2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


2016 ஒர்லாண்டோ இரவுக்கூடலகத் துப்பாக்கிச் சூடு
2006 ஆம் ஆண்டில் பல்சு இரவுகூடலகம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Florida" does not exist.
ஐக்கிய அமெரிக்க மாநிலம் புளோரிடாவில்
பல்சு இரவுக் கூடலகத்தின் அமைவிடம்
இடம்1912 தெற்கு ஓரஞ்சு அவென்யூ, ஒர்லாண்டோ, புளோரிடா, ஐ.அ.
ஆள்கூறுகள்
நாள்சூன் 12, 2016 (2016-06-12)
2:00 a.m. – 5:00 a.m. EDT (ஒ.ச.நே - 04:00)
தாக்குதல்
வகை
திரள் துப்பாக்கிச் சூடு
திரள் கொலை
இறப்பு(கள்)~50[1][2]
காயமடைந்தோர்~53
தாக்கியோர்ஓமார் மிர் சித்திக் மாத்தீன்[3]

சூன் 12, 2016இல் அமெரிக்க மாநிலம் புளோரிடாவின் ஒர்லாண்டோவில் பல்சு என்று பெயரிடப்பட்ட இரவுக்கூடலகத்தில் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்; 53 பேர் காயமடைந்தனர். துப்பாக்கியாளர் ஆப்கானித்தானைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் ஓமார் சித்திக் மாத்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.[3]

இதுவே அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான திரள் துப்பாக்கிச் சூடு ஆகும்.[4][5]பிழை காட்டு: Invalid <ref> tag; invalid names, e.g. too many

நிகழ்வு[தொகு]

சூன் 12, கிழக்கத்திய நேரம் காலை 2:02 மணிக்கு துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்டு இரவுக் கூடலகத்திற்கு பாதுகாப்பிற்கிருந்த காவல்துறை அதிகாரி துப்பாக்கியாளரை நோக்கி சுட்டார். பல்சு கூடலக நிர்வாகத்தினர் தங்களது முகநூல் பக்கத்தில் காலை 2:09 மணிக்கு "பல்சிலிருந்து அனைவரும் வெளியேறுங்கள்; ஓடுங்கள்" என்று பதிவு செய்திருந்தனர். துப்பாக்கியாளர் தாக்குதல் நீள் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, மற்றும் அதிகாரிகள் அபாயகரமானது என ஐயுற்ற மற்றுமொரு கருவியையும் வைத்திருந்தார். கூடுதல் காவலர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது கூடலகத்திற்குள் ஓடிய துப்பாக்கியாளர் அங்கிருந்தவர்களை பிணையாக்கினார்.[6][7]

பிணைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க, பேரம் பேச ஒருவர் நிகழிடத்திற்கு அனுப்பப்பட்டார்.[8].[9]பிழை காட்டு: Invalid <ref> tag; invalid names, e.g. too many துப்பாக்கியாளரிடம் வெடிக்கக்கூடிய கருவி இருந்ததாகக் கூறப்படுகின்றது.[10][11] காவல்துறையினரின் வெடிகுண்டு குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படுகின்றது.[8]

காலை 5:00 மணிக்கு சிறப்பு ஆயுத, தந்திரக் குழுவினர் கூடலகத்தினுள் நுழைந்து துப்பாக்கியாளருடன் சண்டையில் ஈடுபட்டனர்.[1] முப்பது பிணையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; ஒரு காவல் அதிகாரிக்கு தலையில் குண்டுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[12] ஒர்லாண்டோ காவல்துறை துப்பாக்கியாளர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.[13][14][15] இராய்ட்டர்சு நிறுவனம் துப்பாக்கியாளர் எப்போது கொலைகளை நிகழ்த்தினார் என்பது அறியப்படவில்லை என வெளியிட்டுள்ளது.[9]

தீவினையாளர்[தொகு]

2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு
பிறப்புஒமார் மிர் சித்திக் மாத்தீன்
நவம்பர் 16, 1986(1986-11-16)
இறப்புசூன் 12, 2016(2016-06-12) (அகவை 29)
ஒர்லாண்டோ, ஐ.அ.
தொழில்பாதுகாப்புக் காவலாளி - ஜி4எஸ் செகூர் சொலுசன்சு[16][17]

ஒமார் மிர் சித்திக் மாத்தீன் (நவம்பர் 16, 1986 – சூன் 12, 2016)[18] ஒர்லாண்டோவிலிருந்து ஏறத்தாழ 100 மைல்கள் (160 கிலோமீட்டர்கள்) தொலைவில் வாழ்ந்து வந்தார். நியூயார்க் மாநிலத்தில் ஆப்கானிய பெற்றோர்களுக்குப் பிறந்த மாத்தீன், முஸ்லிமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.[19][20] மார்ட்டின் கவுன்ட்டி உயர்நிலைப் பள்ளியில் குறைந்தது ஓராண்டாவது படித்துள்ளதாகவும் இந்தியன் ரிவர் ஸ்டேட் கல்லூரியிலிருந்து இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.[21] புளோரிடா மாநில சட்ட ஒழுங்குத் துறை ஆவணங்களின்படி இவர் மீது எந்த குற்றவியல் வழக்கும் பதியப்படவில்லை.[21] மாத்தீன் புளோரிடாவின் பியர்சு கோட்டை நகரில் வாழ்ந்து வந்தார்; ஆயினும் இவருக்கான அஞ்சல்களை பெற்றோரின் முகவரியில் செயின்ட் லூசியில் பெற்று வந்தார்.[21]

