2004 எஃப்எச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2004 எஃப்எச்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) லிங்கன் புவியருகு சிறுகோள் ஆராய்ச்சி
கண்டுபிடிப்பு நாள் 15 மார்ச் 2004
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்இல்லை
சிறு கோள்
பகுப்பு
அடென் குடும்பத்தை சேர்ந்த சிறுகோள்,
புவியை மிக அருகில் கடந்து சென்ற சிறுகோள்
காலகட்டம்ஜூலை 14, 2004 (ஜூலியன் நாள் 2453200.5)
சூரிய சேய்மை நிலை1.054 வானியல்_அலகு
சூரிய அண்மை நிலை 0.582 வானியல்_அலகு
அரைப்பேரச்சு 0.818 வானியல்_அலகு
மையத்தொலைத்தகவு 0.288
சுற்றுப்பாதை வேகம் 270.192 நாள்
சராசரி சுற்றுப்பாதை வேகம் 32.237 கிமீ/நொடி
சராசரி பிறழ்வு 28.042°
சாய்வு 0.016 62°
Longitude of ascending node 264.432°
Argument of perihelion 62.952°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 30 மீட்டர் விட்டம் [1]
நிறை 2.8×107 கிகி
சுழற்சிக் காலம் 0.05 மணி [2] (3 நிமிடங்கள், 1 வினாடி)
வெப்பநிலை ~308 கெ
விண்மீன் ஒளிர்மை 26.2
2004 எஃப்எச் சிறுகோள் பயணத்தின் போது எடுக்கப்பட்டது.

2004 எஃப்எச் (2004 FH) என்ற புவியருகு விண்பொருள், 15 மார்ச் 2004 ஆம் தேதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விண்பொருள் சுமார் 30 மீட்டர் விட்டம் உடையது. 18 மார்ச் 2004 ஆம் தேதி 22:08 ஒ. ச. நே, புவியின் மேற்பரப்பை 43,000 கிமீ (27,000 மைல்) தொலைவில் கடந்து சென்றது, 21 நவம்பர் 2008 அன்று புவிக்கு மிக அருகாமையில் கடந்து சென்றது அதனால் இது புவியை நெருங்கிய விண்பொருட்கள் பட்டியலில் 11 வது இடத்தைப் பெற்றது.

2004 எஃப்எச், அடென் குடும்பத்தை சேர்ந்த சிறுகோள் ஆகும்.இது புவியை மிக நெருங்கிய 4 வது சிறுகோள் (11வது விண்பொருள்) ஆகும். இந்த விண்பொருள் பூமியின் மீது மோதினால் நூற்றுக்கணக்கான கிலோடன் டிஎன்டி வெடிபொருள் வெடித்தாற் போல இருக்கும்.

17 மார்ச் 2044 ஆம் தேதி, 2004 எஃப்எச் புவியின் மேற்பரப்பை 1,740,000 கிமீ (1,080,000 மைல்) தொலைவில் கடந்து செல்லும்.

2004 எஃப்எச் இன் பயணப்பாதை

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Steven R. Chesley, Paul W. Chodas (March 17, 2004). "Recently Discovered Near-Earth Asteroid Makes Record-breaking Approach to Earth". NASA's Near Earth Object Program Office. மார்ச் 8, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 7, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "JPL Close-Approach Data: (2004 FH)" (last observation: 2004-03-19; arc: 3 days; uncertainty: 3). 2012-03-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2004_எஃப்எச்&oldid=3540083" இருந்து மீள்விக்கப்பட்டது