2016 இந்திய இருப்புப் பாதை நிதியறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2016- 2017ஆம் ஆண்டுக்கான இரும்புவழி நிதியறிக்கை பிப்ரவரி 25, 2016 அன்று இந்திய இரும்புவழி அமைச்சர் சுரேஷ் பிரபுவால் தாக்கல் செய்யப்பட்டது[1].

முக்கியக் கூறுகள்[தொகு]

 1. பயணியர் பயணக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
 2. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டவைகளில், 139 அறிவிப்புகள் மீதான செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
 3. ஆளில்லா லெவல் கிராசிங்குகள் 2020ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்படும்.
 4. இந்த நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக 17,000 பயோடாய்லட்டுகள் தொடருந்து நிலையங்களில் அமைக்கப்படும்.
 5. வயது முதிர்ந்தவர்களுக்கும், பெண்களுக்குமான இருக்கை இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
 6. வைபை இணைய வசதி 100 தொடருந்து நிலையங்களில் இந்த ஆண்டும், 400 தொடருந்து நிலையங்களில் அடுத்த ஆண்டும் ஏற்படுத்தப்படும்.
 7. 2000 பயணச்சீட்டுகள்/நிமிடம் எனும் நிலையிலிருந்து 7200 பயணச்சீட்டுகள்/நிமிடம் எனும் நிலைக்கு இணையவழி பயணச்சீட்டுப் பதிவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு நேரத்தில் 40,000 பயனர்கள் இணையவழி பயணச்சீட்டுப் பதிவை பயன்படுத்த இயலும் நிலை தற்போது 1,20,000 பயனர்கள் என மாறியுள்ளது.
 8. அனைத்து முக்கியத் தொடருந்து நிலையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
 9. கழிப்பறைகளை சுத்தப்படுத்தக் கோரும் வேண்டுகோள்களை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பலாம்.
 10. ஜிபிஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு செயற்படும் எண்ணியத் திரைகள் பயணப் பெட்டிகளில் பொருத்தப்படும். அடுத்து வரவிருக்கும் தொடருந்து நிலையங்களை இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
 11. பயணச் சீட்டை இரத்து செய்யும் வசதி, 139 எனும் உதவித் தொலைபேசி எண் மூலமாக ஏற்படுத்தப்படும்.

தமிழகத்துக்கான திட்டங்கள்[தொகு]

 • டெல்லியில் இருந்து சென்னைக்கு புதிய சரக்கு தொடருந்துப் பாதை அமைக்கப்படும். இதன் மூலமாக நாட்டின் வடக்கு, தெற்குப் பகுதிகள் சிறப்பான முறையில் இணைக்கப்படும்.
 • சென்னையில் உற்பத்தியாகும் தானுந்து வாகனங்களை தொடருந்து மூலம் அனுப்பும் வகையில் ‘Auto Hub’ எனப்படும் வாகன நடுவம் அமைக்கப்படும். இம்மாதிரியான வசதி இந்தியாவில் முதல்முறையாக செயற்படுத்தப்படவிருக்கிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]