2-நைட்ரோபுரோப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-நைட்ரோபுரோப்பேன்
2-Nitropropane.svg
2-Nitropropane Ball and Stick.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-நைட்ரோபுரோப்பேன்
இனங்காட்டிகள்
79-46-9
Abbreviations 2-NP
ChEBI CHEBI:16037
ChemSpider 387
EC number 201-209-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 398
பண்புகள்
C3H7NO2
வாய்ப்பாட்டு எடை 89.09 g·mol−1
தோற்றம் நிரமற்ற நீர்மம்[1]
மணம் இனிய பழமணம்[2]
அடர்த்தி 0.9821 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 120.2 °C (248.4 °F; 393.3 K)
17 கி/லி[1]
கரைதிறன் குளோரோஃபார்மில் கரையும்
மட. P 0.93
ஆவியமுக்கம் 13 மிமீபாதரசம் (20°செ)[2]
காடித்தன்மை எண் (pKa) 7.68
-45.73·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3944 (20 °செ)
பிசுக்குமை 0.721 cP
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் சுகாதாரக் கேடு
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
H350
தீப்பற்றும் வெப்பநிலை 24 °C (75 °F; 297 K) (திறந்த கோப்பை)
39 °செ (மூடிய கோப்பை)
Autoignition
temperature
428 °C (802 °F; 701 K)
வெடிபொருள் வரம்புகள் 2.6-11.0%[2]
Lethal dose or concentration (LD, LC):
720 மி.கி/கி,கி
மில்லியனுக்கு 2703 பகுதிகள் (சுண்டெலி, 2 மணீ)
மில்லியனுக்கு 400 பகுதிகள் (எலி, 6 மணி)[3]
மில்லியனுக்கு 714 பகுதிகள் (பூனை, 5 மணி)
மில்லியனுக்கு 2381 பகுதிகள் (முயல், 5 மணி)
மில்லியனுக்கு 4622 பகுதிகள் (கினியா பன்றி, 5 மணி)
மில்லியனுக்கு 2353 பகுதிகள் (cat, 1 மணி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 25 பகுதிகள் (90 mg/m3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[2]
உடனடி அபாயம்
Ca [100 பகுதிகள்][2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-நைட்ரோபுரோப்பேன் (2-Nitropropane) என்பது C3H7NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் ஒரு கரைப்பானாகும். இச்சேர்மம் நைட்ரோசேர்மம் என்ற வகையைச் சார்ந்ததாகும்.

தயாரிப்பு[தொகு]

புரோப்பேனானது உயர்வெப்பநிலையில் வாயு நிலையில் நைட்ரோஏற்றம் செய்யப்படும்போது, 2-நைட்ரோபுரோப்பேன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக இதனுடன் 1-நைட்ரோபுரோப்பேன் ஒரு மாசாக கலந்து காணப்படும். லியோனார்டின் வளையம்-மூடல் ஐடன்டோயின் தயாரிக்கையில் ஆவியாகும் உடன்விளைபொருளாகவும் 2-நைட்ரோபுரோப்பேன் உருவாகிறது[4].

பயன்கள்[தொகு]

ஒரு கரைப்பானாகவும் இடைநிலை வேதிப் பொருளாகவும் 2-நைட்ரோபுரோப்பேன் பயன்படுத்தப்படுகிறது[5]. மைகள், வண்ணங்கள், ஒட்டும்பசைகள், மிளிரிகள், பலபடிகள், பிசின்கள், எரிபொருள், மற்றும் மேற்பூச்சுகள் போன்றவற்றில் 2-நைட்ரோபுரோப்பேன் பயன்படுகிறது[5]. குளோர்பென்டெர்மின், பென்டெர்மின், டெக்ளோசான் போன்ற சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க 2-நைட்ரோபுரோப்பேன் பயன்படுகிறது.

முன்பாதுகாப்பு[தொகு]

புகையிலை புகையின் பகுதிப் பொருளாக 2-நைட்ரோபுரோப்பேன் உள்ளது [6]. விலங்குகளில் பரிசோதித்ததின் அடிப்படையில் நோக்கினால் மனிதர்களுக்கும் புற்றுநோயைத் தரும் வல்லமை இதற்கு உண்டு [5]. 2பி குழு புற்றுநோய் ஊக்கி என இதை வகைப்படுத்துகிறார்கள் [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0460". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 "2-Nitropropane". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. M. J. Leonard; A. R. Lingham; J. O. Niere; N. R. C. Jackson; P. G. McKay; H. M. Hϋgel (6 Mar 2014). "Alternative synthesis of the anti-baldness compound RU58841". RSC Advances 4: 14143–14148. doi:10.1039/c4ra00332b. 
  5. 5.0 5.1 5.2 Report on Carcinogens (Twelfth ). National Toxicology Program, Department of Health and Human Services. 2011. http://ntp.niehs.nih.gov/ntp/roc/twelfth/profiles/Nitropropane.pdf. பார்த்த நாள்: 2012-06-13. 
  6. Talhout, Reinskje; Schulz, Thomas; Florek, Ewa; Van Benthem, Jan; Wester, Piet; Opperhuizen, Antoon (2011). "Hazardous Compounds in Tobacco Smoke". International Journal of Environmental Research and Public Health 8 (12): 613–628. doi:10.3390/ijerph8020613. பன்னாட்டுத் தர தொடர் எண்:1660-4601. பப்மெட்:21556207. 
  7. "Agents Classified by the IARC Monographs" (PDF). 2011-10-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2019-02-14 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-நைட்ரோபுரோப்பேன்&oldid=3540074" இருந்து மீள்விக்கப்பட்டது