2. தைரியமாக இருங்கள் ~மாஜி மஜி மஜிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தைரியமாக இருங்கள்
எழுத்துஅத்சுஷி மெகாவா
இயக்கம்கத்சுயா வதானபே
ஒளிபரப்பு
அலைவரிசைநிஹான் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்பிப்ரவரி 20, 2005
Chronology
முன்னர்பகுதி-1 புறப்படும் காலை ~மாஜி மஜி மஜிரோ
பின்னர்பகுதி-3 மாய டிராகன் பயணம் ~மாஜி ஜிருமா ஜிங்கா

தைரியமாக இருங்கள் ~மாஜி மஜி மஜிக்கா என்பது மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.

கதைக்கரு[தொகு]

மாய அரக்கன் உல்சார்ட் மியுகி இறந்துவிட்டது போல தோற்றத்தை உருவாக்கிய போது ஹவுகா மற்றும் சுபஸா இருவரும் தங்கள் சோகம் மற்றும் பயத்தை வென்று வீரத்தை வெளிக்கொண்டு வருகின்றனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

உல்சார்ட் தன் குதிரையுடன் சேர்ந்து உல்கென்டரஸாக மாறினான், அங்கு வந்த மியுகி பெரிய உருவம் பெற்று அவனுடன் சண்டையிட்டாள். இறுதியில் உல்சார்ட் மியுகியை தாக்கியபோது அவர் வெடித்துப் பனித்துகள்கள்களாகச் சிதறினார். இதனால் மியுகி இறந்துவிட்டதாக நினைத்த மாய சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு கெய், உராரா மற்றும் மகிடோ ஆகிய மூவரும் சென்று வங்குரியாவுடன் சண்டையிட்டனர். இறுதியில் வங்குரியா அவர்களைத் தூக்கிச் சென்று ப்லாப் என்ற பாசி மகா அரக்கனின் வாயில் போட்டவுடன் அவன் விழுங்கிவிட்டான்.

ஹவுகா மற்றும் சுபஸா இருவரும் வீட்டில் சோகமாக அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு மியுகி ஆவி வடிவத்தில் வந்தார். அவர் மாய அறையில் இருந்த கண்ணாடியில் அவர்களின் தந்தை இசாமு மாய மாவீரனாகப் போரிடுவதைக் காண்பித்தார். பிறகு அவர்களிடம் வீரம் உங்களுக்கு என்றும் உதவும் என்று கூறி மறைந்து விட்டார். பிறகு ஹவுகா மற்றும் சுபஸா இருவரும் எழுச்சி பெற்றனர்.

பிறகு அவர்கள் தைரியமாகச் சென்று ப்லாப்புடன் சண்டையிடுகின்றனர். ஹவுகா தன் மிளகு தாக்குதலைப் பயன்படுத்தினாள். இதனால் ப்லாப் தும்மிய போது அவன் வயிற்றில் இருந்த மூன்று மாய வீரர்களும் விடுதலையாகினர், ஆனால் ப்லாப் மகா அரக்கனாக இருந்ததால் அவனை வீழ்த்த முடியவில்லை. அப்போது மாய வீரர்களுக்கு புதிய வலிமை கிடைத்தது. ஐவரும் மகா வீரர்களாக(மஜின்) மாறி ப்லாப்பை அழித்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]