2016 அரியலூர் கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தினி கொலை வழக்கு
இடம்சிறுகடம்பூர், அரியலூர், தமிழ்நாடு
தாக்குதல்
வகை
கூட்டுப் பாலியல் வல்லுறவுக் கொலை
இறப்பு(கள்)1
தாக்கியோர்மணிகண்டன்
மணிவண்ணன்
வெற்றிச்செல்வன்
திருமுருகன்.

2016 அரியலூர் கூட்டுப் பலாத்காரம் (2016 Ariyalur gang rape case) என்பது தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் 2016 திசம்பரில் இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் மற்றும் அவரது நண்பர்கள் மூவரால் கர்ப்பிணியான 17 வயது தலித் சிறுமி நந்தினியை கூட்டுப் பாலியல் வண்புணர்வு செய்து கொலை செய்ததைக் குறிக்கிறது. அந்த நபர்கள் அச்சிறுமியை கும்பல் பாலியல் வல்லுறவு செய்து, அவளது பிறப்புறுப்பை கூராயுதத்தால் அறுத்து கருப்பையில் இருந்த கருவை வெளியே எடுத்தனர். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே நந்தினி உயிரிழந்தார். இதையடுத்து அந்த நபர்கள் அவரது உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். கைகள் அழுகிய நிலையில், உடைகள் மற்றும் நகைகள் கழற்றப்பட்ட நிலையில், கிணற்றில் சடலமாக கிடந்தார்.

நந்தினி என்ற தாழ்த்தப்பட்ட தலித் பெண்ணானுடன், இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் ஒரு ஆண்டாக உறவில் இருந்துள்ளார். அதனால் கருத்தரித்த அவள் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கோபமடைந்ததே இதற்கு காரணம் என்று காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழ்வுக்கு முன் கருக்கலைப்பு செய்யுமாறும் அவர் நந்தினியை வற்புறுத்தி வந்தார். குற்றத்திற்காக துப்பு துலக்கும்போது அவர் நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் கிராம நிர்வாக அலுவலரிடம் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பின்னணி[தொகு]

சாதிப் பிரிவு[தொகு]

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி வயது 17. அவள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள 'சேரி'யில் குடும்பம் வசித்து வந்தது. தமிழ்நாட்டின் கிராமங்களில் சாதி அடிப்படையிலான பிரிவினை பொதுவாக நிலவுகிறது. வன்னியர் ஆதிக்கம் செலுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழச் சின்னங்களுடன் கூடிய மஞ்சள் கொடிகள், வன்னியர் ஒற்றுமையைக் காட்டும் விதமாக சுமார் 3000 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தின் வன்னியர் வீடுகளை ஒட்டிய பகுதிகளில் அலங்கரித்தன. 300 தலித் குடும்பங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் அல்லது தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளில் வசித்து வருகின்றனர். அந்த தலித்துகளின் ஆதரவானது திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு பரவளாக உள்ளது. [1][2][3]

மணிகண்டனுடன் உறவு[தொகு]

8 ஆம் வகுப்பு வரை படித்த நந்தினி, கட்டிட வேலைகளுக்கு, முதன்மையாக கற்காரை இடும் பணிக்கு சென்று, ஒரு நாளைக்கு 50 முதல் 100 கொண்டுவந்து தன் குடும்பத்துக்கு கொடுத்து உதவியாக இருந்து வந்தார். பண வசதியும், ஜாதி வசதியும் உள்ள தன் தோழிகளின் கைப்பேசியை வாங்கிக் கொண்டு, மணிகண்டனுடன் நீண்ட நேரம் பேசி, ஒரு வருடமாக அவருடன் தொடர்பில் இருந்தார். 26 வயதுடைய மணிகண்டன், ஆதிக்க சாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளரும் ஆவார். 10 ஆம் வகுப்பு வரை படித்த அவர் 1980 இல் உருவாக்கப்பட்ட இந்து முன்னணியின் உள்ளூர் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் கற்காரை அமைக்கும் பணியை மேற்பார்வையிட்டுவந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்ததால், அவர்கள் இருவரும் இடையில் உறவு உண்டானது. [1] மணிகண்டனின் பக்கத்து வீட்டுக்காரர், அவர் வேலை முடிந்து இரவு நேரங்களில் அவளை வீட்டில் இறக்கி விடுவதாகவும், அவளுடன் பேசுவதற்காக வெளியில் உள்ள தலித் கழிவறை அருகே காத்திருந்ததாகவும் கூறினார். மணிகண்டன் 2 தேவாலயங்களை சேதப்படுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறான செயல்களில் ஈடுபட்டது உட்பட பல குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட ஒரு நபர் ஆவார். [4][5][6]

நிகழ்வுகளின் காலக்கோடு[தொகு]

