2008 ஒலிம்பிக்கில் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெய்சிங்கில் நடைபெறும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா கலந்துகொண்டது. இப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 56 வீரர்கள் 13 விளையாட்டுகளில் கலந்து கொண்டார்கள். இதில் 16 வீரர்கள் தட கள விளையாட்டுக்களில் பங்கு கொண்டார்கள்.

இதுவே, இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்கள் வென்ற போட்டி ஆகும். 2008 போட்டிகளில் இந்தியா 3 பதக்கங்களைப் பெற்றது. அதிலும் மூன்று பதக்கங்களும் தனி நபர் பிரிவில் கிடைத்துள்ளது புதிய சாதனையாகும்.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு தனி நபர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. அதேபோல குத்துச்சண்டையில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

பதக்க வெற்றியாளர்கள்[தொகு]

பதக்கம் விளையாட்டு வீரர் விளையாட்டு
3Gold medal icon.svg தங்கம் அபினவ் பிந்த்ரா குறி பார்த்துச் சுடுதல்
3Bronze medal icon.svg வெண்கலம் சுசீல் குமார் மற்போர்
3Bronze medal icon.svg வெண்கலம் விஜேந்தர் குமார் குத்துச்சண்டை

சாதனையாளர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]