifting bronze - BBC.com
 17. "Rio 2016: Weightlifting: Men's 69kg Schedule & Results". 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். Archived from the original on 27 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 18. "CAS AD 16/07 International Olympic Committee v. Izzat Artykov" (PDF). Archived from the original (PDF) on 2016-08-29. பார்க்கப்பட்ட நாள் 2016-08-22.

வெளி இணைப்புகள்

[தொகு]