29 திசம்பர் 2016 அன்று நந்தினி காணாமல் போனார்.[7] அன்று இரவு சுமார் 8:30 மணியளவில் நந்தினியின் தாயாரின் உறவினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் வேலூரைச் சேர்ந்தவர் என்றும் நந்தினி தன்ன்னிடம் இருப்பதாகவும் சொன்னார். [3] புகாரில் மணிகண்டன் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டனர். [2][8] காவலர்கள் மணிகண்டனை வரவழைத்தது விசாரிக்கையில், அவர் அவளுடன் எந்தத் தொடர்பும் தனக்கு இல்லை என்று மறுத்துவிட்டார். உள்ளூர் துணை ஆய்வாளர் அவரை செல்ல அனுமதித்தார். [6]

30 திசம்பர் 2016, நந்தினியின் குடும்பத்தினர் கடத்தல் புகார் அளித்தனர். அவரது தாயார் "இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் தன் மகளைக் கடத்திச் சென்றுவிட்டார்" என்று புகார் அளித்தார். ஆனால் அதற்குப் பதிலாக "அவரது மகள் காணவில்லை" என்று புகார் அளிக்குமாறு காவல்துறை கூறியது. காவர்லகள் "காணவில்லை" என்று புகார் பதிவு செய்தனர். [9] The police lodged a "missing" complaint.[10] இது இந்திய தண்டனைச் சட்டத்தின் 361வது பிரிவை மீறுவதாகும், இது உரிய வயதை அடையாத ஒரு பெண் அவரின் பாதுகாவலரின் முறையான அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட்டால், அது குழந்தை கடத்தப்பட்டதாகக் கருதப்படும் என்று வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. [3][6]

5 சனவரி 2017, காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. நந்தினியின் தோழியான தேவி, நந்தினிக்கும் மணிகண்டனுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றியும், நந்தினி கர்ப்பமாக இருப்பதாகவும் காவல்களிடம் தெரிவிக்கிறார். சனவரி 5ஆம் நாள் இரும்புலிக்குறிச்சி காவல்துறையினரால் மணிகண்டன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அவர் சார்பாக சாட்சிக் கையெழுத்திட்டனர். மேலும் அவரை செல்ல காவலர்கள் அனுமதித்தனர். இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையினர் மணிகண்டனை வீட்டுக்குச் செல்ல அனுமதித்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மறுநாள் மணிகண்டன் தலைமறைவானார். [3][6]

9 சனவரி 2017, மணிகண்டனின் நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்குகின்றனர். [6]

12 சனவரி 2017, நஞ்சருந்திய மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். [6] கொடுக்கூர் கிராமத்தில் உள்ள முந்திரிக் காட்டில் மணிகண்டன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து குவாகம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனிடம் வாக்குமூலம் பெற்று, நந்தினியின் கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்தார். [3]

14 சனவரி 2017, கிராம நிர்வாக அதிகாரியிடம் சட்டமுறைக்குப் புறத்தான வாக்குமூலத்தில் நந்தினியைக் கொன்றதாக மணிகண்டன் தெரிவித்தார். கீழ்மாளிகை கிராமத்தில் உள்ள கிணற்றில் ஆடைகளும், நகைகளும் கழற்றப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் நந்தினியின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. நந்தினியின் உடலை அடையாளம் காண அவரது குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் அதை உறுதி செய்தனர். [1][2][8][6]

நிகழ்வு[தொகு]

சனவரி 14ஆம் நாள் நந்தினியின் உடலைக் கண்டுபிடித்த பிறகு, இந்து முன்னணி ஒன்றியச் செயலாளரிடம் காவர்கள் நடத்திய விசாரணையில், கருக்கலைப்பு செய்யுமாறு மணிகண்டன் நந்தினிக்கு அழுத்தம் கொடுத்தபோது. கர்ப்பமான தன்னை மணிகண்டனே மணந்துகொள்ள வேண்டும் என நந்தினி தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. [6] அவள் தலித் சமூகமான பறையர் சாதியைச் சேர்ந்தவள் என்பதற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பவில்லை. [3] நந்தினி தான் கருத்தரித்த விசயத்தை தனது குடும்பத்தாரிடம் மறைக்க சிரமமாக இருந்ததால் தனது வீட்டை விட்டு வெளியேறினார். [11]

அவரை முக்கிய குற்றவாளியான மணிகண்டன் கடத்திச் சென்றது காவர்களின் விசாரணையில் தெரியவந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அவள் மணிகண்டனாலும் அவனது மூன்று நண்பர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டாள். பின்னர் அந்த நபர்கள் அவரது பிறப்புறுப்பை கூரான ஆயுதத்தால் அறுத்து கருப்பையில் இருந்த கருவை வெளியே எடுத்தனர்.அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் நந்தினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அந்த நபர்கள் அவளது கைகளை கட்டி, உடலில் ஒரு கல்லைக் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசினர். மேலும் சந்தேகம் வராமல் இருக்க நாயை கொன்று உடலை அதே கிணற்றில் போட்டுள்ளனர். [1][12][13][14]

