2011 சிக்கிம் நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 27°43′23″N 88°03′50″E / 27.723°N 88.064°E / 27.723; 88.064
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 சிக்கிம் நிலநடுக்கம்
Epicenter is located in இந்தியா
Epicenter
Epicenter
நிலநடுக்கத்தின் மையப்பகுதியை குறிப்பிடும் வரைபடம்
நாள்18 செப்தெம்பர் 2011
தொடக்க நேரம்18:10 இந்திய சீர் நேரம்
நிலநடுக்க அளவு6.9 Mw
ஆழம்19.7 கிமீ (12.1 மைல்கள்)
நிலநடுக்க மையம்27°43′23″N 88°03′50″E / 27.723°N 88.064°E / 27.723; 88.064
வகைதட்டுப் புவிப்பொறை உள்ளிடை[1]
பாதிக்கப்பட்ட பகுதிகள் இந்தியா
 வங்காளதேசம்
 நேபாளம்
 பூட்டான்
 சீனா
அதிகபட்ச செறிவுமெர்கலி செறிவு ஒப்பளவு VII[2]
ஆழிப்பேரலைஇல்லை
நிலச்சரிவுகள்ஆம்
பின்னதிர்வுகள்ஆம்
உயிரிழப்புகள்குறைந்தது 18 பேர் மரணம்

2011 சிக்கிம் நிலநடுக்கம் ஞாயிறு, செப்டம்பர் 18 2011 அன்று உள்ளூர் நேரம் மாலை 18.10க்கு (12:40 UTC) சிக்கிம்-நேபாள எல்லை அருகில் கஞ்சன்சங்கா மலைப் பகுதியை மையமாகக் கொண்டு உந்தத்திறன் ஒப்பளவு 6.9 அளவிலான சேதம் விளைவித்த நிலநடுக்கமாகும்.[3] இந்த நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா முழுமையும், நேபாளம், பூடான், வங்காளதேசம் மற்றும் தெற்கு திபெத்தில் உணரப்பட்டது. அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் உணரப்பட்ட 4.2 அளவிலான நிலநடுக்கத்திற்கு சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.[4] தவிர, 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த நான்காவது நிலநடுக்கமாகும்.[5]

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 18 பேராவது கொல்லப்பட்டனர்[6]. சிக்கிமில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.[7][8] காங்டாக்கில் பல கட்டிடங்கள் இடிந்தன.[9] நேபாளத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; இவர்களில் காட்மாண்டூவில் பிரித்தானிய தூதரகத்தின் சுற்றுச்சுவர் இடிந்த விழுந்ததில் இறந்த மூவரும் அடக்கம்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Magnitude 6.9 - Sikkim, India: Tectonic Summary". USGS. 2011-09-18. Archived from the original on 2011-09-21. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
  2. "Pager - M 6.9 - Sikkim, India". USGS. 2011-09-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
  3. "Magnitude 6.8 - SIKKIM, INDIA". United States Geological Survey (USGS) இம் மூலத்தில் இருந்து 21 செப்தெம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110921163147/http://earthquake.usgs.gov/earthquakes/recenteqsww/Quakes/usc0005wg6.php. பார்த்த நாள்: 18 September 2011. 
  4. "Very strong earthquake in SIKKIM, India". 18 September 2011. Earthquake-report.com. Archived from the original on 20 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
  5. "Sikkim quake is India's fourth this september". NDTV. 18 September 2011 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121009111455/http://www.ndtv.com/article/india/sikkim-quake-is-indias-fourth-this-september-134548?pfrom=home-bigstory. பார்த்த நாள்: 18 September 2011. 
  6. Strong Quake Kills 18 in India, Nepal, Voice of America, 18 September 2011
  7. 9 killed in Sikkim quake, damage reported பரணிடப்பட்டது 2011-09-19 at the வந்தவழி இயந்திரம், IBN Live, Setpember 18, 2011
  8. Earthquake claims two lives in Sikkim, தி இந்து, September 18, 2011
  9. "Magnitude 6.8 quake in India, several dead". Reuters. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-09-19.
  10. Earthquake kills 5 in Nepal, Daily News and Analysis, September 18, 2011

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_சிக்கிம்_நிலநடுக்கம்&oldid=3914813" இலிருந்து மீள்விக்கப்பட்டது