2-குளோரோ-மெட்டா-கிரெசால்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-3-மெத்தில்பீனால் | |
வேறு பெயர்கள்
2-குளோரோ-ஐதராக்சிதொலுவீன்; 2-குளோரோ-மெ-கிரெசால்
| |
இனங்காட்டிகள் | |
608-26-4 | |
ChemSpider | 14162 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14852 |
| |
பண்புகள் | |
C7H7ClO | |
வாய்ப்பாட்டு எடை | 142.5829 |
அடர்த்தி | 1.228 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 78.1 °C (172.6 °F; 351.2 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-குளோரோ-மெட்டா-கிரெசால் (2-Chloro-m-cresol) என்ற கரிமச் சேர்மம் C7H7ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. குளோரினேற்றம் பெற்ற கிரெசால் சேர்மமான இதை தயாரிப்பது மிகுந்த சிரமமாகும். ஏனெனில் மெட்டா-கிரெசாலை குளோரினேற்றம் செய்தால் 4-குளோரோ-3-மெத்தில் பீனால் என்ற பாரா வகை விளைபொருளே உருவாகிறது. வரலாற்றில் பாரா கிரெசாலை தெரிவுசெய்யப்பட்ட நைட்ரோயேற்றம் செய்து தொடர்ந்து அதை ஈரசோனியம் சேர்மமாக மாற்றி குளோரினை இரண்டாம் நிலையில் இருத்துவதற்காக சேண்டுமேயர் வினைக்கு உட்படுத்தியே 2-குளோரோ-மெட்டா-கிரெசால் தயாரிக்கப்பட்டுள்ளது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Huston, Ralph C.; Chen, Philip S. (October 1933). "The Chloro Derivatives of m-Cresol". Journal of the American Chemical Society 55 (10): 4214–4218. doi:10.1021/ja01337a056.