2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2000 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது 2000ல் ஆத்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடந்த கோடைகால ஒலிம்பிக் ஆகும். இப்போட்டி அதிகாரபூர்வமாக XXVII ஒலிம்பிக் எனப்பட்டது. இப்போட்டிகள் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது. இப்போட்டியை நடத்தியதின் மூலம் இந்த நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக்கை நடத்திய பெருமையை சிட்னி பெற்றது. இப்போட்டிகளுக்கு அண்ணளவாக 6.6பில்லியன் ஆத்திரேலிய டாலர் செலவாகியது. ஆத்திரேலியாவில் நடத்தப்படும் இரண்டாவது ஒலிம்பிக் இதுவாகும். 1956ல் மெல்பேர்ண் நகரில் ஒலிம்பிக் நடந்தது முதல் தடவையாகும்.

199 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இது 1996 போட்டியில் பங்கேற்றதைவிட இரண்டு அதிகமாகும். கிழக்குத் திமோரில் இருந்து நான்கு பேர் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். பலாவு, மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், எரித்திரியா ஆகியவை முதல் முறையாக போட்டியிட்டன. தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டதாலும் விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாலும் ஆப்கானித்தானுக்கு போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மூன்று தங்க பதக்கத்தையும் இரண்டு வெண்கல பதகத்தையும் வென்ற அமெரிக்காவின் மெரியன் சோன்சு தான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக அக்டோபர் 2007ல் அறிவித்து ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை துறந்தார்[1]. ஒலிம்பிக் ஆணையகம் மரியமின் 5 பதக்கங்களையும் அவர் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கத்தையும் பறிக்கப்பட்ட போதிலும் குழுவினர் பதக்கத்தை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது. இறுதியாக அவரின் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. மெரியன் சோன்சு இரண்டு ஆண்டுகளுக்கு போட்டியில் ஈடுபட உலக தடகள அமைப்பால் தடைவிதிக்கப்பட்டார்[2].

2008 ஆகத்து 2 அன்று அன்டானியோ பென்னிகுரோவ் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக தெரிவித்ததால் அமெரிக்க ஆண்கள் 400x4 தொடர் ஓட்ட குழுவின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன[3]. இறுதி ஓட்டத்தில் கலந்துகொண்ட நால்வரில் மூவர் போதை மருந்து உட்கொண்டதாக சோதனையில் தெரியவந்தது. ஆரம்ப ஓட்டத்தில் கலந்து கொண்ட ஆஞ்சலொ தைலரும் உலக சாதனையாளர் மைக்கேல் ஜான்சனும் குற்றம் சாட்டப்படவில்லை[3]. இது மைக்கேல் ஜான்சனுக்கு ஐந்தாவது தங்கமாகும். அன்டானியோவின் கூற்றால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்வதால் இந்த தங்கப்பதக்கத்தை முன்பே தான் திருப்பிதர முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[3]. இப்போட்டியின் தங்கப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.

ஏப்பிரல் 28, 2010 அன்று ஒலிம்பிக் ஆணையகம் சீனாவின் பெண்கள் சீருடற்பயிற்சிகள் அணி பெற்ற வெண்கலப்பதக்கத்தை அப்போட்டியில் அனுமதிக்கப்பட்டதை(16 வயது) விட வயது 2 வயது குறைந்தவரை கொண்டு பெறப்பட்டதால் திரும்ப பெற்றது. அப்பதக்கம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது.[4]

சனவரி 16, 2013ல் ஒலிம்பிக் ஆணையகம் லான்சு ஆம்ஸ்டிராங் மிதிவண்டி போட்டியில் பெற்ற வெண்கலப்பதக்கத்தை அவர் ஏமாற்றி பெற்றார் என்று திரும்ப பெற்றது.[5][6]

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்[தொகு]

1993ம் ஆண்டு மான்டே கார்லோ [7] நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆணையகத்தின் 101வது அமர்வில் 2000வது ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த நடைபெற்ற தேர்தலில் சிட்னி ஒலிம்பிக் போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது.

2000 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[8]
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
சிட்னி  ஆத்திரேலியா 30 30 37 45
பெய்ஜிங்  சீனா 32 37 40 43
மான்செஸ்டர்  ஐக்கிய இராச்சியம் 11 13 11
பெர்லின்  செருமனி 9 9
இசுதான்புல்  துருக்கி 7

பதக்கப் பட்டியல்[தொகு]

