உள்ளடக்கத்துக்குச் செல்

2012 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012
திரைப்பட சுவரிதழ்
இயக்கம்ரோலண்ட் எம்மெரிச்
தயாரிப்புஹரால்ட் குளோசர்
மார்க் கோர்டன்
லாரி ஜே. பிராங்கோ
கதைஹாரல்ட் குளோசர்
ரோலண்ட் எமர்மெரி
இசைஹரால்ட் குளோசர்
தாமஸ் வாண்டர்
நடிப்பு
  • ஜான் குசாக்
  • சிவெடெல் ஈஜியோபோ
  • அமண்டா பீட்
  • ஆலிவர் பிளாட்
  • தாண்டி நியூட்டன்
  • டேனி க்ளோவர்
  • உட்டி ஹார்ல்சன்
ஒளிப்பதிவுடீன் செம்லர்
படத்தொகுப்புடேவிட் ப்ரென்னர்
பீட்டர் எலியட்
கலையகம்சென்ட்ரோபோலிஸ் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 2009 (2009-11-13)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஐக்கிய மாநிலங்கள்[1]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்[2]
மொத்த வருவாய்$769.7 மில்லியன்[3]

2012 என்பது 2009 ஆண்டைய அமேரிக்க காவிய அறிவியல் புனைக்கதை பேரழிவுத் திரைப்படமாகும். இப்படத்தை ரோலண்ட் எமீரிச் இயக்கியுள்ளார். படத்தில் ஜான் குசாக், சிவெடெல் ஈஜியோபோ, அமண்டா பீட், ஆலிவர் பிளாட், தாண்டி நியூட்டன், டேனி க்ளோவர், வூடி ஹாரல்சன் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் செண்ட்ரோபோலிஸ் எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டு கொலம்பியா பிக்சர்சால் விநியோகிக்கப்பட்டது.[1]

முதலில் படத்தின் படப்பிடிப்பை லாஸ் ஏஞ்சலசில் துவக்க திட்டமிடப்பட்டது, ஆனால் படப்பிடிப்பு 2008 ஆகத்தில் வான்கூவரில் துவக்கப்பட்டது. உலகளாவிய நிலவியல் பேரழிவுகளுக்கு மத்தியில் கதாநாயகனான புதின எழுத்தாளர் ஜாக்சன் கர்ட்டிஸ் தன் குடும்பத்தைக் காக்க முயற்சிப்பதாக இத்திரைப்படம் தொடங்குகிறது. இப்படம் அமேரிக்கப் பழங்குடிகளான மாயன்களின் நாட்காட்டியின்படி 2012 நிகழ்வான பேரழிவை சித்தரிக்கிறது.

2012 நவம்பர் 13 அன்று சர்வதேச அளவில் இப்படம் வெளியிடப்பட்டது.  இத் திரைப்படமானது விமர்சகரிகளிடம் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, படத்தின்  சிறப்புக் காட்சியமைப்பு (ஸ்பெசல் எபக்ட்) மற்றும் பிற பணிகள் குறித்து புகழப்பட்டது, அதேசமயம் படத்தின் திரைக்கதை மற்றும் நீளம் போன்றவை விமர்சனத்துக்கு ஆளானது. இது வணிகரீதியான வெற்றியைப் பெற்றது, 2009 இல் மிக அதிக வசூல் செய்த படங்களில் ஒன்று ஆகும். இப்படம் தமிழில் ருத்ரம் 2012 என்ற பெயரில் தேனாண்டால் பிலிம்சால் தமிழில் மொழியாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கதை

[தொகு]

படத்தின் கதை 2009 இல் துவங்குகிறது. நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை அறிவியலாளர்கள் அமேரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது. பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார். எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி கட்டடங்கள் பாதியாக பிளப்பது, போன்ற அழிவுகளுக்கு மத்தியில் கதாநாயகள் தன் குடும்பத்தினரையும் மற்றும் சிலரையும் திபெத் பீடபூமிக்கு அழைத்து வருகிறார்.

அங்கு இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்கவென்று உலக நாடுகளால் எந்த இயற்கை சீற்றத்தில் இருந்தும் தப்பும் வகையினான நோவாவின் பேழைழை நினைவூட்டிம் விதமான கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விசயத்தை அதிகார வர்கம் இரகசியமாகவே வைக்கிறது. பேழையில் விலங்குகள் பறவைகள் போன்றவற்றையும் அழிவிலிருந்து காக்க ஏற்றப்பட்டுள்ளன. இதில் ஏற பணக்கார்கள், அதிகார வர்கத்தினர் போன்றோருக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. இதனால் தலைவர்கள் மத்தியில் சர்ச்சைகள் தோன்றுகின்றன. அமேரிக்க அதிபர் இந்நப் பேழையில் ஏற மறுத்து, தன் மக்களிடம் உலக அழிவு குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றி மக்களோடு சேர்ந்து தன் மரணத்தை எதிர்கொள்கிறார். புவியின் அனைத்துப் பகுதிகளையும் விழுங்கிவரும் ஆழிப்பேரலை திபெத் பீடபூமியையும் தாக்குகிறது. பேழை கடல் அலையில் மிதக்கிறது, இதனால் பேழையில் இருப்பவர்கள் மட்டும் உயிர் தப்புகின்றனர். பல நாட்களுக்குப் பிறகு கடல் கொந்தளிப்பு அடங்குவதை செயற்கைக்கோள் தொடர்பினால் அறியும் பேழைவாசிகள் பேழையின் மேற்கதவைத் திறந்துகொண்டு மேலே வந்து சூரிய ஒளியையும், அமைதியானக் கடலையும் காண்கின்றனர். பின்னர் புதிய நிலப்பகுதியை கண்டறியும் கலம் அங்கு சென்றடைகிறது. பழைய நாட்காட்டி முடிந்து 1. 1. 0 என புதிய நாள்காட்டி காட்டி புதிய ஊழி பிறப்பதாக காட்டப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2012". American Film Institute. பார்க்கப்பட்ட நாள் May 6, 2014.
  2. Blair, Ian (November 6, 2013). "'2012's Roland Emmerich: Grilled". The Wrap இம் மூலத்தில் இருந்து November 14, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091114105031/http://www.thewrap.com/article/2012s-roland-emmerich-grilled-9799. பார்த்த நாள்: December 9, 2012. 
  3. "2012 (2009)". பாக்சு ஆபிசு மோசோ. IMDb. Archived from the original on August 20, 2011. பார்க்கப்பட்ட நாள் August 2, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_(திரைப்படம்)&oldid=3670801" இலிருந்து மீள்விக்கப்பட்டது