நந்தினியின் உடல் சிதைந்த நிலையில் சிறுகடம்பூர் கிராமத்தில் சனவரி 14ஆம் நாள் கண்டெடுக்கப்பட்டது. [11] கைகள் முதுகில் கட்டப்பட்ட நிலையில், உடைகளும், நகைகளும் கழற்றப்பட்ட நிலையில் காணப்பட்டார். [6][13]

பிணக் கூறாய்வு[தொகு]

நந்தினியின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிணக்கூறு ஆய்வு செய்யப்பட்டது. கூறாய்வின் முடிவில் நந்தினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. [8] உடலின் சிதைவின் அளவை விவரிக்கும் பிணக்கூறாய்வின் அடிப்படையில், பிணம் கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது மரணம் நிகழ்ந்ததாகவும், அவர் சட்டமுரணான தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்தனர். செயல்பாட்டாளர்களும் நந்தினியின் குடும்பத்தினரும் அறிக்கையை நம்பவில்லை. உண்மை கண்டறியும் குழுவைக் கூட்டிய அரியலூர் செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான சசிகுமார், சனவரி 3 வரை நந்தினி மணிகண்டனுடன் காணப்பட்டதாகக் கூறினார். பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதை மறைப்பதற்காக, இறப்புத் தேதியை திசம்பர் 29 என்று நிர்ணயம் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக குடும்பத்தினர் கூறினர். [3]

கைதுகள்[தொகு]

துணைக் காவல் கண்காணிப்பாளரின் வாக்குமூலத்தின்படி, சனவரி 14 அன்று, மணிகண்டன் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து குற்றங்களை ஒப்புக்கொண்டார். [15][16] மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.[17]

எதிர்வினைகள்[தொகு]

#Justice4Nandhini என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான மக்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. [18]

பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலர் சின்னதுரை கூறியதாவது: இதற்குப் பின்னணியில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கமும் (ஆர்எஸ்எஸ்), இந்து முன்னணியும்தான் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. [3]

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது, காவல்துறையும் பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து வழக்கை நீர்த்துப்போகச் செய்கின்றன” [19]

நடிகர் கமல்ஹாசன் பாலியல் வண்புணர்வு மற்றும் கொலைக்கு நீதி கேட்டு, தாமதமாக தனது கவலையை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்டார். [20]

சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வலியுறுத்தினார். [6]

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கிராமத்திற்கு வந்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என திமுக சார்பில் பரப்புரை செய்யப்படும் என்று தெரிவித்தார். [3]

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.[21]

சர்ச்சை[தொகு]

காவல் துறையின் செயல்பாடு[தொகு]

இந்த குற்றத்தில் மேலும் ஒருவரும் ஈடுபட்டிருப்பதாக குடும்பத்தினர் கருதினர். இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளரான மணிகண்டனும் அவருடன் இணைந்து பணிபுரிவதால் அந்தக் குற்றத்தில் அவரும் அங்கம் வகித்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.[16] மாவட்டச் செயலாளருக்கு இந்தக் குற்றச்செயல் பற்றி முன்பே தெரியும் என்று பல கிராம மக்கள் குற்றம் சாட்டுவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்து முன்னணி மாவட்டச் செயலாளரிடம் விசாரணையே நடத்தப்படவில்லை என அரியலூர் காவல் துறையினர் தெரிவித்த நிலையில், மாவட்டச் செயலாளருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று குடும்ப வழக்கறிஞர் சசிக்குமார் கூறினார். நந்தினியின் சகோதரி கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் முதல் புகார் அளித்த போது, காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தியிருந்தால், தன் தங்கை உயிருடன் இருப்பார் என்றார். [22] சனவரி 16 ஆம் நாள் துணைக் காவல் கண்காணிப்பாளர் தனது வீட்டிற்கு வந்தபோது, தன் மகளை தான் சரியான முறையில் வளர்க்கவில்லை என்று அந்த அதிகாரி தன்னை கேலி செய்ததாக நந்தினியின் தாய் கூறினார். [3]

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளருடன் நெருங்கிய தொடர்புடையவர் என்று உள்ளூர் காவல் ஆய்வாளர் கூறினார். இந்து சமயத்தை பாதுகாப்பதற்காக என்று கூறி அவர்கள் தேவாலய வழிபாடுகளின் போது வன்முறையைத் தூண்டுகிறார்கள். கொந்தளிப்பைத் தடுக்க அவர்களின் நிலைமையை எச்சரிக்கையாக கையாள வேண்டியிருந்தது. [17]

நீதிமன்ற தீர்ப்புகள்[தொகு]

