2008 கோடை ஒலிம்பிக் பதக்க நிலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Olympic rings.svg 2008 ஒலிம்பிக் போட்டிகள்

2008 கோடை ஒலிம்பிக் பதக்க நிலவரம் என்பது சீனாவில் பெய்ஜிங்கில் இடம்பெற்ற 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை பட்டியல் ஆகும். இப்போட்டிகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெற்றன. கிட்டத்தட்ட 10,500 போட்டியாளர்கள் 28 வகையான விளையாட்டுக்களில் 302 போட்டிகளில் பங்குபற்றினர்[1].

ஆப்கானிஸ்தான்,[2] பாஹ்ரேன்,[3] மொரீசியஸ்,[4] சூடான், தஜிகிஸ்தான்[5], டோகோ[6] ஆகிய நாடுகள் தமது முதலாவது ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றன. சேர்பியா தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தை தனிநாடாகப் பெற்றுக் கொண்டது. இது முன்னர் யூகொஸ்லாவியா அணியில் விளையாடி பதக்கங்களைப் பெற்றிருந்தது[7]. பாஹ்ரேன், மங்கோலியா, பனாமா ஆகியன தமது முதலாவது தங்கப் பதகங்களைப் பெற்றுக் கொண்டன[8]. மொத்தம் 88 நாடுகள் பதக்கங்களைப் பெற்றன. இவற்றில் 55 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றன.

பதக்க நிலவரம்[தொகு]

2008 கோடை ஒலிம்பிக் பதக்கங்களின் பின்புறம்: வெள்ளி (இடது), தங்கம் (நடு), வெண்கலம் (வலது)
பெய்ஜிங்கில் ஒலிப்பிக் விளையாட்டு தொடக்கவிழாவின் பொழுது அரங்கக் காட்சி
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  சீனா 51 21 28 100
2  ஐக்கிய அமெரிக்கா 36 38 36 110
3  உருசியா 22 21 29 72
4  ஐக்கிய இராச்சியம் 19 13 15 47
5  செருமனி 16 10 15 41
6  ஆத்திரேலியா 14 15 17 46
7  தென் கொரியா 13 10 8 31
8  சப்பான் 9 6 10 25
9  இத்தாலி 8 10 10 28
10  பிரான்சு 7 16 17 40
11  உக்ரைன் 7 5 15 27
12  நெதர்லாந்து 7 5 4 16
13  ஜமேக்கா 6 3 2 11
14  எசுப்பானியா 5 10 3 18
15  கென்யா 5 5 4 14
16  பெலருஸ் 4 5 10 19
17  உருமேனியா 4 1 3 8
18  எதியோப்பியா 4 1 2 7
19  கனடா 3 9 6 18
20  போலந்து 3 6 1 10
21  அங்கேரி 3 5 2 10
21  நோர்வே 3 5 2 10
23  பிரேசில் 3 4 9 16
24  செக் குடியரசு 3 3 0 6
25  சிலவாக்கியா 3 2 1 6
26  நியூசிலாந்து 3 1 5 9
27  சியார்சியா 3 0 3 6
28  கியூபா 2 11 11 24
29  கசக்கஸ்தான் 2 4 7 13
30  டென்மார்க் 2 2 3 7
31  மங்கோலியா 2 2 0 4
31  தாய்லாந்து 2 2 0 4
33  வட கொரியா 2 1 3 6
34  அர்கெந்தீனா 2 0 4 6
34  சுவிட்சர்லாந்து 2 0 4 6
36  மெக்சிக்கோ 2 0 1 3
37  பெல்ஜியம் 2 0 0 2
38  துருக்கி 1 4 3 8
39  சிம்பாப்வே 1 3 0 4
40  அசர்பைஜான் 1 2 4 7
41  உஸ்பெகிஸ்தான் 1 2 3 6
42  சுலோவீனியா 1 2 2 5
43  பல்கேரியா 1 1 3 5
43  இந்தோனேசியா 1 1 3 5
45  பின்லாந்து 1 1 2 4
46  லாத்வியா 1 1 1 3
47  டொமினிக்கன் குடியரசு 1 1 0 2
47  எசுத்தோனியா 1 1 0 2
47  போர்த்துகல் 1 1 0 2
50  இந்தியா 1 0 2 3
51  ஈரான் 1 0 1 2
52  பகுரைன் 1 0 0 1
52  கமரூன் 1 0 0 1
52  பனாமா 1 0 0 1
52  தூனிசியா 1 0 0 1
56  சுவீடன் 0 4 1 5
57  குரோவாசியா 0 2 3 5
57  லித்துவேனியா 0 2 3 5
59  கிரேக்க நாடு 0 2 2 4
59  நைஜீரியா 0 2 2 4
61  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0 2 0 2
62  ஆஸ்திரியா 0 1 2 3
62  அயர்லாந்து 0 1 2 3
62  செர்பியா 0 1 2 3
65  அல்ஜீரியா 0 1 1 2
65  பஹமாஸ் 0 1 1 2
65  கொலம்பியா 0 1 1 2
65  கிர்கிசுத்தான் 0 1 1 2
65  மொரோக்கோ 0 1 1 2
65  தாஜிக்ஸ்தான் 0 1 1 2
71  சிலி 0 1 0 1
71  எக்குவடோர் 0 1 0 1
71  ஐசுலாந்து 0 1 0 1
71  மலேசியா 0 1 0 1
71  தென்னாப்பிரிக்கா 0 1 0 1
71  சிங்கப்பூர் 0 1 0 1
71  சூடான் 0 1 0 1
71  வியட்நாம் 0 1 0 1
79  ஆர்மீனியா 0 0 6 6
80 Flag of Chinese Taipei for Olympic games.svg சீனத் தாய்ப்பே 0 0 4 4
81  ஆப்கானித்தான் 0 0 1 1
81  எகிப்து 0 0 1 1
81  இசுரேல் 0 0 1 1
81  மல்தோவா 0 0 1 1
81  மொரிசியசு 0 0 1 1
81  டோகோ 0 0 1 1
81  வெனிசுவேலா 0 0 1 1
மொத்தம் 302 303 353 958

மேற்கோள்கள்[தொகு]