2-புரோமோபுரோப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2-புரோமோபுரோப்பேன்
Skeletal formula of 2-bromopropane
Skeletal formula of 2-bromopropane with all explicit hydrogens added
Ball and stick model of 2-bromopropane
Spacefill model of 2-bromopropane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோபுரோப்பேன்[2]
வேறு பெயர்கள்
ஐசோபுரோப்பைல் புரோமைடு[1]
இனங்காட்டிகள்
75-26-3 Yes check.svgY
Beilstein Reference
741852
ChEMBL ChEMBL451810 Yes check.svgY
ChemSpider 6118 Yes check.svgY
EC number 200-855-1
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 2-புரோமோபுரோப்பேன்
பப்கெம் 6358
வே.ந.வி.ப எண் TX4111000
UN number 2344
பண்புகள்
C3H7Br
வாய்ப்பாட்டு எடை 122.99 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.31 கி மி.லி −1
உருகுநிலை
கொதிநிலை 59 முதல் 61 °C; 138 முதல் 142 °F; 332 முதல் 334 K
3.2 கி லி−1 (20 °செ) இல்
மட. P 2.136
ஆவியமுக்கம் 32 கிலோபாசுக்கல்( 20 °செ) இல்
1.0 μமோல் பாசுக்கல்−1 மோல்−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4251
பிசுக்குமை 4.894 மெகா பாசுக்கல்( 20 °செ) இல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−129 கிலோ யூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.0537–−2.0501 மெகாயூல் மோல் −1
வெப்பக் கொண்மை, C 135.6 யூ கெ மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H360, H373
P210, P308+313
தீப்பற்றும் வெப்பநிலை 19 °C (66 °F; 292 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2-புரோமோபுரோப்பேன் (2-Bromopropane) என்பது CH3CHBrCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோபுரோப்பைல் புரோமைடு, 2-புரோப்பைல் புரோமைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஆலசனேற்றம் செய்யப்பட்ட ஒரு நீரகக் கரிமமாக இதை வகைப் படுத்துகிறார்கள். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளில் ஐசோபுரோப்பைல் வேதி வினைக்குழுவை அறிமுகப்படுத்த வேதிவினைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஐசோபுரோப்பேனாலுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து சூடு படுத்தி 2-புரோமோபுரோப்பேன் தயாரிக்கப்படுகிறது[3].

தயாரிப்பு[தொகு]

ஆல்க்கைல் புரோமைடுகளிலிருந்து சாதாரண வேதிவினை முறையில் 2-புரோமோபுரோப்பேன் தயாரிக்கப்படுகிறது. ஐசோபுரோப்பனாலுடன் பாசுபரசு மற்றும் புரோமின் சேர்த்து வினைபுரியச் செய்து 2-புரோமோபுரோப்பேன் தயாரிக்கப்படுகிறது[4]. பாசுபரசு டிரைபுரோமைடை ஐசோபுரோப்பனாலுடன் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்[5].

வினைகள்[தொகு]

புரோமின் அணு இரண்டாம் நிலையில் இருப்பதால் அது மூலக்கூறை எளிமையாக ஐதரோ ஆலைடு நீக்கத்திற்கு அனுமதிக்கிறது. எனவே புரோப்பீன் உருவாகி ஒரு வாயுவாக வெளியேறுகிறது. இதன் விளைவாக இவ்வினைப்பொருளை வலிமையான காரங்களை விலக்கி பொட்டாசியம் கார்பனேட்டு போன்ற மிதமான காரங்களுடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள்.

முன்பாதுகாப்பு[தொகு]

பொதுவாகவே ஆல்கைலேற்றும் முகவர்கள் புற்றுநோய் ஊக்கிகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilfred L.F. Armarego and Christina Li Lin Chai, Purification of laboratory chemicals, 7th edition, Butterworth-Heinemann, 2013, p. 176
  2. "2-bromopropane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (27 March 2005). பார்த்த நாள் 15 June 2012.
  3. Merck Index of Chemicals and Drugs, 9th ed. Monograph 5071
  4. Oliver Kamm and C. S. Marvel (1941). "Alkyl and alkylene bromides". Organic Syntheses. ; Collective Volume, 1, p. 25
  5. C. R. Noller and R. Dinsmore (1943). "Isobutyl bromide". Organic Syntheses. ; Collective Volume, 2, p. 358
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-புரோமோபுரோப்பேன்&oldid=2656996" இருந்து மீள்விக்கப்பட்டது