2011 எம்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2011 எம்டி
2011 MD
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) லீனியர்
கண்டுபிடிப்பு நாள் சூன் 22, 2011
பெயர்க்குறிப்பினை
சிறு கோள்
பகுப்பு
அப்பல்லோ சிறுகோள்
சூரிய சேய்மை நிலை1.0960வாஅ
சூரிய அண்மை நிலை 1.0160 வாஅ
அரைப்பேரச்சு 1.0560 வாஅ
மையத்தொலைத்தகவு 0.037879
சுற்றுப்பாதை வேகம் 396 நாள் 9 மணி
சராசரி பிறழ்வு 53.223°
சாய்வு 2.449°
Longitude of ascending node 272.368°
Argument of perihelion 4.963°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 10–45 மீட்டர்

2011 எம்டி (2011 MD) என்பது பூமிக்குக் கிட்டவாக, கிட்டத்தட்ட 12,000 கிலோமீட்டர் (7,500 மைல்) தூரத்தில், கடந்து சென்ற ஒரு சிறுகோள் ஆகும். இவை அப்பல்லோ சிறுகோள் வகையைச் சேர்ந்ததாகும். இது 2011 ஆம் ஆண்டு சூன் 27 ஆம் நாள் 17:00 UTC நேரத்துக்கு பூமிக்குக் கிட்டவாக வந்துள்ளது[1][2][3][4].

இவ்விண்கல் பூமியை அணுகும் போது அது சூரியனுக்குக் கிட்டவாக இருப்பதாகவே காணப்பட்டது. இதனால் இதனை சிறிது நேரம் மட்டுமே அவதானிக்க முடிந்தது. ஆனாலும், ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காவில் உள்ள தொலைநோக்கிகளின் மூலம் இதனை அவதானிக்க முடிந்துள்ளது[3]

நியூ மெக்சிக்கோ, சொக்கோரோ என்ற இடத்தில் உள்ள விண்தொலைநோக்கி மூலம் 2011 சூன் 21 ஆம் நாளில் "லிங்கன் பூமியை அணுகும் சிறுகோள்கள் ஆய்வு" (லீனியர்) என்ற நாசா ஆய்வுக்கழகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்டபோது இதனை ஒரு விண்கழிவு என்றே வானியலாளர்கள் கருதிருந்தனர். ஆனாலும் பின்னர் இது ஒரு சிறுகோள் என உறுதி செய்யப்பட்டது[3]. இது ஏறத்தாழ 10 முதல் 45 மீட்டர்கள் (30 முதல் 150 அடி) நீளமானதெனக் கணிக்கப்பட்டுள்ளது[5]

2011 எம்டி பூமியை நோக்கி வந்திருந்தாலும், அது வளிமண்டலத்திலேயே முழுமையாக எரிந்திருக்கும் எனவும், பூமியில் எதுவித சேதத்தையும் ஏற்படுத்தியிருக்காது எனவும் நாசா தெரிவித்துள்ளது[5].

2011 எம்டியின் பாதை[தொகு]

பூமியின் சுற்றுவட்டத் தளத்தில் இருந்தான 2011 எம்டியின் பாதை. இக்கோணத்தில் பார்க்கும் போது, சிறுகோள் பூமியின் கீழாகக் கடந்து செல்கிறது.
சூரியனின் பொதுத் திசையில் இருந்து 2011 எம்டியின் பாதை.

மேற்கோள்கள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
2011 எம்டி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. Don Yeomans & Paul Chodas (June 23, 2011). "Bend it Like Beckham! Small Asteroid to Whip Past Earth on June 27, 2011". நாசா/JPL Near-Earth Object Program Office. மூல முகவரியிலிருந்து ஜூலை 4, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூன் 26, 2011.
  2. NASA JPL. "JPL Small-Body Database Browser (2011 MD)". பார்த்த நாள் சூன் 26, 2011.
  3. 3.0 3.1 3.2 Tony Flanders (June 23, 2011). "Asteroid To Buzz Earth Monday, June 27th". Sky & Telescope observing blog. மூல முகவரியிலிருந்து ஜூன் 27, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூன் 27, 2011.
  4. "Asteroid Just Buzzed Earth—Came Closer Than the Moon".
  5. 5.0 5.1 Paul Sutherland (சூன் 23, 2011). "Incoming! Another asteroid to skim by". Skymania: Astronomy and space guide. மூல முகவரியிலிருந்து 2011-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூன் 26, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_எம்டி&oldid=3230353" இருந்து மீள்விக்கப்பட்டது