2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து என்பது (2013 Mediterranean Sea migrant shipwreck) அக்டோபர் 3, 2013 அன்று புலம்பெயர்வோரை ஏற்றிக் கொண்டு லிபியாவிலிருந்து இத்தாலிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு கப்பல் இத்தாலியின் லாம்பெடுசா எனும் தீவில் மூழ்கிய நிகழ்வைக் குறிக்கிறது. இதில் 134 பேர் உயிரிழந்தனர்.[1] இத்தாலியக் கடலோரக் காவல் படையினரால் உயிர்பிழைத்த 140 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும், 500 பேர் படகில் இருந்ததாக நம்பப்படுகிறது.[2] அந்தப் கப்பல் லிபியாவின் மிஸ்ரடாவிலிருந்து வந்தது எனவும் ஆனால் அதிலிருந்த புலம்பெயர்வோர் பலரும் சோமாலியாவையும் எரிட்ரியாவையும் சேர்ந்தவர்கள் எனவும் அறியப்படுகிறது.[1][2]

நிகழ்வு[தொகு]

கப்பல் பயணத்தைத் தொடங்குகையில் அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அறியப்படுகிறது. மேலும், அது லாம்பெடுசாவிலிருந்து கால் மைல் தூரம் சென்றதுமே அதன் பொறியில் (engine) கோளாறு ஏற்பட்டது அறியப்பட்டது. எனவே, அருகிலிருந்த கப்பல்களுக்கு அறிவிக்கும்பொருட்டு அப்படகில் ஒரு போர்வை பற்றவைக்கப்பட்டது. ஆனால், அது நிலைமையை மேலும் தீவிரமாக்கியது. அப்போர்வையின் தீயால் அங்கிருந்த பெட்ரோல் பற்றிக் கொண்டது. எனவே, கப்பல் மேலும் வேகமாக மூழ்கத் தொடங்கியது.[1][2] நெருப்பிலிருந்துப் பிழைப்பதற்காக மக்களுள் பலரும் கடலில் குதித்தனர். மேலும், பலர் படகின் ஒரே இடத்தில் குவியத் தொடங்கினர்.[2] குறைந்தது 250 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.[3]

விளைவுகள்[தொகு]

திருத்தந்தை பிரான்சிசு டுவிட்டரில் "லாம்பெடுசா கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காக கடவுளை நோக்கி வேண்டுதல் செய்யக்" கேட்டுக்கொண்டார்.[1] இத்தாலியப் பிரதமர் என்ரிக்கோ லெட்டா "ஒரு மிகப்பெரும் விபத்து" என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.[2] அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் மேலாளர் (United Nations High Commissioner for Refugees) அன்டோனியோ குட்டெரெஸ் இத்தாலியக் கடலோரக் காவல் படையின் உடனடி செயல்பாட்டினைப் பாராட்டினார்.[2]

இத்தாலியத் துணைப் பிரதமர் ஏஞ்செலினோ அல்ஃபானோ அகதிகளின் வருகையைச் சமாளிக்க ஐரோப்பிய உதவியை நாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை "ஐரோப்பிய துயரம்" என்றும் அறிவித்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Gaia Pianigiani (3 October 2013). "Scores of Migrants Dead After Boat Sinks Off Sicily". The New York Times (Siracusa). http://www.nytimes.com/2013/10/04/world/europe/scores-die-in-shipwreck-off-sicily.html?_r=0. பார்த்த நாள்: 3 October 2013. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Dozens of migrants die in Italy boat sinking near Lampedusa". BBC News. 3 October 2013. பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.
  3. Davies, Lizzy (3 October 2013). "Italy boat wreck: scores of migrants die as boat sinks off Lampedusa". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.
  4. "Italy calls for European help on refugees as scores drown in Lampedusa shipwreck". Daily Telegraph. 3 October 2013. பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.