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "Orlando nightclub shooting: 50 killed in 'domestic terror incident' at gay club; gunman identified" (June 12, 2016).
 2. Barbaba Liston. "Fifty people killed in massacre at Florida gay nightclub: police".
 3. 3.0 3.1 "Orlando gunman identified as Omar Mateen". பார்த்த நாள் June 12, 2016.
 4. Lois Beckett, Orlando nightclub attack is deadliest US mass shooting in modern history, The Guardian (June 12, 2016).
 5. CNN, Ashley Fantz, Faith Karimi and Eliott C. McLaughlin. "Police: 50 killed in Florida nightclub terror attack". cnn.com. பார்த்த நாள் June 12, 2016.
 6. "Islamic terrorism tie eyed in Orlando gay bar shooting". பார்த்த நாள் June 12, 2016.
 7. "At Least 50 Dead in Orlando Gay Club Shooting, Suspect Identified, Officials Say". ABC News (June 12, 2016).
 8. 8.0 8.1 Steph Solis & John Bacon (June 12, 2016). "50 dead in nightclub, worst mass shooting in U.S. history". USA Today. http://www.usatoday.com/story/news/nation/2016/06/12/shooting-orlando-club/85785254/. பார்த்த நாள்: June 12, 2016. 
 9. 9.0 9.1 Barbara Liston. "Fifty people killed in massacre at Florida gay nightclub: police". Reuters. http://www.reuters.com/article/us-florida-shooting-nightclub-idUSKCN0YY08B. பார்த்த நாள்: June 12, 2016. 
 10. Ashley Fantz, Faith Karimi & Eliott C. McLaughlin (June 12, 2016). "Police: 50 killed in Florida nightclub terror attack". CNN. http://edition.cnn.com/2016/06/12/us/orlando-nightclub-shooting/. 
 11. Zappone, Chris (June 12, 2016). "Orlando, Florida gay nightclub shooting: multiple victims". Sydney Morning Herald. http://www.smh.com.au/world/orlando-florida-nightclub-shooting-multiple-people-being-held-20160612-gphea8.html. பார்த்த நாள்: June 12, 2016. 
 12. Kate Lyons (June 12, 2016). "Orlando Pulse club attack: gunman behind shooting that killed 50 'named as Omar Mateen'". The Guardian (New York). http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman. பார்த்த நாள்: June 12, 2016. 
 13. "Orlando nightclub shooting: Live reporting" (en-GB). BBC News.
 14. Lyons, Kate (June 12, 2016). "Orlando nightclub shooting: police confirm 'mass casualties' and gunman dead". The Guardian. http://www.theguardian.com/us-news/2016/jun/12/orlando-shooting-nightclub-pulse-gunman. பார்த்த நாள்: June 12, 2016. 
 15. "Shooting at gay nightclub in Orlando results in 'mass casualties'". Orlando Sentinel (June 12, 2016).
 16. "Orlando nightclub shooting: Omar Mateen was gunman, officials say". CNN. June 12, 2016. http://edition.cnn.com/2016/06/12/us/orlando-shooter-omar-mateen/index.html. 
 17. "Reports: Omar Mateen of Fort Pierce identified as Pulse Nightclub killer". http://fox28media.com/news/nation-world/police-omar-mir-mateen-of-port-st-lucie-identified-as-alleged-pulse-nightclub-killer. 
 18. Yuhas, Alan (June 12, 2016). "Florida nightclub shooting: 50 killed and 53 injured in 'act of terror' – rolling updates". தி கார்டியன். https://www.theguardian.com/world/live/2016/jun/12/florida-nightclub-shooting-terrorism-suspect-updates. பார்த்த நாள்: June 12, 2016. 
 19. 50 killed in shooting at Orlando nightclub, Mayor says - Fox News. June 12, 2016. Retrieved June 12, 2016.
 20. "CBS News: Gunman In Orlando Nightclub Shooting That Left Nearly 20 Dead Identified As Omar Mateen". Associated Press / CBS New York. June 12, 2016. http://newyork.cbslocal.com/2016/06/12/orlando-nightclub-shooting/. 
 21. 21.0 21.1 21.2 Jones, Elliott (June 12, 2016). "Who is Omar Mateen?". Treasure Coast Newspapers. http://www.tcpalm.com/news/crime/st-lucie-county/who-is-omar-mateen-35140633-45ca-1fbf-e053-0100007fbd3e-382613281.html. 

வெளியிணைப்புகள்[தொகு]