உள்ளடக்கத்துக்குச் செல்

2014 ஹிரோஷிமா நிலச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிரோஷிமா நிலச்சரிவு
Map
நாள்20 ஆகஸ்டு 2014
அமைவிடம்ஹிரோஷிமா நிலப்பகுதி, ஜப்பான்
காரணம்பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு
இறப்புகள்41[1]
காணாமல் போனோர்47[2][3]

2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 அன்று ஜப்பானின் ஹிரோஷிமா நிலப்பகுதியில் கடும் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நாற்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.[4][5]

காரணி

[தொகு]

ஹிரோஷிமாவில் ஒரு மாதம் பொழிய வேண்டிய மழை, பேய் மழையை போன்று ஒரே நாளில் பொழிந்ததால்,அந்நகரத்தின் அருகே இருந்த மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.[4] அதிகப்பட்சமாக, அசாகிடா-கு எனும் பகுதியில் 217.5 மில்லிமீட்டர்கள் (8.56 அங்) மழை அதிகாலை ஒன்றரை மணி முதல் நான்கரை மணி வரை பொழிந்தது. அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் அதே பகுதியில் இரண்டு முறை நிலச்சரிவு நிகழ்ந்தது.

சேதங்களின் விவரங்கள்

[தொகு]

நிலச்சரிவில் சிக்கி நாற்பது பேர் இறந்தனர் மற்றும் 22 ஆகஸ்டு வரையில் ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் கண்டெடுக்கப்படாமல் உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளோர் பற்றிய தகவல் ஏதுமில்லாததால், பலி எண்ணிக்கை நூறைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.[6]

மீட்புப் பணிகள்

[தொகு]

மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள உள்ளூர் அணிகளுக்கு உதவ ராணுவத்திற்கு கட்டளை இட்டுள்ளார் அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "広島土砂災害の死者41人に 不明47人、捜索は難航". Asahi Shimbun. 23 August 2014. Retrieved 22 August 2014.
  2. ↑ "Rain hampering search operation in Hiroshima". NHK World. 22 August 2014. Archived from the original on 26 ஆகத்து 2014. Retrieved 22 August 2014.
  3. ↑ "救助・捜索を阻む雨、死者40人・不明47人に". The Yomiuri Shimbun. 22 August 2014. Archived from the original on 26 ஆகத்து 2014. Retrieved 22 August 2014.
  4. 1 2 3 "Japan landslides kill 32 in Hiroshima prefecture". BBC News. 20 August 2014. Retrieved 20 August 2014.
  5. ↑ Hanai, Toru (20 August 2014). "Landslides hit Japan's Hiroshima, killing at least 36". Reuters. Archived from the original on 21 ஆகத்து 2014. Retrieved 21 August 2014.
  6. ↑ "Japan landslide: Death toll rises to 39 in Hiroshima". BBC News. 22 August 2014. Retrieved 22 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_ஹிரோஷிமா_நிலச்சரிவு&oldid=4662770" இலிருந்து மீள்விக்கப்பட்டது