2013 பெஷாவர் குண்டுவெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செப்டம்பர் 2013 பெஷாவர் குண்டுவெடிப்பு (September 2013 Peshawar bombing)
வடமேற்குப் பாகிஸ்தான் போர்
இடம்பெஷாவர், கைபர் பக்துங்வா, பாகிஸ்தான்
நாள்22 செப்டம்பர்2013
இறப்பு(கள்)80 - 81 [1][2]
காயமடைந்தோர்130

செப்டம்பர் 22, 2013 அன்று பெஷாவரிலுள்ள அனைத்துப் புனிதர் தேவாலயத்திற்கு வெளியே ஓர் இரட்டைத் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.[3] அதில் 78 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 130 பேர் காயமடைந்தனர்.[4][5] பாகிஸ்தானின் வரலாற்றிலேயே சிறுபான்மை கிறுத்துவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இதுவாகும்.[6]

குண்டுகள்[தொகு]

இரு குண்டுகள் ஏந்திய தற்கொலைப்படை வீரர்கள் ஒரு பாதுகாவலரைக் கொன்று, மற்றொருவரைத் தாக்கி தேவாலயத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து காவலாளி ஒருவரால் நிறுத்தப்படும்போது ஒரு தற்கொலைப்படை வீரர் குண்டினை வெடிக்கச் செய்தார். இரண்டாவது தற்கொலைப்படை வீரர் தேவாலயத்திற்குள் நுழைந்து அங்கு குண்டினை வெடிக்கச் செய்தான்.[1] தாக்குதலைப் பார்த்த ஒருவரது தெரிவிப்பின்படி, பக்தர்கள் இலவச உணவுக்காக தேவாலயத்தின் புல்வெளியில் காத்திருந்தபொழுது குண்டு வெடித்தது என்று கூறுகின்றார்.[6] தேவாலயத்தின் சுவர்களிலும் சன்னல்களிலும் ஓட்டைகல் இருந்தன. மேலும், குண்டின் தாக்கத்தில் பக்கத்துக் கட்டடங்களும் சேதத்திற்கு உட்பட்டன. தாக்குதல் நடத்தியவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. இந்த தாக்குதல் 6 கிலோ கிராம் வெடிமருந்து கொண்டு நடத்தப்பட்டது.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Twin church blasts claim 78 lives in Peshawar". Dawn (22 September 2013). பார்த்த நாள் 22 September 2013.
  2. "mosque blast killed 78 people". Geo News (22 September 2013). பார்த்த நாள் 22 September 2013.
  3. "Suicide bombers attack historic church in Peshawar, 60 killed". Zee News (22 September 2013). பார்த்த நாள் 22 September 2013.
  4. "40 die in Pakistan bombing". BBC News (22 September 2013). பார்த்த நாள் 22 September 2013.
  5. "Twin church blasts claims 66 lives in Peshawar". Dawn (22 September 2013). பார்த்த நாள் 22 September 2013.
  6. 6.0 6.1 "Suicide bomb attack kills 60 at Pakistan church". The Los Angeles Times (22 September 2013). பார்த்த நாள் 22 September 2013.