2011 கஷ்கர் தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2011 கஷ்கர் தாக்குதல்கள்
கஷ்கர் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இடம்கஷ்கர், சிஞ்சியாங், சீனா
நாள்சூலை 30–31, 2011
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பொதுமக்கள்
தாக்குதல்
வகை
சரக்குந்து, கைவினை வெடி குண்டு மற்றும் கத்திக் குத்து
ஆயுதம்வெடிகுண்டுகள், சரக்குந்து, துப்பாக்கிகள், கத்திகள்
இறப்பு(கள்)22 (முதல் நாள்: ஒன்பது, தாக்கியவர் ஒருவர் உட்பட; இரண்டாம் நாள்: 13, ஏழு தாக்கியவர்கள் உட்பட)
காயமடைந்தோர்42 (முதல் நாள்: 27; இரண்டாம் நாள்: 15, மூன்று காவல்துறையினர் உட்பட)
தாக்கியோர்13 உய்குர் ஆட்கள் (முதல் நாள்: 2; இரண்டாம் நாள்: 11)
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
கிழக்கு துருக்கித்தான் இசுலாமிய இயக்கத்தினர்

2011 கஷ்கர் தாக்குதல்கள் எனப்படுவது சீனாவின் சிங்கியாங் மாகாணத்தின் பாலைவனச்சோலை நகரான கஷ்கரில் சூலை 30, 2011 மற்றும் சூலை 31, 2001 நாட்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் கத்திக்குத்து நிகழ்வுகளை குறிப்பதாகும்.

சூலை 30ஆம் நாளன்று இரு உய்குர் நபர்கள் ஓட்டுநரை கொன்று சரக்குந்து ஒன்றினை கைப்பற்றி நடைபாதைக் கூட்டத்தில் வண்டியைச் செலுத்தினர்; பின்னர் வண்டியிலிருந்து கீழிறங்கி ஆறு பேரை கத்தியால் குத்தி கொலைசெய்தும் 27 பேரை காயப்படுத்தியும் தீவிரவாத செயலில் ஈடுபட்டனர். கூட்டத்திலிருந்த மக்களால் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றவர் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சூலை 31 அன்று நகரப்பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் ஒன்றையடுத்து ஒன்றாக இரு வெடிகுண்டுகள் வெடித்தன. ஆயுதம் தாங்கிய உய்குர் குழுவொன்று உணவகத்திற்குள் இருவரைக் கொன்றும் வெளியே நான்கு பேரைக் கொன்றும் 15 பேரை காயப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை ஐயத்திற்கிடமான ஐவரை சுட்டுக் கொன்றது; நான்கு பேரை கைது செய்தது; மேலும் இருவரை தப்பி ஓடும்போது கொன்றது.

அரசுத் தரப்பினர் இந்தத் தாக்குதல்களை ஜிகாதி நோக்கமுடைய கிழக்கு துருக்கித்தான் இசுலாமிய இயக்கத்தினர் நிகழ்த்தியதாக கைதானவர்கள் கூறியதாக அறிவித்தாலும் வெளிநாட்டிலுள்ள உய்குர் விடுதலை இயக்கச் சார்புள்ள குழுவொன்று அரசுக்கெதிரான எதிர்ப்புகளை வன்முறை தவிர்த்த வழிகளில் வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லாமையே இத்தகைய வெளிப்பாடுகள் எனக் கூறியுள்ளது.