2-(இருசயனோமெத்திலீன்)குரோக்கோனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-(இருசயனோமெத்திலீன்)-3,5-ஈராக்சோ-1-வளையபென்டீன்-1,2-டையோலேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 26234929 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 139033599 |
| |
| பண்புகள் | |
| C8N2O42− | |
| வாய்ப்பாட்டு எடை | 188.10 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-(இருசயனோமெத்திலீன்)குரோக்கோனேட்டு (2-(Dicyanomethylene)croconate) என்பது C
8N
2O2−
4 அல்லது ((N≡C−)2C=)(C5O4)2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஈரிணைதிற எதிர்மின் அயனியாகும். போலி-ஆக்சோகார்பன் எதிர்மின் அயனிகளில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் ஓர் ஆக்சிசன் அணுவை இருசயனோமெத்திலீன் குழு =C(−C≡N)2 ஆல் மாற்றுவதன் மூலம் குரோக்கோனேட்டு ஆக்சோகார்பன் எதிர்மின் அயனி C
5O2−
5 இன் வழிப்பெறுதியாக விவரிக்கப்படுகிறது.
1980 ஆம் ஆண்டு ஏ. பாடியாடி என்பவரால் இந்த எதிர்மின் அயனி ஒருங்கிணைக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டது. குரோக்கோனேட்டு ஊதாவை பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்த்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இது வகைப்படுத்தப்பட்டது.[1] தண்ணீருடன் ஓர் ஆரஞ்சு நிறக் கரைசலைத் தருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alexander J. Fatiadi (1980), "Pseudooxocarbons. Synthesis of 1,2,3-tris(dicyanomethylene)croconate salts. A new bond-delocalized dianion, croconate blue". Journal of Organic Chemistry volume 45, pages 1338–1339. எஆசு:10.1021/jo01295a044