2017 ஏப்ரலில், சென்னை உயர் நீதிமன்றம் சி.பி-சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிட்டது. நீதிபதி ஆர். மகாதேவன், சிறுமியின் தாயின் அசல் புகாரைப் பார்த்த பிறகே உத்தரவு பிறப்பித்தார். [23]

2019 ஏப்ரலில், கூட்டு பலாத்கார வழக்கை சிபி-சிஐடிக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. [24] நீதிபதி ஜி. கே. இளந்திரையன், இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 டி பிரிவை வழக்குகளுக்குப் பயன்படுத்தவும், விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.[25]

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 

  1. 1.0 1.1 1.2 1.3 "Gangraped and dumped in a well: Four arrested for murder of a Dalit girl in Ariyalur". The News Minute. 24 January 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  2. 2.0 2.1 2.2 Akilan, Mayura (3 February 2017). "தலித் சிறுமி நந்தினி கொடூர கொலை: இந்து முன்னணி மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது!". OneIndia Tamil.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 Priyanka, Thirumurthy (2 May 2018). "Anatomy of a forgotten rape: A year since Nandhini was killed, justice remains elusive". The News Minute.
  4. NATH, AKSHAYA (4 February 2017). "How the news of this Dalit girl's rape and murder in Tamil Nadu went unheard". Dailyo.in.
  5. "Missing girl found murdered" (in en-IN). The Hindu. 2017-01-15. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Missing-girl-found-murdered/article17041259.ece. 
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 "Nandini rape and murder: Complicated caste, religion politics plays out in Tamil Nadu". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.
  7. "அரியலூர் மாணவி நந்தினி பலாத்கார, கொலை வழக்கு: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு". TheHindu Tamil. பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.
  8. 8.0 8.1 8.2 "அரியலூர் இளம்பெண் நந்தினி கொலை வழக்கு: இந்து முன்னணி பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது || Ariyalur young woman nandhini murder case". Maalaimalar. 3 February 2017. Archived from the original on 22 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2021.
  9. "தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலிசார் புகாரை மாற்றி எழுத சொன்னதாக சர்ச்சை" (in ta). BBC News. 2017-02-04. https://www.bbc.com/tamil/india-38867979. 
  10. Akilan, Mayura (2017-02-03). "நந்தினி கொலை வழக்கு - இந்து முன்னணி கும்பலுக்கு ஆதரவாக படுஅலட்சியம் காட்டிய போலீஸ்!". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.
  11. 11.0 11.1 TNN (5 Mar 2017). "Dalit girl murder case: One more accused booked under goondas act | Trichy News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  12. "தலித் பெண் நந்தினி கொலை வழக்கு! மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!". Times of India - Samayam Tamil. 5 February 2017.
  13. 13.0 13.1 Selvaraj, A. (6 February 2017). "Outrage over rape-murder of dalit girl | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  14. Mathi (2017-02-02). "தலித் சிறுமி கூட்டு பலாத்காரம்- பெண்ணுறுப்பை கிழித்து சிசுவை வெளியே எடுத்த இந்து முன்னணி கும்பல்!". OneIndia Tamil. பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.
  15. "Goondas Act slapped on Hindu Munnani man held for murder". dtNext.in (in ஆங்கிலம்). 2017-02-04. Archived from the original on 2021-11-22. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  16. 16.0 16.1 "CB-CID probe sought into murder of minor Dalit girl" (in en-IN). The Hindu. 2017-02-05. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/CB-CID-probe-sought-into-murder-of-minor-Dalit-girl/article17197108.ece. 
  17. 17.0 17.1 Shekhar, Laasya (2017-02-06). "Ariyalur: Was 17-year-old Dalit girl gangraped, killed?". Deccan Chronicle (in ஆங்கிலம்).
  18. Kumar, Veera (2017-02-04). "நந்தினி கொலைக்கு நீதி வேண்டும் - கமல் #Justice4Nandhini". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  19. Dileepan, M. "அந்த 4 பேரை முக்கிய சாட்சிகளாக சேர்க்காதது ஏன்? நந்தினி கொலை வழக்கின் சந்தேகம்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  20. "நந்தினி கொலைக்கு நீதி கேட்கும் கமலஹாசன் #Justice4Nandhini". Times of India - Samayam. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  21. Staff Reporter (2017-02-05). "MMK demands stiff punishment for murder accused" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/MMK-demands-stiff-punishment-for-murder-accused/article17195814.ece. 
  22. Mathew, Pheba (2017-03-22). "Police Delayed Probe: Family of Raped & Murdered Dalit Girl". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  23. "CB-CID to probe rape, murder of Ariyalur Dalit". The New Indian Express. 11 April 2017.
  24. "Won't transfer Ariyalur rape & murder case: Madras HC". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-05.
  25. TNN (2 April 2019). "HC declines to transfer Ariyalur case to CB-CID | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).