மொத்தம் 80 நாடுகள் பதக்கம் பெற்றன,

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 37 24 32 93
2  உருசியா 32 28 29 89
3  சீனா 28 16 14 58
4  ஆத்திரேலியா* 16 25 17 58
5  செருமனி 13 17 26 56
6  பிரான்சு 13 14 11 38
7  இத்தாலி 13 8 13 34
8  நெதர்லாந்து 12 9 4 25
9  கியூபா 11 11 7 29
10  ஐக்கிய இராச்சியம் 11 10 7 28
11  உருமேனியா 11 6 9 26
12  தென் கொரியா 8 10 10 28
13  அங்கேரி 8 6 3 17
14  போலந்து 6 5 3 14
15  சப்பான் 5 8 5 18
16  பல்கேரியா 5 6 2 13
17  கிரேக்க நாடு 4 6 3 13
18  சுவீடன் 4 5 3 12
19  நோர்வே 4 3 3 10
20  எதியோப்பியா 4 1 3 8
21  உக்ரைன் 3 10 10 23
22  கசக்கஸ்தான் 3 4 0 7
23  பெலருஸ் 3 3 11 17
24  கனடா 3 3 8 14
25  எசுப்பானியா 3 3 5 11
26  துருக்கி 3 0 2 5
27  ஈரான் 3 0 1 4
28  செக் குடியரசு 2 3 3 8
29  கென்யா 2 3 2 7
30  டென்மார்க் 2 3 1 6
31  பின்லாந்து 2 1 1 4
32  ஆஸ்திரியா 2 1 0 3
33  லித்துவேனியா 2 0 3 5
34  அசர்பைஜான் 2 0 1 3
34  பஹமாஸ் 2 0 1 3
36  சுலோவீனியா 2 0 0 2
37  சுவிட்சர்லாந்து 1 6 2 9
38  இந்தோனேசியா 1 3 2 6
39  சிலவாக்கியா 1 3 1 5
40  மெக்சிக்கோ 1 2 3 6
41  நைஜீரியா 1 2 0 3
42  அல்ஜீரியா 1 1 3 5
43  உஸ்பெகிஸ்தான் 1 1 2 4
44  லாத்வியா 1 1 1 3
44  யுகோசுலாவியா 1 1 1 3
46  நியூசிலாந்து 1 0 3 4
47  எசுத்தோனியா 1 0 2 3
47  தாய்லாந்து 1 0 2 3
49  குரோவாசியா 1 0 1 2
50  கமரூன் 1 0 0 1
50  கொலம்பியா 1 0 0 1
50  மொசாம்பிக் 1 0 0 1
53  பிரேசில் 0 6 6 12
54  ஜமேக்கா 0 6 3 9
55  பெல்ஜியம் 0 2 3 5
55  தென்னாப்பிரிக்கா 0 2 3 5
57  அர்கெந்தீனா 0 2 2 4
58  சீன தைப்பே 0 1 4 5
58  மொரோக்கோ 0 1 4 5
60  வட கொரியா 0 1 3 4
61  மல்தோவா 0 1 1 2
61  சவூதி அரேபியா 0 1 1 2
61  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0 1 1 2
64  அயர்லாந்து 0 1 0 1
64  உருகுவை 0 1 0 1
64  வியட்நாம் 0 1 0 1
64  இலங்கை 0 1 0 1
68  சியார்சியா 0 0 6 6
69  கோஸ்ட்டா ரிக்கா 0 0 2 2
69  போர்த்துகல் 0 0 2 2
71  ஆர்மீனியா 0 0 1 1
71  பார்படோசு 0 0 1 1
71  சிலி 0 0 1 1
71  ஐசுலாந்து 0 0 1 1
71  இந்தியா 0 0 1 1
71  இசுரேல் 0 0 1 1
71  குவைத் 0 0 1 1
71  கிர்கிசுத்தான் 0 0 1 1
71  மாக்கடோனியக் குடியரசு 0 0 1 1
71  கத்தார் 0 0 1 1
மொத்தம் 300 300 327 927

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jones Returns 2000 Olympic Medals". Channel4.com. Archived from the original on 27 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 8 October 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "IOC strips Jones of all 5 Olympic medals". Associated Press. MSNBC. 12 December 2007 இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080218091719/http://nbcsports.msnbc.com/id/22170098/. பார்த்த நாள்: 12 May 2010.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-02-18. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  3. 3.0 3.1 3.2 Wilson, Stephen (2 August 2008). "IOC strips gold from 2000 US relay team". Associated Press. 
  4. "IOC strips 2000 Games bronze medal from China". USA Today. Associated Press. 28 April 2010 இம் மூலத்தில் இருந்து 1 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100501200758/http://nbcsports.msnbc.com/id/35610686/ns/sports-olympic_sports/. பார்த்த நாள்: 12 May 2010.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  5. "IOC Statement on Lance Armstrong". International Olympic Committee. 17 January 2013.
  6. "Lance Armstrong stripped of Olympic medal, Disgraced cyclist won bronze at the 2000 Sydney Games". 17 January 2013. http://www.independent.co.uk/sport/general/others/lance-armstrong-stripped-of-olympic-medal-8455813.html. 
  7. "IOC Vote History". Archived from the original on 2008-05-25. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
  8. "GamesBids.com Past Olympic Host Cities List". Archived from the original on 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 2011-03-17.