2013 மரக்காணம் வன்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2013 மரக்காணம் வன்முறை (2013 Marakkanam violence) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த வன்முறையைக் குறிக்கிறது. இது மரக்காணம் கிராமவாசிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இடையே நடந்த மோதலாகும். இதில் இரு நபர்கள் கொல்லப்பட்டனர்.[1] இதே சாதியினருக்கு இடையே மரக்காணத்தில் 2002 ஆம் ஆண்டு மோதல்கள் நடந்திருக்கின்றன.

பின்னணி[தொகு]

ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெருவிழா' நடப்பது வழக்கம். இந்த நிலையில் 2012 இல் நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவில், பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானதாக பலரால் கண்டிக்கப்பட்டது.[2][3][4] அதே ஆண்டு தருமபுரி வன்முறைகள் வன்னியருக்கும் , தலித்துகளுக்கும் இடையில் நடந்தன. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையில் கசப்புணர்வு நிலவியது. இதனால், 2013 இல் 'வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடத்தக் கூடாது' என ஒரு சிலரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் 2013 ஏப்ரல் 25 அன்று வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு கொண்டாட்டத்தை நடத்தின. இந்த விழாவை ஒட்டி மரக்காணம் சாதிக் கலவரம் நடந்தது.[5] இதன் பிறகு நடந்த மோதலையடுத்து இரண்டு  பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆறு தலித்துகளால் கொல்லப்பட்டனர்.[6] [1].[7]

வன்முறை[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி விழாவுக்கு வந்தவர்களில் ஒரு குழுவினர் 2013 ஏப்ரல் 25 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்களைத் தாக்கியும் அவர்களின் குடியிருப்புகளைக் கொளுத்தினர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் வெளியூர்காரர்கள் என்றாலும் அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியிருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களே என்ற குற்றச்சாட்டை மக்கள் சிவில் உரிமைக் கழக உண்மை அறியும் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஏனென்றால் இந்த வன்முறையில் தலித் வீடுகள் தவிர பிற சாதியினர் வீடுகள் எதுவும் தாக்கப்படவில்லை என தன் அறிக்கையில் குழு தெரிவித்தது.[8]

பின்விளைவுகள்[தொகு]

இந்த நிகழ்வு தொடர்பாக ஏப்ரல் 30 அன்று விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ச. இராமதாசு மற்றும் கட்சித் தலைவர் கோ. க. மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.[9] இந்த கைதின் காரணமாக, தமிழகத்தில் பா.ம.க,  வன்முறைகளில் ஈடுபட்டது.[10] இந்த வன்முறையின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏறத்தாழ 1,601 பேருந்துகள் இயக்கப்படவில்லை.[11] இந்த வன்முறையானது மே 11 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்து ச. இராமதாஸ் விடுதலைச் செய்யப்படும் வரை நடந்தது.[12] இந்த வன்முறையால் மொத்தம் 853 பேருந்துகள் சேதமடைந்தது மட்டுமல்லாது 165 மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன . இந்த வன்முறை காரணமாக பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்வதாக தமிழக அரசு அச்சுறுத்தியுள்ளது.[13] இந்த வன்முறைகள் பாமக நிறுவனர் இராமதாஸ்  கைது செய்யப்பட்டதால்  நடத்தப்பட்டன.[14]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Two killed after violence in Marakkanam near Chennai". The Times of India (2013-04-26). பார்த்த நாள் 2013-06-03.
 2. Chakra. "வெட்டி தள்ளுங்க..: சாதி உணர்வை தூண்டிய காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீஸ் வழக்குப்பதிவு". OneIndia. பார்த்த நாள் 30 April 2013.
 3. "Double disadvantage". மூல முகவரியிலிருந்து 13 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 December 2016.
 4. "Why I want to ask disturbing questions and say the unsaid". மூல முகவரியிலிருந்து 27 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 December 2016. "...Kaduvetti Guru has repeatedly been broadcasting this message. At a Chitra Pournami event in Mahabalipuram addressing Vanniyar youth, Guru openly exhorted that men of other castes marrying Vanniyar women should be killed."
 5. Special Correspondent (2013-04-29). "CM holds PMK, Vanniyar Sangam responsible for Marakkanam riots". The Hindu. பார்த்த நாள் 2013-06-03.
 6. "Marakkanam violence: Six VCK cadres get jail term for murder of PMK man - Times of India". The Times of India. http://m.timesofindia.com/city/chennai/Marakkanam-violence-Six-VCK-cadres-get-jail-term-for-murder-of-PMK-man/articleshow/50835978.cms. பார்த்த நாள்: 2017-09-13. 
 7. TNN (2013-04-26). "Two killed after violence in Marakkanam near Chennai". The Times of India. பார்த்த நாள் 2013-06-03.
 8. "மரக்காணம் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை". கட்டுரை. கீற்று (2013 மே 6). பார்த்த நாள் 31 மே 2018.
 9. Special Correspondent (2013-04-30). "Ramadoss, Mani held for demonstration bid". The Hindu. பார்த்த நாள் 2013-06-03.
 10. TNN (2013-05-03). "Violence continues in TN as PMK protests Ramadoss arrest". The Times of India. பார்த்த நாள் 2013-06-03.
 11. "853 buses damaged, 165 trees cut down during PMK violence: Jayalalithaa". The Times of India (2013-05-13). பார்த்த நாள் 2013-06-03.
 12. "PMK founder S Ramadoss released from prison, slams Jayalalithaa govt". Indian Express (2013-05-11). பார்த்த நாள் 2013-06-03.
 13. "Jayalalithaa threatens to ban Ramadoss' PMK over Marakkanam violence". Indian Express (2013-05-13). பார்த்த நாள் 2013-06-03.
 14. "Marakkanam violence: Six VCK cadres get jail term for murder of PMK man - Times of India". The Times of India. http://m.timesofindia.com/city/chennai/Marakkanam-violence-Six-VCK-cadres-get-jail-term-for-murder-of-PMK-man/articleshow/50835978.cms. பார்த்த நாள்: 2017-09-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2013_மரக்காணம்_வன்முறை&oldid=2597307" இருந்து மீள்விக்கப்பட்டது