2009 செயற்கைக்கோள் மோதல்
2009 செயற்கைக்கோள் மோதல் (2009 Satellite collision) அல்லது 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் என்பது 2009 ஆம் ஆண்டு விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.[1] 2009 பெப்ரவரி 10 ஆம் நாள் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 16:56 க்கு பூமியிலிருந்து 789 கிலோமீட்டர்கள் உயரத்தில் சைபீரியாவின் நேர் மேலே இவ்விபத்து நேர்ந்தது.[2] இவ்விபத்து பூமியின் தாழ் வட்டப்பாதையில் நடந்த ஒன்றாகும்.
விபத்தை ஏற்படுத்தியவை
[தொகு]இரிடியம் 33 (Iridium 33) மற்றும் காச்மாசு-2251 ( Kosmos-2251) ஆகிய செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டன[3][4][5]. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[6][7] இதில் இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ருசியாவிற்குச் சொந்தமானது.
விளைவுகள்
[தொகு]இம்மோதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் சேதமடைந்தன. இதில் காச்மாசு--2251 செயற்கைக் கோளானது ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக் கோள் ஆகும். இரிடியம் 33 செயற்கைக் கோள் பயன்பாட்டில் இருந்தது. காச்மாசு--2251 செயற்கைக் கோள் 1995 லிருந்து பயன்பாட்டில் இல்லை. அமெரிக்காவின் நாசா நிறுவனம் இம்மோதலினால் 10 சென்றிமீட்டர்களுக்கும் அதிகமான 1,000 பொருள்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறின எனத் தெரிவித்துள்ளது.[8] சூலை 2011 ல் அமெரிக்க விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு 2,000 விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தியுள்ளது.[9]
செயற்கைக் கோள்கள்
[தொகு]- கச்மாசு-2251 செயற்கைக் கோள் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தியதி ஏவப்பட்டது. இரண்டு வருடங்களில் 1995 ன் பிறபகுதியில் கைவிடப்பட்டது.இது 950 கிலோகிராம் எடையுடையது. இது ராணுவப் பயன்பாட்டிற்கானது.[10][4]
- இரிடியம் 33 செயற்கைக் கோள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தியதி ஏவப்பட்டது. விபத்தின் போது இது பயன்பாட்டில் இருந்தது. இதன் எடை 560 கிலோகிராம்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Satellite Collision Leaves Significant Debris Clouds" (PDF). Orbital Debris Quarterly News (NASA Orbital Debris Program Office) 13 (2): 1–2. April 2009 இம் மூலத்தில் இருந்து 27 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100527132915/http://orbitaldebris.jsc.nasa.gov/newsletter/pdfs/ODQNv13i2.pdf. பார்த்த நாள்: 20 May 2010. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Collision between Iridium 33 and Cosmos 2251". N2YO இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090216151141/http://n2yo.com/collision-between-two-satellites.php. பார்த்த நாள்: 17 February 2009.
- ↑ McDowell, Jonathan (February 15, 2009). "Jonathan's Space Report No. 606". Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17.
Strela-2M satellites had lifetimes of around 3 years, and Gen. Yakushin of the Military Space Forces was quoted in Moscow Times as saying Kosmos-2251 went out of service in 1995.
- ↑ 4.0 4.1 4.2 Iannotta, Becky (February 22, 2009). "U.S. Satellite Destroyed in Space Collision". Space.com இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090213230913/http://www.space.com/news/090211-satellite-collision.html. பார்த்த நாள்: 12 February 2009.
- ↑ Achenbach, Joel (February 11, 2009). "Debris From Satellites' Collision Said to Pose Small Risk to Space Station". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/02/11/AR2009021103387.html. பார்த்த நாள்: 12 February 2009.
- ↑ Marks, Paul (13 February 2009). "Satellite collision 'more powerful than China's ASAT test". New Scientist இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090216135202/http://newscientist.com/article/dn16604-satellite-collision-more-powerful-than-chinas-asat-test.html. பார்த்த நாள்: 17 February 2009. (putting the collision speed at 42,120 kilometres per hour (11.7 km/s))
- ↑ Matthews, Mark K. (2009-02-13). "Crash imperils satellites that monitor Earth". Orlando Sentinel. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-17. (reporting it as "what amounted to a 26,000 mph [(7.7 miles/sec)] collision").
- ↑ Oleksyn, Veronika (February 19, 2009). "What a mess! Experts ponder space junk problem". Associated Press. http://www.usatoday.com/tech/science/space/2009-02-19-space-junk_N.htm. பார்த்த நாள்: 20 May 2010.
- ↑ "Orbital Debris Quarterly News, July 2011" (PDF). NASA Orbital Debris Program Office. பார்க்கப்பட்ட நாள் 2012-01-01.
- ↑ "First Satellite Collision Called Threat in Space".